Published:Updated:

20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்! #Deepveer

20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்! #Deepveer
20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்! #Deepveer

பாலிவுட் திரையுலகம் மட்டுமல்ல, வடஇந்தியா முழுவதும் `டாக் ஆஃப் தி டவுனாக' இருப்பது `தீப்வீர்' திருமணம்தான். பாலிவுட்டின் டாப் ஸ்டார்ஸ் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் ஜோடிக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்தக் காதல் ஜோடியின் திருமணம் நவம்பர் 14-ம் தேதி இத்தாலியில் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது. அவர்களின் `டெஸ்டினேஷன் வெட்டிங்' பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள்...

வெனீஸ் நகரம், பைசா கோபுரம் போன்ற அதிசயங்கள், லியோனார்டோ டாவின்சி, மைக்கேல் ஏஞ்சலோ போன்றோரின் ஓவியங்கள், பியானோ மற்றும் வயலின் கருவிகளின் பிறப்பிடம், பீட்சா, பாஸ்தா, எஸ்ப்ரெஸ்ஸோ போன்ற உணவுகளின் தலைநகரம், ஃபேஷன் புரட்சி உள்ளிட்ட ஏராளமான சிறப்பம்சங்களை ஏந்தியபடி உலக மக்கள் அனைவரையும் கவர்ந்த ரொமான்டிக் டெஸ்டினேஷன்தான் `இத்தாலி'. இங்கு, இயற்கை வளங்களோடு காதலும் பெரியளவில் மதிக்கப்படுகிறது. அதனால்தான் என்னவோ திருமணத்துக்காகப் பலரும் இத்தாலியைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதிலும் `கோமோ' ஏரிதான் பிரபலங்களின் `நம்பர் 1' சாய்ஸ். `தீப்வீர்' ஜோடியும் தங்களின் திருமணத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் `லேக் கோமோ'. பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி, பாடகர் டேவிட் பவ்வி, சின்னத்திரை நாயகி கிம் கார்தர்ஷியன் போன்றோரின் திருமணமும் இந்த ஏரியில்தான் நடைபெற்றன. விரைவில் திருமணம் நடக்கவிருக்கும் அம்பானியின் மகள் இஷாவின் நிச்சயதார்த்தமும் இந்த ஏரியில்தான் நடைபெற்றது.

இவர்களின் திருமணத்துக்கு உறவினர்கள், நண்பர்கள் உட்பட மொத்தம் 30 பேரைதான் அழைத்திருக்கிறார்கள். அதில் பாலிவுட்டிலிருந்து ஷாரூக்கான், `பத்மாவத்' இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, பிரபல நடன இயக்குநர் ஃபரா கான் உள்ளிட்டோரை மட்டுமே திருமணத்துக்கு அழைத்திருக்கிறார்கள். மற்றவர்கள், நவம்பர் 21-ம் தேதி பெங்களூரிலும், 28-ம் தேதி மும்பையிலும் நடைபெறவுள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள்.

பாலிவுட் வரலாற்றிலேயே `தீப்வீர்' திருமண பட்ஜெட்தான் மிகவும் அதிகமாம்! தீபிகாவின் தாலி மட்டும் 20 லட்சம் ரூபாயாம்! இவர்களின் திருமணம், இரண்டு வெவ்வேறு பாரம்பர்ய முறைப்படி நடக்கவிருக்கிறது. கர்நாடகாவைச் சேர்ந்த தீபிகா, அவர்களின் பாரம்பர்ய முறைப்படி `கொங்கனி திருமணமும்', மும்பையைச் சேர்ந்த ரன்வீரின் பாரம்பர்ய முறைப்படி சிந்தி திருமணமும் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. 

திருமணத்துக்கு வருபவர்களுக்கு `ஸ்ட்ரிக்ட் ரூல்' ஒன்றை உருவாக்கியுள்ளனர் தீப்வீர் ஜோடி. நிகழ்விடத்தில் மொபைல்போன் உபயோகிக்கக் கூடாது என்பதுதான் அந்த ரூல்! அங்கு வந்திருப்பவர்கள் முழுக்க முழுக்க இவர்களோடு ஒன்றிணைந்து கொண்டாடவேண்டும் என்பதற்காகவே இந்த விதிமுறையை அறிவித்திருக்கிறார்களாம். ``மொபைல்களோடு, மீடியாவுக்கும் தடை''  என்று அன்புக்கட்டளையிட்டவர் தீபிகாதானாம்!

இந்நிலையில், நேற்று உறவினர்கள் சூழ மெஹெந்தி திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு இருவரும் ஒரே நிற ஆடை அணிந்திருந்தனர். இவர்களுக்கான பிரத்தியேக ஆடைகளை வடிவமைத்தவர், `விருஷ்கா'வுக்கு ஆடைகள் வடிவமைத்த சபியாசச்சி முகர்ஜி. இந்தக் கொண்டாட்டத்தில் பங்குபெற்ற அனைவருக்கும், `தீப்வீர்' ஜோடி கைப்பட எழுதிய குறுஞ்செய்தியைக் கொடுத்திருக்கின்றனர். மெஹெந்தி விழாவைத் தொடர்ந்து, மிகவும் எமோஷனலாகிப்போன ரன்வீர், தீபிகாவையும் தன் உரையாடலால் நெகிழவைத்துள்ளார்.

மணமேடையை அலங்கரிக்க, Florence நகரத்திலிருந்து பன்னிரண்டு பேரை வரவழைத்துள்ளனர். தீபிகாவின் ஃபேவரிட் மலரான `லில்லி' மலர்களைக்கொண்டே மேடையை அலங்கரித்துள்ளனர். பாலிவுட் மட்டுமல்லாது, உலக ரசிகர்கள் அனைவரும் `தீபிகாவுக்கு, ரன்வீர் என்ன மாதிரியான சர்ப்ரைஸ் வைத்திருப்பாரோ!' என்றபடி வெயிட்டிங்!