Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

Published:Updated:
சுட்டி ஸ்டார் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
சுட்டி ஸ்டார் நியூஸ்!

காகித வாட்டர் பாட்டில்!

பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக உலகம் முழுவதும் நல்ல தொழில்நுட்பத்துடன் புதிய பொருள்கள் உருவாக்கப்படுகின்றன. அந்த வகையில், காகிதக் குடிநீர் பாட்டில்களை வடிவமைத்துள்ளனர், இங்கிலாந்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள். இதில் குடிநீரை அடைத்து விநியோகித்தாலும், நீரின் தன்மை கெடாது. பயன்படுத்திக் குப்பையில் போட்டால், சில மாதங்களில் மட்கிவிடும். மறுசுழற்சி காகிதத்தில் தயாராகும் இந்தப் பாட்டில்களின் உட்பகுதியில், சில தாவரங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருள் பூசப்பட்டிருக்கும். எனவே, நீரில் காகிதம் ஊறி பாட்டில் பிய்ந்துவிடாது. இந்தப் பாட்டில் விற்பனையில் கிடைக்கும் லாபம் அனைத்தும் ஓர் ஆப்பிரிக்கா அமைப்புக்கு நன்கொடையாக அனுப்பப்படுகிறது என்கிறார்கள்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

ராணுவ டாங்கிகள்!

ராணுவப் போர்க் கருவிகளில் முக்கிய இடம் வகிப்பது, டாங்க் (Tank) எனப்படும் பீரங்கி வண்டிகள். இது, 1915-ம் ஆண்டில் பிரிட்டிஷாரால் முதல் ஆயுத ஊர்தியான பீரங்கி உருவாக்கப்பட்டது. இதுபற்றி எதிரிகள் தெரிந்துகொள்ளக் கூடாதே என நினைத்தார்கள். எனவே, ‘பாலைவனப் பகுதியில் இருக்கும் பிரிட்டிஷ் வீரர்களுக்குத் தண்ணீர் எடுத்துச் செல்லும் வண்டி’ எனச் சொன்னார்கள். அதனால், நீர் இருக்கும் வண்டி எனப் பொருள்படும் வகையில், டாங்க் எனப் பெயரிட்டார்கள். பிறகு, அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. இப்போது, அதில் பல நவீன ரகங்கள் வந்துவிட்டன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

மின்மினி!

மின்மினிப் பூச்சிகளைப் பார்த்திருக் கிறீர்களா? இப்பூச்சியின் வால் நுனியில் மின்சாரமோ, நெருப்போ இல்லாமல் ஒளி உண்டாகிறது. இந்த மின்மினியில் 1900 வகைகள் உள்ளன. அமெரிக்காவில் காணப்படும் கறுப்பு மின்மினி 5.7 விநாடிகளுக்கு ஒருமுறை மினுக்கும். ஆண் மின்மினிப் பூச்சிகளிடம் மட்டும்தான் பளிச் ஒளி வரும். படர்தாமரை வளரும் சதுப்பு நிலங்களில் ஆண் மின்மினிகள் குறிப்பிட்ட பருவத்தில் கூடுகின்றன. ஒரே சமயத்தில், ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான மின்மினிப் பூச்சிகள் மரத்தில் படர்ந்து ஒளி வீசுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

ரோபோ சூட்கேஸ்!

பயணம் செல்லும்போது, சூட்கேஸ்களை கை வலிக்கத் தூக்கிக்கொண்டோ, இழுத்துக்கொண்டோ செல்ல வேண்டிய அவசியம் இனி இருக்காது. நீங்கள் நடக்க நடக்க, சூட்கேஸ் உங்களைப் பின்தொடர்ந்து வரும். இஸ்ரேலைச் சேர்ந்த ‘என்யுஏ ரோபோடிக்ஸ்’ என்ற நிறுவனம் ஸ்மார்ட் சூட்கேஸை உருவாக்கியுள்ளது. இந்த சூட்கேஸ், சமதளமான தரைகளில் கேமரா சென்சார்கள் மூலம் இயங்கி, உங்களைப் பின்தொடர்ந்து வரும். வேறு யாராவது தொட்டால் அலாரம் அடித்து எச்சரிக்கும். சென்சார் நெட்வொர்க், கம்ப்யூட்டர் விஷன், ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் மூன்றையும் இணைத்து இந்த சூட்கேஸை உருவாக்கியிருக்கிறார்கள்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

சூரியனுக்குச் செயற்கைக்கோள்!

இந்திய அறிவியல் சாதனையின் மற்றொரு சாதனையாக, சூரியனுக்குப் புதிய செயற்கைக்கோளை அனுப்ப, இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம்     (ISRO) முடிவெடுத்துள்ளது. அதன் பெயர், ஆதித்யா (ADITYA L-1). 2008 ஜனவரியில் இதற்கான திட்டம் ஆரம்பித்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (ISRO) மற்றும் பல இந்தியக் கழகங்களின் உதவியுடன் கட்டமைக்கப்பட்டு வருகிறது. 2019 அல்லது 2020-ம் ஆண்டில், இது முழுமையாகி, விண்ணில் ஏவப்பட உள்ளது. இதன் வடிவமைப்பில் முக்கியப் பங்காற்றியவர், மயில்சாமி அண்ணாதுரை. சந்திரயான் 1 மற்றும் 2, மங்கள்யான் ஆகிய செயற்கைக் கோள்கள் இவரால்தான் வடிவமைக்கப்பட்டன. திட்டமிட்டபடி ஆதித்யா செயற்கைக்கோள் ஏவப்பட்டால், அது சூரியனை ஆய்வுசெய்து, பல புதிய விஷயங்களை உலகுக்கு அளிக்கும். இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும்.

தெரியுமா?

தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism