Published:Updated:

இந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்!

இந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்!
இந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்!

ந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடும் கன்டெய்னர் கப்பல் ரவீந்திரநாத் கொல்கத்தாவிலிருந்து வாரணாசி வந்தடைந்தது. 

கங்கை நதியில் (தேசிய நீர் வழிப்பாதை -1) இயக்கப்படும் இந்தக் கப்பல் பெப்சி நிறுவனத்துக்குச் சொந்தமான 16 கன்டெய்னர்களை கொல்கத்தாவிலிருந்து வாரணாசிக்குச் சுமந்து வருகிறது. கொல்கத்தாவில்  புறப்பட்டக் கப்பல் 10 நாள்களுக்கு பிறகு வாரணாசி வந்தடைந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் உள்நாட்டு நீர் வழியில் தொடங்கப்பட்ட முதல் கன்டெய்னர் போக்குவரத்து இதுவாகும். திரும்பும் வழியில் அலகாபாத்தில் உள்ள IFFCO நிறுவனத்திலிருந்து உரப் பொருள்களை ஏற்றிக் கொண்டு ரவீந்திரநாத் கொல்கத்தா செல்லும் ஹால்டியாவில் (கொல்கத்தா) இருந்து பிரயாக்ராஜ் என்று அழைக்கப்படும் அலகாபாத் 1,620 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

இதற்காக அலகாபாத்திலிருந்து ஹால்டியா வரை கிலோமீட்டர் நீர்வழிப்பாதையை உலக வங்கியின் உதவியுடன் ரூ.5,369 மதிப்பீட்டில் மத்திய அரசு மேம்படுத்தியுள்ளது. சரக்குகள் கையாளும் முனையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. ரவீந்திரநாத் கப்பல்போல 12 கன்டெய்னர் கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்திய தேசிய வழிப் பாதை -2 என்று அழைக்கப்படும் பிரம்மபுத்திரா நதி பாதையை கங்கை நதி பாதையுடன் இணைக்கும் பணியும் நிறைவடைந்துள்ளது. இதுபோன்று நாட்டில் ஓடும் 100 நதிகளில் தேசிய நீர்வழிப் பாதை அமைக்கப்படுகிறது. 

இது குறித்து மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், ``மூன்று ஆண்டுகளில் தேசிய நீர்வழிப் பாதை - 1 வழியாக 21.89 மில்லியன் டன் சரக்குகள் கையாளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.30 லட்சம் முதல்  ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. பெரிய அளவில் சரக்குகள் அதாவது 350 கார்களை சுமந்து செல்லும் வகையில் 2,500 டன் கொள்ளளவு கொண்ட கப்பல்களும் கட்டப்பட்டுள்ளன. இதற்காக உள்நாட்டு நீர்வழி மேம்பாட்டு ஆணையத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது'' என்று கூறினார்.