Published:Updated:

`வேலைக்கு வரலைன்னா அடி உதை!’ - வடமாநிலத் தொழிலாளர்களை வதைக்கும் பஞ்சாலைகள்

`வேலைக்கு வரலைன்னா அடி உதை!’ - வடமாநிலத் தொழிலாளர்களை வதைக்கும் பஞ்சாலைகள்
News
`வேலைக்கு வரலைன்னா அடி உதை!’ - வடமாநிலத் தொழிலாளர்களை வதைக்கும் பஞ்சாலைகள்

`வேலைக்கு வரலைன்னா அடி உதை!’ - வடமாநிலத் தொழிலாளர்களை வதைக்கும் பஞ்சாலைகள்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் அதிக அளவு பஞ்சாலைகள் இயங்குகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு சுமங்கலி திட்டம் என்ற பெயரில் பெண்களை பணியில் அமர்த்தினார்கள். ராமநாதபுரம், சிவகங்கை போன்ற வறட்சியான மாவட்டங்களில் இருந்தது ஏழ்மையான குடும்ப பெண்களை அழைத்து வந்து பணியில் அமர்த்தினார்கள். அவர்களுக்கு ஆலைக்குள்ளேயே விடுதி வசதி ஏற்படுத்திக் கொடுத்தார்கள். ஒரு கட்டத்தில் பணியிடத்தில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகளவில் நடந்தது. இதனால் சுமங்கலி திட்டத்தைக் கைவிட்ட ஆலை நிர்வாகிகள் ஒப்பந்த அடிப்படையில் வடமாநில தொழிலாளர்களை அழைத்து வந்து பணியில் அமர்த்தி வருகிறார்கள். 

`வேலைக்கு வரலைன்னா அடி உதை!’ - வடமாநிலத் தொழிலாளர்களை வதைக்கும் பஞ்சாலைகள்

கோப்புப்படம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
`வேலைக்கு வரலைன்னா அடி உதை!’ - வடமாநிலத் தொழிலாளர்களை வதைக்கும் பஞ்சாலைகள்

 வடமாநில தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் தருவதில்லை. அதிக நேரம் வேலை வாங்குகிறார்கள் தங்குமிடம் மற்றும் உணவு சரியாக கொடுப்பதில்லை எனத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டியில் ஒரு தனியார் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கே ஒடிசா மாநிலம் மதுரக் மாவட்டம் பாசுதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் குடும்பத்துடன் தங்கி இருக்கிறார். இவர்களை ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள செயல்படாத தொழிற்சாலையில் ஒருநாள் தங்க வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று பகலில் பணியாற்றிய தொழிலாளர்கள், இரவு நேரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது, ஆலையில் தொழிலாளர்கள் தட்டுப்பாடு ஏற்படவே தொழிற்சாலை சூப்பர்வைசர் ஒருவர், இரவு நேரத்தில் வந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த தொழிலாளர்களைப் பணிக்கு வருமாறு அழைத்திருக்கிறார். அதற்குத் தொழிலாளர்கள் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த சூப்பர்வைசர், தொழிலாளர்களைக் கடுமையாக தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இதில் ஆஷா என்ற சிறுமி உட்பட 12 பேர் காயமடைந்தனர். தாக்குதலால் பயந்து போய் தொழிலாளர்கள் போட்ட கூச்சலில் அருகிலுள்ள கிராம மக்கள் கூடிவிட்டனர். இதனால் பிரச்னையை மூடிமறைக்க நினைத்த ஆலை நிர்வாகம், தொழிலாளர்களைப் பணம் கொடுத்து சமாதானப்படுத்தியதாக சொல்கிறார்கள்.  

இது தொடர்பாக நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் ஒருவர்,``மில்லுங்கதான் இந்த பக்கம் முக்கிய வாழ்வாதாரம். ஆனா, இப்ப ஒடிசா, பீகார்னு வடமாநிலத்துல இருந்து குடும்பத்தோட ஆளுங்களை கூப்பிட்டு வந்து தங்க வச்சிக்கிறாங்க. நம்ம ஆட்களை விட அவங்களுக்கு குறைந்த சம்பளம் கொடுத்தாப் போதும். பன்னென்டு மணி நேரம் வேலை வாங்குவாங்க. பாஷை தெரியாததால அவங்களும், எதிர்த்துக் கேட்க முடியாது. மீறி கேட்டா அடிச்சு கஷ்டப்படுத்துறாங்க. இங்க தங்கி இருக்கிற வடமாநிலத் தொழிலாளர்கள்ல பலபேர் சொல்லாம கொள்ளாம ஓடிபோயிடுவாங்க. இல்லன்னா தப்பிச்சு ஊரு பக்கம் போயிடுவாங்க. இங்கு இருக்கக்கூடிய பஞ்சாலைகளில் கொத்தடிமைத்தனம் அதிகமா இருக்கு. இது அதிகாரிகளுக்கும் தெரியும். ஆனால் யாரும் நடவடிக்கை எடுக்குறதில்லை. பாதிக்கப்பட்டவங்க போலீஸ் ஸ்டேஷன் போனாலும் புகார் வாங்க மாட்டாங்க. இதை விடக் கொடுமை, இந்த பகுதியில இருக்கிற சில செய்தியாளர்களும் மில் முதலாளிகளுக்கு ஆதரவாக இருக்கிறாங்க. அதனால, தொழிலாளர்களுடைய உண்மையான நிலை வெளியுலகத்துக்கு தெரிய மாட்டேங்குது. வடமாநிலத்தைச் சேர்ந்தவங்களா இருந்தாலும் அவங்களும் மனுஷங்கதானே?. இங்கே நடக்கக்கூடிய மிகப்பெரிய மனித உரிமை மீறலை விகடன்தான் வெளியே கொண்டு வரணும்'' என்றார்.

பஞ்சாலைகளில் வடமாநில தொழிலாளர்கள் கொத்தடிமை ஆளாக்கப்படும் கொடுமை வேடசந்தூர் பகுதியில் அதிகளவில் நடந்து வருகிறது. அரசு உடனடியாக ஒரு குழுவை அமைத்து இந்த பகுதியில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும் மனித உரிமை ஆணையம் இதில் தலையிட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.