Published:Updated:

வரலாற்றைப் படைப்போம்!

வரலாற்றைப் படைப்போம்!
பிரீமியம் ஸ்டோரி
வரலாற்றைப் படைப்போம்!

வரலாற்றைப் படைப்போம்!

வரலாற்றைப் படைப்போம்!

வரலாற்றைப் படைப்போம்!

Published:Updated:
வரலாற்றைப் படைப்போம்!
பிரீமியம் ஸ்டோரி
வரலாற்றைப் படைப்போம்!

காலம்கடந்து நின்று வரலாற்றில் வாழ்வது எப்படி இலக்கியங்களுக்கு முக்கியமோ, அதுபோல் வரலாற்றை எழுதுவதும் இலக்கியங்களுக்கு முக்கியம். வரலாற்றெழுதியல் என்ற துறையும் அதுகுறித்த புரிந்துணர்வும் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே உருவாகின. அப்படி உருவான வரலாற்றுத் துறையில் முக்கிய ஆவணங்களாகக் கணக்கெடுக்கப்பட்டவை கல்வெட்டுகள், அகழ்வாராய்ச்சி முடிவுகள், வாய்மொழி வழக்காறுகள் மற்றும் எழுதப்பட்ட இலக்கியங்கள்.

வரலாற்றைப் படைப்போம்!



இன்னமும் சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள்,  நீதி இலக்கியங்கள், ஆகியவை தமிழர்களின் பண்டைய வரலாற்றை அறிய உதவுகின்றன. இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடிதான். அதே நேரத்தில் ஓர் அரசு ஆவணத்தைப்போலவோ உண்மையறியும் குழுவின் அறிக்கையைப்போலவோ அப்படியே யதார்த்தத்தைப் பிரதிபலிப்பவை அல்ல இலக்கியங்கள். ஆனால், உண்மையின் கூறுகளை உள்வாங்கிக்கொண்டு அதைப் புனைவாக மாற்றிவிடுவதன் மூலம் வரலாற்றின் ஒரு பகுதியாக இலக்கியங்கள் மாறிவிடுகின்றன.

அரசு, வர்க்கம் போன்ற நவீனக் கருத்தாக்கங்கள் உருவானதன் பிறகு, வரலாற்றுணர்வு என்பது முக்கியத்துவம் அடைகிறது. சமகாலச் சூழல்களை இலக்கியத்தில் பதியவைப்பது என்பது, படைப்பாளிகளுக்கு முன்னுள்ள சவாலாக இருக்கிறது. அதுவே அவர்களின் சமூகப் பொறுப்புக்கான அடையாளமாகவும் இருக்கிறது. அயோத்திதாசர், பெரியாரின் சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிடக் கட்சிகளின் ஆட்சி, இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டம், இட ஒதுக்கீட்டுக்கான போராட்டங்கள், தமிழகத்தில் நடைபெற்ற ஈழ ஆதரவுப் போராட்டங்கள், சமீபத்தில் நடைபெற்ற மக்கள் போராட்டங்கள், ஆணவக்கொலைகள் ஆகியவை குறித்துத் தமிழில் உருவான படைப்புகள் எவ்வளவு என்று கணக்கிட்டால், நமக்கு ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. தமிழகத்தின் சமூக, அரசியல் வரலாற்றின் நீண்ட நெடிய மரபோடு ஒப்பிடுகையில் தமிழில் வரலாற்று நாவல்கள் மிகக் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்.

மேலும், வரலாறு என்பது ஒருபடித்தானதில்லை. பல்வேறு பார்வைகளில், பல்வேறு பரிமாணங்களில் வரலாற்று நிகழ்வுகளைப் பதிவுசெய்யும் இலக்கியங்கள் தமிழில் உருவாக வேண்டும். படைப்பாளி என்பவர் வரலாற்றுப் பதிவாளரும்தான் என்ற உணர்வு நமக்குள் உருவாக வேண்டும்.

- ஆசிரியர்