கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

அன்பு வணக்கம்!

அன்பு வணக்கம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பு வணக்கம்!

அன்பு வணக்கம்!

அன்பு வணக்கம்!

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

இது கூட்டணி சீஸன். வேற்றுமையில் ஒற்றுமை காணும் நோக்கத்தோடு, டொயோட்டாவும் சுஸூகியும் ஒரு பக்கம் கைகோர்கின்றன. இன்னொரு பக்கம், மஹிந்திராவும் ஃபோர்டும் நெருங்கிவருகின்றன. இந்தச் சூழ்நிலையில், ஃபோக்ஸ்வாகன் குரூப் நிறுவனங்களுக்குள் நிறைய மாற்றங்கள் நடக்கத் துவங்கியிருக்கின்றன. ஃபோக்ஸ்வாகன் குழுமம் ஒரு மிகப் பெரிய திட்டத்தைத் தீட்டியிருக்கிறது. அதன்படி, இந்தியாவைப் பொறுத்தவரை ஃபோக்ஸ்வாகன் குழும நிறுவனங்களுக்கு, ஸ்கோடாதான் முன்னத்தி ஏராகச் சென்று வழி நடத்தும். அதனால், வாடிக்கையாளர்களுக்கு என்ன பலன்?

தலைமைப் பொறுப்புக்குத் தயாராகிவிட்ட ஸ்கோடா, MQB A0-IN என்ற புதிய பிளாட்ஃபார்மில்  முதல் காம்பேக்ட் எஸ்யூவி காரைத் தயாரிக்கப்போகிறது. ‘ஹூண்டாய் க்ரெட்டாவுக்குப் போட்டியாகக் களம் இறங்கவிருக்கும் இது, தொழில்நுட்பத்தில் புதிய பரிமாணத்தைக் காட்டும். ஜெனிவா மோட்டார் ஷோவில் ஸ்கோடா காட்சிபடுத்திய ‘விஷன் X’ என்ற எஸ்யூவி மாடலின் சாயலை, இந்தப் புதிய எஸ்யூவி-யில் எதிர்பார்க்கலாம்’ என்று சொல்லி, ஆவலைக் கூட்டுகிறது ஃபோக்ஸ்வாகன். புதிய எஸ்யூவி, இந்திய சாலைகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்கிறது. இதோடு நின்றுவிடவில்லை, ஃபோக்ஸ்வாகனின் மாஸ்டர் பிளான்.

இந்த எஸ்யூவி அறிமுகத்துக்கு பிறகு, ஃபோக்ஸ்வாகனும் இதை அடிப்படையாகக் கொண்டு வேறு ஒரு எஸ்யூவி-யைக் கொண்டுவரும். செலவுகளை கட்டுக்குள் வைக்க, இந்த இரண்டு எஸ்யூவி கார்களிலும் சில பாடி பேனல்கள் ஒன்றாகவே இருக்கும். ஆனால், தத்தமது தனித்துவங்களை இழக்காமல் ஃபோக்ஸ்வாகனும் ஸ்கோடாவும் இந்த எஸ்யூவி கார்களை வடிவமைக்கும்.

இன்னொரு பக்கம் மராட்டிய மாநிலம் - சக்கானில் இருக்கும் ஃபோக்ஸ்வாகன் தொழிற்சாலையை நடத்தும் பொறுப்பையும் ஸ்கோடாவே மேற்கொள்ள இருக்கிறது. இவ்வளவு விரிவாக மாற்றங்களை மேற்கொண்டிருப்பதால், ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் ஃபோக்ஸ்வாகன் போலோ, ஏமியோ, வென்டோ மற்றும் ஸ்கோடா ரேபிட், போன்ற கார்களின் தயாரிப்பில் எந்த மாற்றங்களும் இருக்காது என்று சொல்கிறது ஃபோக்ஸ்வாகன். காரணம், இவை தயாரிக்கப்படும் PQ25 பிளாட்ஃபார்ம் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்குமாம்.

இந்த புதிய முயற்சிக்கு ஃபோக்ஸ்வாகன் வைத்திருக்கும் பெயர் - இந்தியா 2.0.

முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஆசிரியர்