Published:Updated:

உடம்புதான் மூலதனம் எல்லோரும் உணருங்கள்! - ஸ்கை டைவர் அருண்குமார்

உடம்புதான் மூலதனம் எல்லோரும் உணருங்கள்! - ஸ்கை டைவர் அருண்குமார்
பிரீமியம் ஸ்டோரி
உடம்புதான் மூலதனம் எல்லோரும் உணருங்கள்! - ஸ்கை டைவர் அருண்குமார்

தன்னம்பிக்கை

உடம்புதான் மூலதனம் எல்லோரும் உணருங்கள்! - ஸ்கை டைவர் அருண்குமார்

தன்னம்பிக்கை

Published:Updated:
உடம்புதான் மூலதனம் எல்லோரும் உணருங்கள்! - ஸ்கை டைவர் அருண்குமார்
பிரீமியம் ஸ்டோரி
உடம்புதான் மூலதனம் எல்லோரும் உணருங்கள்! - ஸ்கை டைவர் அருண்குமார்

“2011ம் ஆண்டு. காலையில 3 மணிவாக்குல ஆஃபீஸ்ல இருந்து, டூவீலர்ல வீடு திரும்பிட்டு இருந்தேன். எப்பவும் நான் அதிகமான வேகத்துல வண்டி ஓட்டினதில்ல. அதீத கவனம் எனக்கு இருக்கிறதா எப்பவுமே ஒரு நம்பிக்கை இருந்துட்டே இருக்கும். அன்னைக்குக்கூட அப்படித்தான், ரொம்ப நார்மலான வேகத்துல சாலையைக் கடக்கும்போது, அந்த விபத்து நடந்தது. கான்கிரீட் பொருள்களையெல்லாம் கொண்டு போகிற ட்ரக், எதிர்பாராத திசையிலேர்ந்து வேகமா வந்தது. பேலன்ஸ் பண்ணமுடியாம விழுந்ததும், என் கால்மேல சக்கரம் ஏறிடுச்சு. ஒரு நிமிஷம்கூட நிறுத்தாம, அந்த ட்ரக் கடந்து போயிடுச்சு.

விபத்து ஏற்படுத்தறவங்களைப் பார்த்து எனக்கு இப்படி கேட்கத் தோணும். ‘‘இடிச்சுச் சிதைச்சவங்க இருக்காங்களா, இல்லையா?ன்னு தெரிஞ்சுக்கிற ஆர்வமாவது உங்களுக்கு இருக்காதா? ஒருத்தரோட அலட்சியத்தாலோ, திமிராலோ  பாதிக்கப்படுற உயிரோட வலியை அவங்க நினைச்சுப் பார்க்கமாட்டீங்களா?” என்கிறார் பிசினஸ் அனலிஸ்ட், ஸ்கை டைவிங் வீரர் அருண்குமார். விபத்தில் வலது கால் சிதைந்துபோனதால், அதை முழுவதுமாக அகற்றவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

உடம்புதான் மூலதனம் எல்லோரும் உணருங்கள்! - ஸ்கை டைவர் அருண்குமார்

‘‘எதைப்பற்றியும் யோசிக்க முடியாத இருட்டுல இருந்தேன். இயக்கம் மொத்தமா நின்னுபோறதைவிட, வேற என்ன துயரம் இருக்கமுடியும்? பார்க்க வரும் எல்லோரும், பிஸ்கட்டும் பழமும் கொண்டு வருவாங்க. அதுக்கும் ரெண்டு, மூணு கிலோ அதிகமா, பரிதாப உணர்ச்சியையும், அவநம்பிக்கையையும்  கூடையில வெச்சுக் கொண்டு வருவாங்க. அதையும் ஏத்துக்கிட்டு என்னை நானே சரிபண்ணிக்க, ரொம்பக் கஷ்டப்பட்டேன்” என்கிறார். விபத்து நடந்தபோது இருந்த உணர்வை, அருண்குமார் மறக்கவில்லை. அந்த ஞாபகத்தின் சுடும் ஈரத்தை அவரின் வார்த்தைகளின் வழியாகக் கேட்பவர்களுக்கும் கடத்துகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உடம்புதான் மூலதனம் எல்லோரும் உணருங்கள்! - ஸ்கை டைவர் அருண்குமார்


அருண்குமாரின் தந்தை ஓய்வுபெற்ற ராணுவ வீரர். அவரின் நண்பர் டி.பி சிங் அளித்த உற்சாகத்தில்தான், அடுத்து இயங்கத் தொடங்கியிருக்கிறார் அருண்.  “ராணுவ வீரர்கள் பலரும் உறுப்புகளை இழந்தும், மன உறுதி குலையாம இருக்கிறதை நான் பார்த்திருக்கேன். அப்பாவுடைய நண்பர்கள் பலரை எனக்குத் தெரியும். டி.பி சிங் அங்கிள்தான், அடுத்து நான் எழுந்து நடக்கறதுக்கான தைரியத்தைக் கொடுத்தவர். விபத்து நடந்து ஓய்வில் இருந்த நேரம், பல விஷயங்களையும் கத்துக் கொடுத்தது. நம்ம உடல பத்தி நாம போதுமான அக்கறை எடுத்துக்கிறதில்லை. உறுப்புகள் இல்லாமப் போகும்போதும், குறைபாடு ஏற்படும்போதும், நோய் தாக்கும்போதும்தான் நம் உடல் எவ்வளவு பெரிய பொக்கிஷம்னு நாம உணருவோம். உடம்பைச்  சரி பண்ணிக்கணும்னு நினைச்சதுதான் நான் செய்த நல்ல விஷயம்.” `உடலை வளர்த்தேன், உயிர் வளர்த்தேன்’ என்னும் வள்ளலாரின் வாக்கியத்தின்படி, தனது வாழ்வை முறைப்படுத்தியதாகக் கூறுகிறார் அருண்.

‘‘ஸ்கை டைவிங் மேல  அபாரமான ஈடுபாடு இருந்தது. அதையே செய்யலாம்னு நெனச்சு, அதைப்பத்தித் தெரிஞ்சிக்க ஆரம்பிச்சேன்” என்கிற அருண், பாராசூட் அல்லது ஸ்கை டைவிங் என்னும் சாகச விளையாட்டை சாதாரணமாகக் கையாள்கிறார். மட்டுமல்ல, தான் பணிபுரியும் நிறுவனத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பில் ஆலோசகராக இருக்கிறார். மாற்றுத்திறனாளிகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதுடன், அவரவர்க்கு ஏற்ற வகையில் தொழில்ரீதியான ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.

உடம்புதான் மூலதனம் எல்லோரும் உணருங்கள்! - ஸ்கை டைவர் அருண்குமார்

“ஸ்கை டைவிங் மட்டுமில்லாம, பிளேடு ரன்னிங்கும் முயற்சி பண்ணிட்டு இருக்கேன். செயற்கைக் காலுக்குப் பதிலா பிளேடு பொருத்திக்கிட்டு ஓடமுடியும்னு தெரிஞ்சிக்கிட்டேன். இந்த ‘பிளேடு ரன்னிங்’ நுணுக்கங்களைத் தெரிஞ்சுக்கிட்டு, இதுலயும் ஒரு ரவுண்டு வெற்றியைத் தட்டிக்கிட்டு வரணும்.”  நம்பிக்கையுடன் பேசும் அருண், பள்ளிகளில், கல்லூரிகளில், மற்ற பணியிடங்களில், தொழிற்சாலைகளில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கையைக்  கணக்கெடுத்து, அவர்களுக்கான ஆதரவுத் தளத்தை உருவாக்குவதில் அரசுக்குப் பெரிய பங்கு இருப்பதாகத் தெரிவிக்கிறார்.

”மாற்றுத்திறனாளிகள் மாற்றும் திறனாளிகளா மாறணும். சமூகம் ஆண், பெண் பாகுபாட்டையே இன்னும் நிறுத்தலை. இயங்க முடியாம இருக்கிற மாற்றுத்திறனாளிகள்கிட்ட காட்டுற பாகுபாட்டைப் பத்தி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பொழுதுபோக்கு, வேலைவாய்ப்பு, கல்வின்னு எல்லாத்துலயும் இட ஒதுக்கீட்டோட சேர்த்து நேசக்கரம் நீட்டணும். அரசாங்கம் எல்லாத்தையும் பண்ணிடமுடியாது. அன்புகாட்டுங்கன்னு ஆர்டர் பண்ணமுடியாது. அன்பையும் புரிந்துணர்வையும் மழை மாதிரி நாமளேதான் எல்லாருக்கும் கொடுக்கமுடியும்.” மழையைப் போலவே தன்னிச்சையாகப் பேசுகிறார்.

ம.குணவதி, படம்: வீ.நாகமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism