Published:Updated:

இசை கொரியாவிலிருந்து வருது!

இசை கொரியாவிலிருந்து வருது!
பிரீமியம் ஸ்டோரி
இசை கொரியாவிலிருந்து வருது!

பி.ஆரோக்கியவேல் - படங்கள்: தி.குமரகுருபரன்

இசை கொரியாவிலிருந்து வருது!

பி.ஆரோக்கியவேல் - படங்கள்: தி.குமரகுருபரன்

Published:Updated:
இசை கொரியாவிலிருந்து வருது!
பிரீமியம் ஸ்டோரி
இசை கொரியாவிலிருந்து வருது!

“கல்யாண வயசுதான் வந்துடுச்சுடி” என்பது போன்ற பாடல்களுக்கு இருக்கும் அதே வரவேற்பு... இன்னும் கேட்டால், அதையும் தாண்டி வெறித்தனமான ஒரு மோகம், கே- பாப் எனப்படும் கொரியன் பாப் இசைமீது, பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இருக்கிறது.

கடந்த சனிக்கிழமை சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற ‘கே-பாப்’ நிகழ்ச்சியில் கொரியாவின் பாப் பாடகர்கள் உச்சரித்த ஒவ்வொரு வார்த்தைக்கும், உடல் அசைவுக்கும் அரங்கு முழுதும் நிறைந்திருந்த இளம் மாணவிகள் எழுப்பிய மகிழ்ச்சிக் கூச்சலையும் உற்சாக ஆரவாரங்களையும் நீங்கள் பார்த்திருந்தால், முதல் பத்தியை நன்றாக உள்வாங்கியிருப்பீர்கள்.

கொரியாவின் இசை நாயகன் கிம் யோன் ஜூங்-கை நேரில் சந்திப்பதற்காக, பாங்காக், கொரியா என்று கடந்த ஓராண்டுக்குள் இரண்டு முறை, இசை யாத்திரை போய் வந்தவர் அம்பிகா தேவி.

இசை கொரியாவிலிருந்து வருது!

“யூ டியூபில் ஏதோ பாடலைக் கேட்டுக்கொண்டிருந்த போதுதான் கே-பாப் ஆல்பம் ஒன்று அறிமுகமானது. இசை ஆல்பத்தில் பாடியவரே கே-டிராமாவில் (சீரியல் டிராமா மாதிரி) நடிப்பார்கள் என்பதால் கே-டிராமா பார்க்க ஆரம்பித்தேன். நம் ஊர் டிவி டிராமாக்களுக்கெல்லாம் ஏறக்குறைய குடும்பச் சண்டை சச்சரவுகள்தான் அடிப்படை. ஆனால் கே- டிராமாவில் புதிய புதிய களங்களில் கதை சொல்கிறார்கள். எப்படிப்பட்ட டிராமாவாக இருந்தாலும் 32 எபிஸோடுகளுக்குள் அடக்கிவிடுகிறார்கள்” என்பவர், “பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களைவிட, மாணவிகள்தான் கே-பாப் இசை மற்றும் கே- டிராமாக்கள்மீது

இசை கொரியாவிலிருந்து வருது!

பித்துப்பிடித்து அலைகிறார்கள். திரையில் தோன்றுகிறவர்களை உச்ச நட்சத்திரமாக ஆராதிக்கிறார்கள். காரணம் நம்மூர் சினிமாவாக இருந்தாலும் சரி, சீரியலாக இருந்தாலும் சரி, அந்தக் கதைகளில் வரும் பெண் கதாபாத்திரங்கள் பலவும் ஏதாவது ஒருவகையான வன்முறையோடுதான் டீல் செய்யப்படுகின்றன. ஆனால், கே-டிராமாவில் அப்படியல்ல. தன் மகளை அப்பா எப்படி செல்லமாக நடத்துவாரோ அப்படித்தான் ஆண் பாத்திரங்கள் பெண் பாத்திரங்களைப் பாசத்தோடும் பரிவோடும் மென்மையோடும் நடத்துகின்றன’’ என்கிறார்.

சென்னையில் இந்தக் காய்ச்சல் பரவ முக்கிய காரணம் - சஞ்சய் ராம்ஜி! மியூசிக் அகாடமியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்கு ‘கே-பாப்’ ரசிகர்களைக் கூட்டியது மட்டுமல்ல, ‘கே-வேவ்’ என்ற பெயரில் கடந்த பல வருடங்களாக இவர்கள் இயங்க, முகநூல், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், இணையதளம்  என்று பல தளங்களிலும் அடித்தளம் அமைத்தவர் இவர்தான்.

இசை கொரியாவிலிருந்து வருது!

“மேற்கத்திய இசை வடிவின் ஒரு கீற்றாகவே கே-பாப் பார்க்கப்பட்டாலும் இதற்கென்று தனி அடையாளங்கள் உள்ளன. ஒரு மியூசிக் ஆல்பத்தை உருவாக்க அவர்கள் பல மாதங்கள்... ஏன், சில சமயங்களில் ஒரு வருடம்கூட எடுத்துக் கொண்டு,  எல்லா வகைகளிலும் மேம்படுத்தித்தான் வெளியிடுகிறார்கள். இசைக்குச் செலுத்தும் அதே கவனத்தை நடனம், காட்சியமைப்பு ஆகியவற்றுக்கும் செலுத்துகிறார்கள். கே-பாப் நம்மூர் மாணவிகளைக் கவர இதுவும் ஒரு முக்கிய காரணம்’ என்கிறார்.

“தமிழுக்கும் எங்கள் மொழிக்கும் ஏராளமான ஒற்றுமைகள் இருக்கின்றன. ‘அம்மா, அப்பா, சோறு, உரம், புல், புது, வா...’ போன்ற வார்த்தைகள் எங்கள் மொழியிலும் உண்டு. வயதில் பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பது, தாய் தந்தை பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்று தமிழ்நாட்டில் குடும்ப உறவுமுறைகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே அளவுக்கு எங்கள் நாட்டிலும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். எங்கள் நாட்டு கே-பாப் மற்றும் கே- டிராமாஸ் இங்கே பலரையும் கவர்ந்திருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கும் என்று நினைக்கிறோம்” என்கிறார் தென்கொரியாவின் தூதரக அதிகாரி, யோங் தே கிம்.

இசை கொரியாவிலிருந்து வருது!

உலக அரங்கில், மேற்கத்திய இசை உலகின் சங்கப்பலகை எனக் கருதப்படும் ‘பில்போர்ட் மியூசிக் அவார்டு’ தொடங்கி, பல விருதுகளைக் கொரியாவின் BTS இசைக்குழு வென்று கொண்டிருக்கிறது. ட்விட்டர், முக நூல் ஆகியவற்றில் எல்லாம் இசை என்று தட்டினாலே கே-பாப் இசைக் கலைஞர்களும் முதல் பக்கத்தில் வருகிறார்கள். உதாரணத்துக்கு பிடிஎஸ் குழுவை எடுத்துக்கொண்டால், கடந்த ஆண்டில் இந்தக் குழு பற்றிச் செய்யப்பட்ட ட்வீட் மற்றும் ரீட்வீட் ஆகியவற்றின் எண்ணிக்கை ஐம்பது கோடி! அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் , மேற்கத்திய நாடுகள் கொண்டாடும் இசை நாயகன் ஜஸ்டின் பீபர் ஆகிய இரண்டு பேர்களுக்குக் கிடைத்திருக்கும் ட்வீட் மற்றும் ரீட்வீட் ஆகியவற்றைச் சேர்த்தால்கூட பிடிஎஸ்-ஸின் எண்ணிக்கையை எட்ட முடியாது. அந்த அளவுக்குக் கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்திருக்கிறது கொரியாவின் பிடிஎஸ் என்ற இசை ஏவுகணை.