Published:Updated:

Big day - வெடிங் ப்ளான் - அனுபவங்கள் பேசுகின்றன!

Big day - வெடிங் ப்ளான் - அனுபவங்கள் பேசுகின்றன!
பிரீமியம் ஸ்டோரி
Big day - வெடிங் ப்ளான் - அனுபவங்கள் பேசுகின்றன!

ஆ.சாந்தி கணேஷ், படங்கள்: அசோக் அர்ஸ்

Big day - வெடிங் ப்ளான் - அனுபவங்கள் பேசுகின்றன!

ஆ.சாந்தி கணேஷ், படங்கள்: அசோக் அர்ஸ்

Published:Updated:
Big day - வெடிங் ப்ளான் - அனுபவங்கள் பேசுகின்றன!
பிரீமியம் ஸ்டோரி
Big day - வெடிங் ப்ளான் - அனுபவங்கள் பேசுகின்றன!

னதின் ஆணி வேர் வரை பெண்களைச் சிலிர்க்கவைக்கிற தருணம், அவர்களின் திருமணம். அந்த சாக்லேட் தருணத்துக்குள் அவர்கள் நுழைவதற்கு முன், ‘ரிசப்ஷன்ல கட்டப்போற டிசைனர் புடவைக்கு என்ன பட்ஜெட்?’, ‘மேட்சிங்கா ஆர்ட்டிஃபீஷியல் ஜுவல்ஸ் எங்கே வாங்கறது?’, ‘போட்டோவுக்கு இந்த கலர் புடவை எடுப்பா இருக்குமா?’, ‘ஹனிமூனுக்கு எங்கே போகலாம்?’ என மனம் நிறைய கேள்விகளும் குழப்பங்களும் அலையடித்துக்கொண்டே இருக்கும். இந்த வெடிங் ப்ளான்களை எல்லாம் எப்படிச் செய்தார்கள், என்னவெல்லாம் சமாளித்தார்கள் என நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள் இந்தப் புதுமணப் பெண்கள். பயனுள்ள அவர்களின் அனுபவங்களை, எதிர்கால மணப்பெண்கள் நோட் டவுன் ப்ளீஸ்!

Big day - வெடிங் ப்ளான் - அனுபவங்கள் பேசுகின்றன!

வீடியோ காலில் முகூர்த்தப் புடவையை செலக்ட் பண்ணினேன்!

நந்தினி (பயோ டெக்னாலஜிஸ்ட், அமெரிக்கா)


‘`நான் அமெரிக்காவுல இருக்க... சென்னையில எனக்குக் கல்யாண ஏற்பாடுகள் பண்ணிக்கிட்டிருந்தாங்க. வீடியோ காலில்தான் முகூர்த்தப் புடவையையே செலக்ட் பண்ணேன்னா பார்த்துக்கோங்க! புடவை விஷயத்துல ஒரு டிப் சொல்லணும். காஞ்சிபுரத்துக்கே போய் எடுத்தா, பட்டுப்புடவை பட்ஜெட்டைக் கணிசமா குறைக்கலாம். உதாரணமா, சென்னையில் பெரிய கடைகள்ல 27 ஆயிரம் ரூபாய் விலையுள்ள ஒன்பது கஜம் முகூர்த்தப் பட்டுப் புடவை, காஞ்சிபுரத்தில 21 ஆயிரம் ரூபாய்க்கே கிடைக்குது. அதனால, கல்யாணத்துக்குத் தேவையான அத்தனை பட்டுப் புடவைகளையும் எங்கம்மா காஞ்சிபுரத்துலதான் வாங்கினாங்க. இதனால கணிசமான பணத்தை மிச்சம் பிடிக்க முடிஞ்சது. 

Big day - வெடிங் ப்ளான் - அனுபவங்கள் பேசுகின்றன!

அடுத்து, நகைகள்... நான் அமெரிக்கா செட்டில்டு என்பதால் கிராண்டான நகைகள் போடறதுக்கு வாய்ப்பு கிட்டத்தட்ட இல்லை. அதனால, தவிர்க்க முடியாத நகைகளை மட்டும்தான் தங்கத்தில் வாங்கினோம். மற்றபடி, பெரிய ஆரம், நெத்திச்சுட்டி, ஒட்டியாணம் மாதிரியான ஒன் டைம் யூஸ் நகைகளை எல்லாம் வாடகைக்கு எடுத்துக்கிட்டோம். ஆர்ட்டிஃபிஷியல் நகைகள்லேயும் நாங்க பணத்தை வேஸ்ட் பண்ணலை.
இன்னொரு முக்கியமான விஷயம்... மாடியில டைனிங் ஹால், கீழே வெடிங் ஹால்னு இருந்தா ஏறி, இறங்கி கெஸ்ட்டை கவனிக்கிறது ரொம்ப கஷ்டம். அதனால, வெடிங் ஹால், டைனிங் ஹால் ரெண்டும் ஒரே ஃப்ளோர்ல இருக்கிற மாதிரி மண்டபம் செலக்ட் பண்ணினாங்க அம்மா. இதனால கல்யாணத்துக்கு வந்த கெஸ்ட் எல்லோரையும் நல்லா உபசரிக்க முடிஞ்சது.’’

என் கல்யாணத்துக்கு நான்தான் பட்ஜெட் போட்டேன்!

சௌம்யா (போட்டோகிராபர், சென்னை)


‘`கொஞ்சம்கூட திட்டமிடப்படாத கல்யாணம் என்னோடது. நான்தான் வீட்டுக்கு மூத்த பொண்ணுங்கிறதால கல்யாண வேலைகளை எல்லாம் எடுத்து செஞ்சது நானும் எங்கப்பாவும்தான். நான் போட்டோகிராபி கம்பெனி நடத்தறதால, லீவெல்லாம் போட முடியாது. என் கம்பெனியில வேலை பார்க்கறவங்களேதான் என் கல்யாணத்தை போட்டோ எடுத்தாங்க. அதனால, அவங்களை கோ-ஆர்டினேட் பண்ற பொறுப்பும் எனக்கு இருந்தது. மொத்தத்துல கல்யாணப் புடவையில இருந்து ரிசப்ஷன் பேக்கிரவுண்டு டிசைன் வரை எல்லாமே என் பொறுப்புதான். ஆனாலும், எதையும் சொதப்பாம சிறப்பா செஞ்சுட்டேன். பார்க்க வேண்டிய வேலைகளை எல்லாம் ஒரு நோட்டில் எழுதி வெச்சு, அந்த செக் லிஸ்ட்டைப் பார்த்தே ஒவ்வொரு வேலையா முடிச்சுட்டு வந்தேன். எதுவும் விட்டுப்போகாம இருக்க  இந்த செக் லிஸ்ட் கைகொடுத்தது.

Big day - வெடிங் ப்ளான் - அனுபவங்கள் பேசுகின்றன!

கல்யாணத்துக்கான நகைகள் எல்லாமே அம்மா ஏற்கெனவே கொஞ்சம் கொஞ்சமா வாங்கி வெச்சிருந்தாங்க. கல்யாணச் செலவுக்கு எங்க கையிருப்பு பணம், என் பிசினஸ் புராஜெக்ட்ல வர வேண்டிய பணம், அடுத்த புராஜெக்ட் பண்ண போறவங்ககிட்ட வாங்கின அட்வான்ஸ் பணம்னு எல்லாத்தையும் கணக்குப் பார்த்து, அந்த லிமிட்டுக்குள்ளேயே செலவுகளைத் திட்டமிட்டோம். 

இவ்வளவு விஷயங்களையும் கூலா டீல் பண்ணிட்டாலும், ரெண்டு விஷயங்கள்ல நான் பதற்றமா இருந்தேன். எங்களோடது அரேஞ்டு மேரேஜ் என்றாலும், நானும் அவரும் வேற வேற கம்யூனிட்டி. அதனால சடங்கு, சம்பிரதாயமெல்லாம் வேறு வேறா இருந்தது. அது கொஞ்சம் பதற்றத்தைக் கொடுத்துச்சு. ஆனா, ரெண்டு குடும்பங்களுக்கு இடையே இருந்த புரிந்துணர்வு அந்த அனுபவங்களையெல்லாம் மகிழ்ச்சியா மாற்றிக் கொடுத்துடுச்சு.

அப்புறம், எங்க வீட்ல பேங்க் வேலை, போன் பில் கட்டுற வேலை எல்லாமே இதுவரை நான்தான் பண்ணிக்கிட்டிருந்தேன். நான் கல்யாணமாகி போயிட்டா இதையெல்லாம் யார் பண்ணுவாங்கன்னு சைடுல ஒரு டென்ஷன் ஓடிட்டே இருந்தது. ஒரு சுப நாள்ல, அம்மாவோட போன்ல நெட் பேங்கிங் ஓப்பன் பண்ணிக்கொடுத்து, எல்லாம் சொல்லிக் கொடுத்ததுக்கு அப்புறம்தான் நிம்மதி!’’

ஹனிமூனை கஸ்டமைஸ் பண்ணிக் கேளுங்க!

காயத்ரி (சாஃப்ட்வேர் துறை, சென்னை)


‘`என் பிளவுஸ்ல இருக்கிற புல்லாங்குழல், மயில் தோகையில் ஆரம்பிச்சு ஹனிமூன் பிளான் வரைக்கும் எல்லாமே கஸ்டமைஸ்டுதான். ஹனிமூனை எப்படி கஸ்டமைஸ்டு பண்ணுறதுனு கேட்கிறீங்களா?!
நாங்க ஹனிமூனுக்கு நியூசிலாந்து போனோம். எனக்கு அட்வென்ச்சர் அவ்வளவா பிடிக்காது. அதனால் ஹனிமூன் பேக்கேஜ்ல பங்கி ஜம்ப்பிங் மாதிரியான சாகச விளையாட்டெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டேன். எனக்குப் பிடிச்ச வகையில் இயற்கைக் காட்சிகள் நிறைந்த இடங்கள், ஸ்பா மாதிரியான விஷயங்களை கஸ்டமைஸ் பண்ணிக் கொடுத்தாங்க. ஹனிமூன் புக் பண்ணித் தர்ற ஏஜென்சி நமக்கோ, நம்ம ஃப்ரெண்ட்ஸுக்கோ தெரிஞ்சவங்களா இருக்கிறது பாதுகாப்புங்கிறது என் அபிப்ராயம்.

Big day - வெடிங் ப்ளான் - அனுபவங்கள் பேசுகின்றன!

போட்டோ ஷூட் நல்லா வரணும்கிறதுக்காக ரெகுலர் பார்லர் சர்வீஸ் பண்ணிக்கிட்டேன். சர்க்கரை, ஆயில் ஆகியவற்றை உணவில் குறைச்சு, பரு வராமல் பார்த்துக்கிட்டேன். பிரைடல் மேக்கப், ஹேர்ஸ்டைல் இரண்டையும் முன்னாடியே  ட்ரயல் பண்ணிப் பார்த்துக்கிட்டேன். அதனால, என் ஸ்கின் டைப்பை மேக்கப் ஆர்ட்டிஸ்ட் நல்லா தெரிஞ்சுக்கிட்டு, அதற்கேற்றபடி ஹேண்டில் பண்ணினாங்க. எனக்கு என்ன ஹேர்ஸ்டைல் வேணும்னு முன்னாடியே சொல்லிட்டேன். மொத்தத்தில், என்னுடைய `பிக் டே’ எந்த டென்ஷனும் இல்லாம நடந்தது!’’


டென்ஷனே இல்லாம கல்யாணம் பண்ணலாம்!

ஐஸ்வர்யா (டாக்டர், சென்னை) 


‘`திருமணத்தைப் பொறுத்தவரை சின்னச் சின்ன விஷயங்கள்ல கூட என்ன வேணும்னு ப்ளான் பண்ணி செஞ்சா, கடைசி நேர டென்ஷன்களைத் தவிர்க்கலாம். மணமேடைக்கு வர்றப்போ ஒரு புடவை கட்டியிருப்போம். அடுத்து மாப்பிள்ளை வீட்ல கொடுக்கிற புடவையைக் கட்டிப்போம். புடவை மாத்துறதுக்கு நேரம் ரொம்பக் குறைச்சலா இருக்கும். ஸோ, ரெண்டுத்துக்கும் பொருந்துற மாதிரி பிளவுஸ், நகைகள், வளையல்கள் மட்டுமில்லாம, தலையில் வைக்கிற பூ அலங்காரம் வரை முன்கூட்டியே டிசைட் பண்ணிடுங்க.

கழுத்துல போடுற மாலைகளை நகைகளையும் புடவை டிசைனையும் மறைக்காதபடி மெல்லிசா செலக்ட் பண்ணுங்க. ஒட்டியாணத்தை மாலை மறைக்காத வகையில் இருந்தாதான் கம்ப்ளீட் லுக் கிடைக்கும். புடவைகளை கிராண்டா மட்டுமில்லாம கலர்ஃபுல்லாவும் எடுங்க; போட்டோஸ் நல்லா வரும். கல்யாணத்துக்கு, ரிசப்ஷனுக்குன்னு தனித்தனியா நகைகளை எடுத்து பேக் பண்ணி வெச்சுட்டா, குழப்பமில்லாம இருக்கலாம்.

Big day - வெடிங் ப்ளான் - அனுபவங்கள் பேசுகின்றன!

கல்யாணப் பொண்ணுக்கு முதல்ல டிரஸ் எடுத்துட்டு அப்புறம் மாப்பிள்ளைக்கு எடுத்தா, கலர் ஆப்ஷன்ஸ் நிறைய கிடைக்கும். ரிசப்ஷன் ஹாலோட லைட்டிங், மணமக்கள் நிக்கிற இடத்தோட பேக்கிரவுண்டு ரெண்டும் டிரெஸ்ஸுக்கு கான்ட்ராஸ்ட்டா இருக்கிற படி பார்த்துங்கங்க. இல்லைன்னா, போட்டோஸ் நல்லா வராது.

ரொம்ப முக்கியமான ஆலோசனை ஒண்ணு சொல்லிடுறேன். தினமும் நிம்மதியா தூங்குங்க. முகமும் மனசும் முகூர்த்தத்துக்கு ஃப்ரெஷ்ஷா இருக்கும்!”

என்னோட புடவைக்கு கான்ட்ராஸ்ட் கலர்ல எல்லோருக்கும் புடவை எடுத்தோம்!   

ஸ்ருதி, அமெரிக்கா


‘`நான் எத்திராஜ் காலேஜ்ல லெக்சரரா வொர்க் பண்ணிக்கிட்டு இருந்தேன். ஆசிரியர் என்பதால் புடவை கட்ட எனக்கு ரொம்பப் பிடிக்கும். யுனீக்கான புடவைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்து, ‘இது புதுசா இருக்கே’னு என்னைத் திரும்பிப் பார்க்கவைக்கிற கிரெடிட், எங்கம்மாவுக்குதான். அதனால என் கல்யாணத்துக்கும், ‘நீயே செலக்ட் பண்ணும்மா’னு மொத்தப் பொறுப்பையும் அவங்ககிட்ட கொடுத்துட்டேன்.

Big day - வெடிங் ப்ளான் - அனுபவங்கள் பேசுகின்றன!

எங்க வீட்டுக் கல்யாணங்கள்ல ஏழு பட்டுப் புடவைகள் கட்டவேண்டி வரும். ஏழு புடவைகளுக்கும் கலர்ல இருந்து பிளவுஸ்கள்ல இருக்கிற டிசைன்ஸ் வரை  எல்லாமே புதுமையா இருக்கணும், ஒண்ணுக்கு ஒண்ணு வெரைட்டியா இருக்கணும்னு, பேப்பர்ல வர்ற வெடிங் சாரீஸ் விளம்பரங்களை எல்லாம் கட் பண்ணி வெச்சு, ஓர் ஆராய்ச்சியே பண்ண ஆரம்பிச்சுட்டாங்க எங்கம்மா. அப்புறம், நிறைய வெப்சைட்ஸ்ல இருக்கிற முகூர்த்தப் புடவை கலெக்‌ஷன்களையும் பார்த்தாங்க. எல்லோரும் பொதுவா மெரூன், சிவப்பு, பச்சைனு கலர்ஸ் தேர்ந்தெடுப்பாங்க. ஆனா எங்கம்மா ஆரஞ்சு, அடர் நீலம்னு கொஞ்சம் மாத்தி வாங்கினாங்க.

எங்கம்மா அடுத்து யோசிச்ச விஷயம்தான் ஹைலைட். என் புடவைக்கு கான்ட்ராஸ்ட் கலர்ல, சொந்தக்காரங்க எல்லோருக்கும் புடவை எடுத்தாங்க. கல்யாணம், ரிசப்ஷன் ஹால் பேக்கிரவுண்டுகூட என் புடவை நிறத்துக்கு கான்ட்ராஸ்டா இருக்கிற மாதிரி செலக்ட் பண்ணினாங்க. எங்க வெடிங் போட்டோஸ் எல்லாம் பெர்ஃபெக்ட் கலர் மிக்ஸிங்ல பிரமாதமா இருக்க அதுதான் காரணம்!”