‘‘ஒவ்வோர் உணவுக்கும் ஒவ்வொரு சுவை இருப்பதைப்போல, சத்துகளிலும் மாறுபாடு இருக்கும். சமைக்கப்படும் விதத்தைப் பொறுத்து, உணவின் தன்மை மாறும். காய்கறிகளை அதிகமாக வேகவைத்தால் அவற்றிலுள்ள வைட்டமின் சத்துகளின் தன்மை குறையும். அதேபோல, இறைச்சியை அளவுக்கு அதிகமாக எண்ணெயில் பொரித்தால், அதன் கொழுப்புச் சத்தும் கலோரியும் அதிகரிக்கும். எனவே காய்கறி, இறைச்சி, கீரை என எதுவாக இருந்தாலும் குறிப்பிட்ட நேரம்தான் அதைச் சமைக்க வேண்டும்” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி லிஸியா.



ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!




- ஜெ.நிவேதா
காய்கறி, பழங்கள் மற்றும் பருப்பு வகைகளில் நீரில் கரையும் வைட்டமின்களான (Water Soluble Vitamins) வைட்டமின் பி, சி அதிகமாக உள்ளன. இந்தப் பொருள்களை அளவுக்கதிகமாக வேக வைக்கக்கூடாது. பருப்பு வகைகளை அதிகநேரம் வேக வைக்கும்போது, அவற்றில் உள்ள வைட்டமின் பி, பி 1, பி 2 சத்துகள் அழிந்துவிடும்.