முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினரும், திருப்பூர் தொழிலதிபருமான சிவமூர்த்தியின் படுகொலைச் சம்பவம், திருப்பூர் வட்டாரத்தையும் தாண்டி தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

என்ன நடந்தது என்று சிவமூர்த்தியின் உறவினர்கள் சிலரிடம் விசாரித்தோம். “திருப்பூர் கருமாரம்பாளையத்தில் சிவமூர்த்தி வீடு உள்ளது. வீட்டின் அருகில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வந்தார். இந்த ஜூன் 25-ம் தேதி சிவமூர்த்தியை செல்போனில் அழைத்த விமல் என்ற நண்பர், கோத்தகிரிக்கு ஒரு பின்னலாடை வர்த்தகர் வந்திருப்பதாகவும், உடனே அவரைச் சந்தித்தால் ஒரு பெரிய ஆர்டரைப் பிடித்துவிடலாம் என்றும் கூறியிருக்கிறார். உடனே சிவமூர்த்தி, காரில் கிளம்பியுள்ளார். மறுநாளான ஜூன் 26-ம் தேதி காலை வரை சிவமூர்த்தி வீடு திரும்பவில்லை. அவரது செல்போன்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தன. அவரைக் காணவில்லை என்று போலீஸில் சிவமூர்த்தியின் தந்தை சின்னச்சாமி புகார் செய்தார். அதன் பிறகுதான் எல்லாம் தெரியவந்தது” என்றனர்.

இந்த வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, “சிவமூர்த்தி தொழில்ரீதியாக விமல் என்பவருடன் பல ஆண்டுகளாகப் பழக்கம். விமல் அழைத்தவுடன், காரில் அன்னூருக்கு சிவமூர்த்தி சென்றார். அங்கிருந்து காரை விமல் ஓட்ட, சிவமூர்த்தி அருகில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். காரமடை அருகே குருந்தமலை முருகன் கோயிலுக்கு இருவரும் சென்றுள்ளனர். விமலுக்கு அவ்வப்போது சிவமூர்த்தி பணம் கொடுத்து வந்திருக்கிறார். மேலும், தனியாகத் தொழில் செய்வதற்கும் நிறையப் பணம் கொடுத்து உதவியிருக்கிறார். ஆனால், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், பணம் கொடுப்பதைச் சிவமூர்த்தி நிறுத்திவிட்டார். எனவே, ‘எப்படியாவது பணம் கேட்க வேண்டும். தராவிட்டால், ஆட்களை வைத்து மிரட்ட வேண்டும்’ என்று விமல் முடிவுசெய்துள்ளார். அதன்படிதான், அன்றைக்கு விமல் அவரை அழைத்துள்ளார். குருந்தமலை முருகன் கோயிலில் காத்திருந்த கவுதமன், மணிபாரதி என்ற இருவரை காரில் ஏற்றிக் கொண்டார் விமல். அவர்கள் இருவரும் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்தனர். இவர்கள் வழக்கமான நபர்கள் இல்லை என்பதை உணர்ந்த சிவமூர்த்தி அவர்களைப் பற்றிக் கேட்டிருக்கிறார். விமல், தன் நண்பர்கள்தான் என்று சொல்லி யுள்ளார். காரில் சென்றுகொண்டிருந்தபோது, விமலுக்கும் சிவமூர்த்திக்கும் இடையே பணம் தொடர்பாகத் தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் காரை நிறுத்திவிட்டு, சிவமூர்த்தியை விமல் தாக்கியிருக்கிறார். பின்னால் இருந்த விமலின் நண்பர்கள் இருவரும் சிவமூர்த்தியைப் பிடித்துக்கொண்டு, பார்சல் கட்டுவதற்கு உபயோகிக்கப்படும் டேப்பை எடுத்து அவரின் வாயைச் சுற்றி ஒட்டியுள்ளனர். மேலும், அவரது மூக்கையும் சேர்த்து டேப்பை ஒட்டியதால் மூச்சுத்திணறி சிவமூர்த்தி உயிரிழந்தார். பின்னர், உடலை காரில் வைத்துக் கொண்டே சுற்றியவர்கள், சாக்கடைத் தண்ணீர் தேங்கிய கெலவரப்பள்ளி அணையில் போட்டுள்ளனர். பின்னர், ஆம்பூர் அருகே காரில் சுற்றிக்கொண்டிருந்தனர்.

போலீஸில் புகார் அளித்தார், சிவமூர்த்தியின் தந்தை. அதையடுத்து விசாரணையில் இறங்கினோம். சிவமூர்த்தியின் மொபைலுக்கு வந்த அழைப்புகளை ஆய்வு செய்ததில், கடைசியாக விமலிடம் பேசியது தெரியவந்தது. விமலின் மொபைல் எண் ஆம்பூர் அருகே இருப்பது டவர் மூலம் கண்டறியப்பட்டது. விமலும், அவருடன் காரில் வந்த இருவரும் பிடிபட்டனர். மூர்த்தி என்பவரும் காரில் பயணித்ததாகத் தெரிந்தது. அவரையும் விசாரணை செய்து வருகிறோம்” என்றார்.

தன் நிறுவனத்தில் பணியாற்றிய ஒரு பெண்ணுக்கும், சிவமூர்த்திக்கும் தொடர்பு இருந்தது என்றும், அதன் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். சிவமூர்த்தியும், விமலும் அடிக்கடி பெண்களுடன் சுற்றுவார்கள் என்றும், அந்த விவகாரம்கூட சிவமூர்த்தியின் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

காரணம் எதுவாக இருந்தாலும், சிவமூர்த்தியின் மரணம் அவரது குடும்பத்தை நிலைகுலையச் செய்திருக்கிறது. ‘‘கோடீஸ்வரராக இருந்தாலும், அனைவரிடமும் சிவமூர்த்தி மிக எளிமையாகப் பழகக்கூடியவர். சிவமூர்த்திக்கு 40 வயதில்தான் திருமணமே நடந்தது. ப.சிதம்பரத்தின் மனைவி நளினியின் தங்கையின் மகளான துர்கா வைஷ்ணவியை அவருக்குத் திருமணம் முடித்தோம். தந்தையை சிறு வயதிலேயே இழந்துவிட்ட துர்கா வைஷ்ணவியை, பெரியம்மா நளினி சிதம்பரத்தின் குடும்பம்தான் அரவணைத்து வளர்த்தது. அவரை, சட்டக் கல்வியும் படிக்க வைத்தனர். எந்தப் பிரச்னையும் இல்லாமல் சந்தோஷமாக வசதி வாய்ப்புடன் வாழ்ந்த குடும்பத்துக்கு இப்படியொரு சோதனை வரவேண்டுமா?’’ என்று அழுகையுடன் சொன்னார் சிவமூர்த்தியின் உறவினர் ஒருவர்.

இதுகுறித்து திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் மனோகரனிடம் பேசினோம். “நாங்கள் விசாரித்த வரையில் இது முழுக்க முழுக்கப் பணம் பறிக்கும் முயற்சியாகத்தான் தெரிகிறது. இருப்பினும், அனைத்துக் கோணங்களிலும் விசாரணையை நடத்துகிறோம். மூர்த்தி என்பவர்மீது ஏற்கெனவே சில குற்ற வழக்குகள் இருப்பதும் தற்போது தெரிய வந்திருக்கிறது’’ என்று முடித்துக்கொண்டார்.

- தி.ஜெயப்பிரகாஷ், எம்.வடிவேல்