மாநிலங்களின் உரிமைகளை மெல்ல மெல்லப் பறித்துத் தன்வசப்படுத்தி வரும் மத்திய அரசு இப்போது, மாநிலங்களின் நிர்வாகத்தில் உள்ள அணைகளைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் துடிக்கிறது. அதற்காக உருவாக்கப்பட்ட அணைகள் பாதுகாப்பு மசோதாவுக்கு, ஜூன் 13-ம் தேதி மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துவிட்டது. ‘இந்த மசோதா, வழக்கம்போலத் தமிழகத்தை வஞ்சிக்கும்’ என்று குமுறுகிறார்கள் விவசாயிகள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் 89 அணைகளும், மின்வாரியக் கட்டுப்பாட்டில் 38 அணைகளும் உள்ளன. நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 89 அணைகள்மூலம் 238 டி.எம்.சி தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. இதன்மூலம் பல லட்சம் ஏக்கர் விவசாயம் நடக்கிறது. மேட்டூர், பவானிசாகர், அமராவதி, முல்லை பெரியாறு, பாபநாசம், மணிமுத்தாறு, கிருஷ்ணகிரி, வைகை, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சோலையாறு, சாத்தனூர், பரம்பிக்குளம், ஆழியாறு, திருமூர்த்தி உள்ளிட்ட 15 அணைகள் குடிநீர் ஆதாரங்களாக விளங்கி வருகின்றன. பெருமளவு மின்சாரமும் தயாரிக்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் அணைகளைப் பராமரித்துப் பாதுகாக்கவும், மாநிலங்களுக் கிடையே இடையேயான நதிநீர்ச் சிக்கல்களைத் தீர்க்கவும் அணைகளை மாநிலப் பட்டியலிலிருந்து மத்திய அரசுப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற விவாதம் நெடுங்காலமாக நடந்துவருகிறது. 1987-ல் ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது, இதற்கான முதல் வரைவு மசோதா உருவாக்கப்பட்டது. மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் விதத்தில் இருப்பதாகக் கடும் எதிர்ப்புகள் எழுந்ததால், அது கைவிடப்பட்டது.

2010-ல் மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில், மீண்டும் ‘அணைகள் பாதுகாப்புச் சட்ட மசோதா’ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதாவை மாநிலங்கள் கடுமையாக எதிர்த்தன. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, தமிழகத்தின் உரிமையைப் பறிக்கும் அம்சங்களைப் பட்டியலிட்டுப் பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதினார். எனவே, நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அந்த மசோதா அனுப்பப்பட்டது. அந்த மசோதாவில் எவ்வித மாற்றமும் செய்யாமல், 2016-ம் ஆண்டு அப்படியே அதை மாநிலங்களுக்கு அனுப்பிக் கருத்து கேட்டது மத்திய நீர்வள அமைச்சகம். அப்போதும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, ‘இந்த மசோதாவைக் கைவிட வேண்டும்’ என்று பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார். இதன் பின்னர், ‘திருத்தப்பட்ட மசோதா’ என்ற பெயரில் மீண்டும் அதனைக் கையில் எடுத்துள்ளது மத்திய அரசு. ஒரு மசோதா திருத்தப்பட்டால், அந்த வரைவை மீண்டும் மாநிலங்களுக்கு அனுப்பிக் கருத்து கேட்க வேண்டும். அந்த நடைமுறையைப் பின்பற்றவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்த மசோதா, வரும் கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது.

தமிழகத்துக்கு என்ன பாதிப்பு?

தமிழக வேளாண்மைக்கும் குடிநீருக்கும் ஆதாரமாக இருக்கும் காவிரி, பாலாறு உள்ளிட்ட நதிகளும் பிற மாநிலங்களில் உற்பத்தியாகித் தமிழகம் வந்து சேர்கின்றன. இப்படி மொத்தத் தண்ணீர் தேவைக்கும் பிற மாநிலங்களைத் தமிழகம் சார்ந்துள்ள நிலையில், மத்திய அரசு கொண்டுவரும் அணைகள் பாதுகாப்பு மசோதா, ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தின் தண்ணீர் உரிமையையும் பறிக்கும் என்று அஞ்சுகிறார்கள் விவசாயிகள்.

“பூகோளரீதியாகத் தமிழகம் சிக்கலான சூழலில் அமைந்திருக்கிறது. தண்ணீர் தேவைக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களைச் சார்ந்திருக்கிறோம். இந்த மாநிலங்களுடனான ஒப்பந்தங்களில் பிரச்னைகள் உள்ளன. நீதிமன்றங்கள் தலையிட்ட பிறகும்கூட, தமிழகத்துக்கு நீதி கிடைக்கவில்லை. இந்தச் சூழலில், எல்லா ஒப்பந்தங்க ளையும் நீர்த்துப்போகச் செய்துவிடும் அபாயம் இந்த மசோதாவில் இருக்கிறது” என்கிறார் வழக்கறிஞரும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்தவருமான வெற்றிச்செல்வன்.

தமிழகத்தில் உருவாகிக் கேரளாவில் கடலில் கலக்கும் ஆனைமலையாறு, நீராறு, சோலையாறு, பரம்பிக்குளமாறு, ஆழியாறு நதிகளின் நீரைப் பயன்படுத்த இரு மாநிலங்களுக்கும் இடையில் 1958-ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி, பரப்பிக்குளம்- ஆழியாறு திட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி, இரு மாநிலங்களிலும் தலா 10 அணைகளைக் கட்ட வேண்டும். பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் அணைக்கட்டுகளைக் கேரள மாநிலத்துக்குள் தமிழகமே கட்டி, அதனைப் பராமரித்தும் வருகிறது. இவற்றின் மூலம் கிடைக்கும் 50 டி.எம்.சி தண்ணீரில், தமிழகம் 30 டி.எம்.சி தண்ணீரையும் கேரளா 20 டி.எம்.சி தண்ணீரையும் பகிர்ந்துகொள்ள வேண்டும். அதே போல, கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணையையும் தமிழகம்தான் கட்டியது. அதன் நிர்வாகம், பராமரிப்புப் பணிகளைத் தமிழக அரசே மேற்கொள்கிறது. மத்திய அரசின் மசோதா சட்டமானால், இந்த அணைகள் கேரளாவின் நிர்வாகத்துக்குப் போய்விடும் என்கிறார்கள்.

“அதுமட்டுமல்ல. முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதால் ஆபத்து ஏற்படலாம் என்று கூறுகிறது கேரளா. அணைகளின் பாதுகாப்பு, நிர்வாகப் பணிகளை அந்தந்த மாநிலங்களே செய்ய வேண்டும் என்று மசோதா வலியுறுத்துகிறது. இதைக் காரணம் காட்டி, முல்லைப் பெரியாறு அணையைத் தகர்த்து விடுவார்கள். அந்த அணையை நம்பி 2.16 லட்சம் ஏக்கர் விவசாயம் நடக்கிறது. அதற்கு முடிவு கட்டி விடுவார்கள்” என்று எச்சரிக்கிறார் அனைத்து விவசாயிகள் குழு ஒருங்கிணைப்புத் தலைவர் பி.ஆர்.பாண்டியன்.

“பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தின்படி, நமக்கு 30.5 டி.எம்.சி தண்ணீர் இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை. ஒப்பந்தப்படி, கேரள அரசு இடமலையாற்றில் ஒரு அணை கட்டிக்கொள்ள வேண்டும். அதன்பிறகு, தமிழக அரசு ஆனைமலையாற்றில் ஒரு அணை கட்டிக்கொள்ள வேண்டும். 1985-லேயே அந்த இடமலையாற்றில் அணை கட்டும் பணியை முடித்துவிட்டார்கள். ஆனால், ‘இன்னும் கட்டி முடிக்கவில்லை’ என்று கூறி நமக்கு அணை கட்ட அனுமதி தர மறுக்கிறார்கள். இதனால், நம் மாநிலத்தின் 4 டி.எம்.சி தண்ணீர் உரிமை பறிபோகிறது. மசோதா மட்டும் நிறைவேறினால், மொத்தத் தண்ணீர் உரிமையையும் பிடுங்கி கேரளாவிடம் கொடுத்துவிடுவார்கள்” என்கிறார் பரப்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டக் குழுவின் தலைவர் மெடிக்கல் பரமசிவம்.

“அணைகள் பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்தவுடனேயே, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும், நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ்குமாரும், ‘வாட்டர் மேனேஜ்மென்ட் இன்டெக்ஸ்’ ஒன்றை வெளியிட்டார்கள். இரண்டுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. ‘இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படப்போகிறது. தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்’ என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதெல்லாம் நல்ல விஷயம்தான். தண்ணீரைச் சேமித்தல், காத்தல், பகிர்தல், விவசாயத்திற்கான தண்ணீர் என எல்லாவற்றையும் உள்ளடக்கி ஒரு கொள்கையை மத்திய அரசு வகுக்கும். அந்தக் கொள்கை, தண்ணீரை வர்த்தகப் பொருளாக மாற்றப்போகிறது. தண்ணீர் மேலாண்மையை கார்ப்பரேட் கையில் தரப்போகிறார்கள். நீர்நிலைகளை மேம்படுத்துவது, கொள்கை வகுப்பது என இதுவரை மாநில அரசு பார்த்த வேலையை இனி தனியார் நிறுவனம் செய்யும். நாம் தனியார் நிறுவனத்துக்குப் பணம் கட்டுவோம். சாலையைப் போட்டுவிட்டு, டோல்கேட் வைத்துத் தனியார் நிறுவனங்கள் பணம் வசூலிப்பதைப் போல, எதிர்காலத்தில் ஒரு அணையைக் கட்டிவிட்டுத் தண்ணீர் திறந்துவிடப் பணம் கேட்பார்கள்” என்று எச்சரிக்கிறார் ஊடகவியலாளர் அய்யநாதன்.

அணைகள் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராகச் சட்டமன்றத்தில் தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானம் என்ன விளைவை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை. ஏற்கெனவே நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டங்கள் இன்னும் மத்திய உள்துறை அமைச்சகத்தில் தூங்கிக் கொண்டிருக்கின்றன. ஹூம்.

- வெ.நீலகண்டன்

இந்தியாவில் உள்ள அணைகள்

மொத்த அணைகள்- 5,254
அணைகளில் சேகரிக்கப்படும் தண்ணீர் அளவு- 253 பில்லியன் க்யூபிக் மீட்டர்

மாநிலங்களில் உள்ள அணைகள்
மகாராஷ்டிரா - 2,354
உத்தர பிரதேசம் - 906
குஜராத் - 632
கர்நாடகா- 231
தெலங்கானா - 184
ஆந்திரா- 167
தமிழ்நாடு - 127

மசோதாவின் அம்சங்கள்

* அனைத்து அணைகளிலும் ஒரே மாதிரியான பாதுகாப்பு நடைமுறைகள் கையாளப்படும்.

* தேசிய அளவில் அணைப் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும். அணைகள் பாதுகாப்புக் கொள்கை, நெறிமுறைகளை இந்த ஆணையம் செயல்படுத்தும்.

* மாநில அளவில் அமைக்கப்படும் அணைகள் பாதுகாப்புக் குழுக்கள், மாநிலத்தில் உள்ள அணைகளிலும் கண்காணிப்பு, பாதுகாப்பு உள்ளிட்டவற்றை உறுதிசெய்யும்.

* மாநிலங்களில் உள்ள அணைகளை அந்தந்த மாநிலங்களே இயக்கும். மாநிலங்களுக்குள் ஓடும் நதிகளில் அணைக்கட்டுகள் கட்டுவது குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவு செய்யலாம்.

* மாநிலங்களில் அணைகளை ஆய்வு செய்யும் அதிகாரம் தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையத்துக்கு வழங்கப்படும்.

கேரளாவின் முயற்சி

2006-ல் முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி முதல் 152 அடி வரை தண்ணீர் தேக்கிக்கொள்ள தமிழகத்துக்கு அனுமதி அளித்தது உச்ச நீதிமன்றம். அப்போது, கேரளாவில் உள்ள அனைத்து அணைகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையில் கேரள அரசு, அணைப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால், இரு மாநிலங்களுடன் தொடர்புடைய அணைகளை இந்தச் சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது.