Published:Updated:

காதல்... மேலும் காதல்

காதல்... மேலும் காதல்
பிரீமியம் ஸ்டோரி
காதல்... மேலும் காதல்

போட்டோகிராபிகுணவதி

காதல்... மேலும் காதல்

போட்டோகிராபிகுணவதி

Published:Updated:
காதல்... மேலும் காதல்
பிரீமியம் ஸ்டோரி
காதல்... மேலும் காதல்

திருமணத்துக்காகச் செய்யப்படும் செலவுகளுக்கு நிகராக, திருமணத்துக்கு முன்னரும் பின்னரும் என `கப்புள் ஷூட்’ புகைப்படங்கள் எடுப்பதற்கும் செலவிடப்படுகிறது. இதுமட்டுமல்ல, திருமணத்துக்குப் பிறகும் ப்ரீ பிரிக்னென்சி ஷூட், ஆஃப்டர் பேபி ஷூட் என இந்த போட்டோகிராபி கொண்டாட்டம் நிற்பதேயில்லை. பெங்களூருவைச் சேர்ந்த தீபக் விஜய், கப்புள் ஷூட்டில் புகைப்படங்கள் எடுப்பதில் கில்லி. ராஜஸ்தானிலுள்ள உதய்பூரில் ஒரு திருமண ஷூட்டில் பிஸியாக இருந்தவரிடம் பேசினோம்.

காதல்... மேலும் காதல்

``கப்புள் ஷூட் போட்டோகிராபியில் எப்படி உங்களால இந்த அளவுக்கு ஜொலிக்க முடியுது?’’

``காஸ்டியூம்ஸ், தீம்ஸ், செட் எல்லாவற்றையுமே மணமக்களுக்கு கெமிஸ்ட்ரி செட் ஆன பிறகுதான் முடிவு பண்ணுவேன். பெரியவர்கள் நிச்சயித்த திருமணமா, காதல் திருமணமா, மணமகனுக்கும் மணமகளுக்கும் எவ்வளவு புரிதல் இருக்கு, இயல்பா இருப்பாங்களா அல்லது ரொம்பவும் கூச்ச சுபாவத்தோடு இருப்பாங்களான்னு கிட்டத்தட்ட ஓர் ஆராய்ச்சியே நடத்திடுவேன். இந்த கெமிஸ்ட்ரி தெரிஞ்சாலே போதும், படங்கள் நல்லா வரும்னு ஐம்பது பர்சன்ட் நம்பிக்கை கொண்டுவந்துடலாம். ஏன்னா, மணமக்களோட அன்புதான் கப்புள்ஷூட்டுக்கு ஆன்மா. திருமணப் புகைப்படங்களோ, கப்புள் ஷூட்டோ, ஒருமுறை  நாங்க பண்ற கான்செப்டைத் திரும்பவும் பண்றதில்லை. ஒவ்வொரு முறையும் புதிய வண்ணங்களோடும், பின்புலத்தோடும்தான் இதை நாங்க செய்றோம். எங்க தீம் ஆர்ட்டிஸ்ட், நான் மனசுல நினைக்கிறதை அப்படியே நிஜத்துல கொண்டுவந்துடுவார்!’’

காதல்... மேலும் காதல்

``கப்புள் ஷூட் போட்டோகிராபியில் உங்களுக்கு யார் இன்ஸ்பிரேஷன்?’’

``காதல்தான்! குறிப்பிட்ட ஒரு போட்டோ கிராபரைப் பார்த்து அப்படியே காப்பி பண்ணணும்னு நான் நினைச்சதில்லை. காதலர்களுடைய புகைப்படங்களும் தம்பதியின் புகைப்படங்களும் அவங்களுடைய கம்ஃபர்ட்டை பொறுத்து அமையறதுதான். புகைப்படம் எடுக்கும் திறமையைப் பயன்படுத்தி, அவங்களுடைய அன்பை இன்னும் கொஞ்சம் அழகாக்கலாம். மணமக்களின் அன்புதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவங்களுடைய அழகான, மறக்க முடியாத நிமிடத்தை யெல்லாம் அப்படியே ஸ்டில்லாக்கணும்னு நினைப்பேன்.’’

காதல்... மேலும் காதல்
காதல்... மேலும் காதல்

``திருமணத்துக்கு முன்னாடி, திருமணப் புகைப்படங்களுக்காக உங்களை அணுகிறவங்களுக்கு என்ன டிப்ஸ் கொடுப்பீங்க?’’

``நிறைய காதலிக்கச் சொல்வேன். போஸ் கொடுக்கணும்னு கவனமா இருக்காம, நேச்சுரல் போஸர்ஸா இருங்கன்னு சொல்வேன்.’’

``எதிர்காலத் திட்டம் என்ன?’’

``நான் எம்.எஃப்.ஏ படிச்சேன். ஓவியங்கள் வரைவதுதான் என் வாழ்க்கையா இருந்தது. என்னுடைய ஓவியங்களையெல்லாம் போட்டோ எடுக்கிறதுக்காகத்தான் கேமராவே வாங்கினேன். எட்டு வருஷத்துக்கு முன்னாடி 80 ஆயிரம் ரூபாய் எவ்வளவு பெரிய பணம்! ஆனா, அப்பவே 60D கேமரா வாங்கினேன். ஆரம்பத்துல விளையாட்டா தொடங்கி, என் ஓவியங்களை மட்டும் புகைப்படம் எடுத்துச் சேமிச்சேன். பிறகு, போட்டோகிராபிலயும் ஆர்வம் வந்து, அதையே தொழிலாக மாற்றினேன். இப்போ எல்லாமே டிஜிட்டல் பெயின்ட்டிங்கா மாறிட்டு வருது. கையால ஓவியம் வரையுறது ரொம்பவே குறைஞ்சுப்போச்சு. ஓவியங்களையும் என் ஷூட்ல பயன்படுத்த ணும்னு ஆர்வமிருக்கு. அதனால, இனிமே எடுக்கப்போற கப்புள் ஷூட்ல பேக்ரவுண்டு வேலைகளுக்கு என்னுடைய ஓவியங்களையும் பிளேஸ் பண்ணப் போறேன்!’’

காதல்... மேலும் காதல்

``இந்த மாதிரியான தீம் போட்டோ கிராபிக்கு வரவேற்பு எப்படியிருக்கு?’’

``பெங்களூரு, மும்பை மாதிரி நகரங்களில் பெரிய டிமாண்ட் இருக்கு. நிறைய செலவு பண்ணத் தயாரா இருக்கிறவங்க (ரூ.25 லட்சம் வரை) ஒரு பிரிவு. இன்னொரு டைப் மணமக்கள் எப்படின்னா, ஒரு டெம்ப்ளேட்டோடு வருவாங்க. அதை மட்டும் செஞ்சுக் கொடுத்தா போதும்னு நினைப்பாங்க. மணமக்களின் விருப்பத்தைக் கேட்டுத் தெரிஞ்சுப்பேன். ஷூட் செய்யும்போது எனக்கான சுதந்திரத்தை எடுத்து அவங்க திருப்தியாகிற அளவுக்கு பெஸ்ட்  ரிசல்ட் கொடுப்பேன்.’’

காதல்... மேலும் காதல்

``மறக்க முடியாத ஷூட் சம்பவங்கள் பற்றிச் சொல்லுங்க...’’

``தாய்லாந்து புக்கெட் தீவுகள்ல பண்ணிய கப்புள் ஷூட் மறக்க முடியாதது. அவ்வளவு அழகான இடத்துல, அந்த மணமக்களுடைய முக்கியமான தருணங்களைப் புகைப்படங்கள் எடுத்ததில் நிறைய நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன். அப்புறம், பிரைவேட் ஜெட், ரோல்ஸ் ராய்ஸ் கார் பின்னணியில் செய்த கப்புள்ஷூட். ரெண்டு மணி நேரத்துக்கு ரன்வேவையும் ஜெட்டையும் பயன்படுத்திக்கிட்டோம். பெரிய முயற்சிக்குப் பிறகு நடந்த அந்த விஷயம் மறக்கவே முடியாதது.’’

கேமரா காதல் வளர வாழ்த்துகள்!