Published:Updated:

`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்!’ - நெகிழும் அம்மா செலீனா

. நவம்பர் 10 முதல் டிசம்பர் 7 வரை உலகஅழகிப் போட்டியில் கலந்துகொள்ளும் பெண்களுக்கான அறிவு மற்றும் உடல் சார்ந்த போட்டிகள் பலகட்டமாக நடைபெற உள்ளன.

`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்!’ - நெகிழும் அம்மா செலீனா
`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்!’ - நெகிழும் அம்மா செலீனா

லகஅழகிப் போட்டி பற்றிய அறிவிப்புகள் பரபரப்பான செய்திகளாகப் பரிமாறப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் உலகஅழகிப் போட்டி வெவ்வேறு நாடுகளில் நடைபெறும். இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்துவர். இறுதியாக, உலகஅழகியாக ஒரு பெண் தேர்வுசெய்யப்பட்டு வாகை சூட்டப்படுவார்.

இந்த வருடத்தின் மிஸ் வேர்ல்டு போட்டி, அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ம் தேதி சீனாவில் நடைபெற உள்ளது. இதில், 129 நாட்டைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொள்கின்றனர். நவம்பர் 10 முதல் டிசம்பர் 7 வரை உலகஅழகிப் போட்டியில் கலந்துகொள்ளும் பெண்களுக்கான அறிவு மற்றும் உடல் சார்ந்த போட்டிகள், பல கட்டங்களாக நடைபெற உள்ளன. பல போட்டிகளைக் கடக்கும் ஒரு பெண், உலகஅழகி பட்டம் பெறுவார். இந்தப் போட்டியில், கடந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த மனுஷி சில்லர்  வாகை சூடியதால், இந்த ஆண்டு நடைபெறும் போட்டி, மிகுந்த எதிர்பார்ப்புக்கு உரியதாகிவிட்டது. இந்தியாவின் சார்பாகப் போட்டியிடும் அனுக்கீர்த்தி வாஸ் மீதும் அனைவரின் கவனமும் குவிந்துள்ளது.

இதுகுறித்து அனுக்கீர்த்தி வாஸின் அம்மா செலீனாவிடம் பேசினேன். ``மிஸ் இந்தியா பட்டத்தை அனு, வென்றதுமே நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால், அவளுடைய கனவு, மிஸ் வேல்ர்டு பட்டத்தைப் பெறுவதுதான். அதனால், சினிமாவில் கமிட் ஆகாமல் மிகுந்த தன்னம்பிக்கையுடன் சீனாவுக்குப் போயிருக்கிறாள். டான்ஸ், ஸ்போர்ட்ஸ் என சப் டைட்டிலுக்கான நிறையப் போட்டிகள் சீனாவில் நடந்துகொண்டிருக்கிறது. தன்னுடைய முழுத் திறமையையும் அனு வெளிப்படுத்திவருகிறாள். 'டஸ்க்கி ஸ்கின்தான் என்னுடைய  ப்ள்ஸ்' என்று அனு தன்னம்பிக்கையுடன் பல இடங்களில் சொல்லியிருக்கிறாள். அந்த தன்னம்பிக்கை நிச்சயம் அவளை வெற்றிபெறச் செய்யும். என்றாலும், இந்தியர்களின் ஆதரவும் நிச்சயம் தேவை. மிஸ் வேல்ர்டுக்கான வாக்கெடுப்பில், பொதுமக்கள் அவளுக்கு வாக்களிக்க வேண்டும்" என்றார் செலீனா.