Published:Updated:

மலரும் நினைவுகள் - காதலைக் கொண்டாடும் ஆடைகள்...

மலரும் நினைவுகள் - காதலைக் கொண்டாடும் ஆடைகள்...
பிரீமியம் ஸ்டோரி
மலரும் நினைவுகள் - காதலைக் கொண்டாடும் ஆடைகள்...

கலைகு.ஆனந்தராஜ்

மலரும் நினைவுகள் - காதலைக் கொண்டாடும் ஆடைகள்...

கலைகு.ஆனந்தராஜ்

Published:Updated:
மலரும் நினைவுகள் - காதலைக் கொண்டாடும் ஆடைகள்...
பிரீமியம் ஸ்டோரி
மலரும் நினைவுகள் - காதலைக் கொண்டாடும் ஆடைகள்...

டிகை சமந்தாவின் திருமண நிகழ்வின் ஹைலைட், அவரது புடவை. அவருக்கும் அவர் காதல் கணவர் நாக சைதன்யாவுக்கும் இடையேயான பொக்கிஷக் காதல் தருணங்கள் எம்ப்ராய்டரிங் ஓவியங்களாக டிசைன் செய்யப்பட்டிருந்த அந்தப் புடவை, ஃபேஷன் ப்ரியர்களை ‘வாவ்’ சொல்ல வைத்தது. தற்போது அந்த வகை ‘லவ் ஸ்டோரி கான்செப்ட் டிசைனிங்’தான் பிரைடல் ஆடைகளில் ட்ரெண்ட். அவற்றை வடிவமைக்கும் ஆடை வடிவமைப்பாளர்களுக்கான வரவேற்பு அதிகரித்துவருகிறது. அப்படி ஒரு டிசைனர்தான், சென்னையைச் சேர்ந்த ரஞ்சிதா பத்ராத்ரி.

மலரும் நினைவுகள் - காதலைக் கொண்டாடும் ஆடைகள்...

‘`வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே நடக்கிற வைபவம் கல்யாணம். அதை மணமக்களும் அவர்கள் குடும்பத்தாரும் கிராண்ட் நிகழ்வாகவும் மறக்க முடியாத மெமரீஸாகவும் அமைத்துக்கொள்ள ஆசைப்படுவாங்க. அதுக்கான க்ரியேட்டிவ் ஐடியாக்கள் அடுத்தடுத்தக் கட்டங்களை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கு. அதன் ஓர் அங்கம்தான், தற்போதைய ட்ரெண்டான ‘லவ் ஸ்டோரி கான்செப்ட்’ டிசைனிங். மணமக்கள், தங்களுக்கு இடையேயான அற்புதத் தருணங்களை டிசைன் செய்த பிரைடல் ஆடைகளை விரும்ப ஆரம்பிச்சிருக்காங்க. இதில் டிசைனைப் பொறுத்து விலை மாறுபடும். மணமகளின் புடவை, பிளவுஸ் உள்ளிட்ட இந்தியன் டிரஸ் மற்றும் வெஸ்டர்ன் டிரஸ், ஃப்யூஷன் டிரஸ் என எல்லா வகை ஆடைகளிலும் இதை டிசைன் செய்யலாம். மணமகனுக்கு இந்தியன் டிரஸ், வெஸ்டர்ன் டிரஸ், இண்டோ வெஸ்டர்ன் ஆடைகளில் டிசைன் செய்யலாம்’’ என்ற ரஞ்சிதா, தான் இந்த க்ரியேட்டிவ் பிளாட்ஃபார்முக்கு வந்ததைப் பற்றியும், சமீபத்தில் டிசைன் செய்த லவ் ஸ்டோரி கான்செப்ட் பிரைடல் டிரஸ் பற்றியும் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

மலரும் நினைவுகள் - காதலைக் கொண்டாடும் ஆடைகள்...

ஃபேஷன் ஆர்வம்!

“சின்ன வயசில் இருந்து எனக்கு ஃபேஷன் துறையில் ஆர்வம் அதிகம். சென்னையில் எம்.ஏ முடிச்சுட்டு, மலேசியாவில் கம்ப்யூட்டர் டிசைனிங் துறையில் வொர்க் பண்ணினேன். பார்ட் டைம் ஃபேஷன் டிசைனரா இருந்தேன். அந்த நாட்டில் வீட்டிலிருந்தே டிரஸ் டிசைனிங் பண்ணலாம், டெய்லர் ஷாப் வெச்சுக்கலாம். ஆனா, தனி பிராண்டா நம்ம டிரஸ்ஸை சேல்ஸ் பண்ண சம்பந்தப் பட்ட கோர்ஸ் படிக்கணும். அதனால், டிப்ளோமா இன் ஃபேஷன் டிசைனிங் கோர்ஸ் படிச்சேன். வேலையை விட்டுட்டு, முழுநேர டிசைனரா வொர்க் பண்ணினேன். என்னோட ஃப்ரெண்ட்ஸ் சிலர் ஈவன்ட் பிளானராக இருந்தாங்க. அவங்களுக்கு ஃபேஷன் ஷோ, அவார்டு ஃபங்ஷன், கல்யாணம் உள்ளிட்ட நிறைய நிகழ்வுகளுக்கும், தனிப்பட்ட முறையிலும் டிரஸ் டிசைனிங் பண்ணிக்கொடுத்தேன். நம்ம இந்தியன் ஸ்டைல்லதான் அதிகம் டிசைன் பண்ணுவேன். 2015-ம் வருஷம் சென்னைக்கு ஷிஃப்ட் ஆனேன். தி.நகர்ல இருக்கிற என் வீட்டிலேயே பொட்டீக் மற்றும் மேனுஃபேக்சரிங் யூனிட்டை ஆரம்பிச்சேன். டிசைனிங்குடன் எம்ப்ராய்டரிங் வேலைப்பாடுகள்ல அதிக கவனம் செலுத்தினேன். குழந்தைகள் டிரஸ்ல தொடங்கி பிரைடல் டிரஸ் வரை, அதுவே என் யுனீக் அடையாளமாச்சு. 

மலரும் நினைவுகள் - காதலைக் கொண்டாடும் ஆடைகள்...

லவ் ஸ்டோரி எம்ப்ராய்டரிங்! 

சமந்தாவின் கல்யாண நேரத்தில்தான், லவ் ஸ்டோரி கான்செப்ட் டிரஸ் பற்றி பலருக்கும் தெரியவந்தது. ஆனா, அந்த ஐடியாவில் எனக்கு அதற்கு முன்பே ஆர்வம் இருந்தும், பட்ஜெட் அதிகமாகும் என்பதால் டிசைன் பண்ண முயற்சி செய்யலை. சமந்தாவின் அந்த ‘லவ் ஸ்டோரி’ புடவையின் விலை, பத்து லட்சத்துக்கும் மேல். இந்நிலையில் என் தோழி ஒருத்தவங்க, நான்கு வருட சவால்களுக்குப் பிறகு தன் காதலரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அவங்க தான், ‘எங்க காதல் காலத்தின் நினைவுகளை நாங்க அப்பப்போ பார்த்து ரசிக்கணும்; மற்றவங்களுக்கும் அதைச் சொல்லணும். அதனால அவற்றையெல்லாம் என்னோட வெடிங் டிரஸ்ல டிசைன் பண்ணிக்கொடு’னு கேட்டாங்க. அதன்படி, அவங்க லவ் புரபோஸ் பண்ணிக்கிட்ட தருணம் முதல் திருமணம் வரை அவங்க சொன்ன நிகழ்வுகளை எல்லாம் இடம், ஆடைகள் உள்ளிட்ட டீட்டெய்ல்ஸுடன் ஓவியங்களா வரைஞ்சுக்கிட்டேன். ரெஃபரன்ஸுக்கு, தோழியும் அவங்க காதலரும் இருக்கிற சில போட்டோஸ் வாங்கிக்கிட்டேன். ஒரு மாதத் திட்டமிடலுக்குப் பிறகு, மேனுஃபேக்சரிங் வேலைகளைத் தொடங்கினேன்.

மலரும் நினைவுகள் - காதலைக் கொண்டாடும் ஆடைகள்...

தோழியின் காதலர் காரில் வந்து புரபோஸ் பண்ணினது, அவர் அடிக்கடி இவங்களுக்கு பொக்கே கொடுக்கிறதுனு... இப்படி திருமணம் வரைக்குமான 12 மறக்க முடியாத நினைவுகளை மணமகளின் ஆஃப் வொயிட் லெஹங்கா மெட்டீரியலில் எம்ப்ராய்டரிங் செய்தேன். 12-க்கும் அதிகமானால், ஸ்டோரி தெளிவாகவும் அட்ராக்டிவாகவும் தெரியாது. டிரஸ்ல முன்புறம் ஆறு, பின்புறம் ஆறு ஸ்டோரி இருக்கிற மாதிரி டிசைன் பண்ணினேன். சில்வர், கோல்டு, ஆன்டிக்னு மூணு கலர் த்ரெட் மற்றும் ஸ்டோன் எம்ப்ராய்டரிங் செய்தது சவாலான வேலை. நான் டிசைனிங் வேலைகளை கவனிச்சுக்க, எம்ப்ராய்டரிங் பண்ண 12 வேலையாட்கள் இருந்தாங்க. எந்தத் தவறும், பிசிறும் இல்லாம மூணு மாசத்துல பியூட்டிஃபுல்லா எம்ப்ராய்டரிங் வொர்க் முடிச்சு, இறுதியா ஸ்டிச்சிங் பண்ணினோம். இந்த ஆடையோட விலை 1,50,000 ரூபாய்.

மலரும் நினைவுகள் - காதலைக் கொண்டாடும் ஆடைகள்...

மணமகனுக்கும் உண்டு ‘லவ் ஸ்டோரி’ ஆடை!

தோழியின் பிரைடல் டிரஸ்ஸை பார்த்த அவர் காதலர், ‘சூப்பரா இருக்கே! என்னோட டிரஸ்லயும் இதுபோல செய்யணுமே...’னு ஆசைப்பட்டார். அவருக்கு ஷெர்வானியில், காதலர் தினத்தன்று தன் காதலிக்கு அவர் கிஃப்ட் கொடுத்து செல்ஃபி எடுத்துக்கிட்டது, ப்ரீவெடிங் போட்டோ ஷூட் உள்ளிட்ட மூன்று நினைவுகளை டிசைன் செய்து கொடுத்தோம். அந்த வேலைகளை முடிக்க மூணு வாரங்கள் ஆனது. அந்த ஆடையின் விலை 45,000 ரூபாய்.

மலரும் நினைவுகள் - காதலைக் கொண்டாடும் ஆடைகள்...

இணையற்ற சந்தோஷம்!

கடந்த மே 25-ம் தேதி தோழிக்கும் அவர் கணவருக்கும் திருமணம் முடிந்தது. ரெண்டு பேரும் தங்களோட லவ் ஸ்டோரி பிரைடல் ஆடைகளில் மணமேடையில் நின்னப்போ, அவங்க அடைந்த சந்தோஷத்துக்கு இணை இல்லை. அவங்களோட உறவினர்கள், ஃப்ரெண்ட்ஸ்னு எல்லோரும் ‘ராக்கிங்!’னு பாராட்ட, அதே சந்தோஷத்தோட எனக்கு தேங்க்ஸ் சொன்னாங்க. என்கிட்டயும் கிட்டத்தட்ட 200 பேர் அந்த டிரஸ்ஸை பற்றி விசாரிச்சிருப்பாங்க. நம்ம உழைப்புக்கான பலன் கிடைக்கிற தருணங்கள் ரொம்ப அழகானவை!

மலரும் நினைவுகள் - காதலைக் கொண்டாடும் ஆடைகள்...

அடுத்த கட்டத்தை நோக்கி!

முன்பெல்லாம், ‘அந்த நடிகர், நடிகை பயன்படுத்தின டிரஸ் மாதிரி டிசைன் பண்ணிக்கொடுங்க’னு பலரும் கேட்பாங்க. இப்போ பெரும்பாலும், ‘இதுவரை யாருமே பயன்படுத்தாத மாதிரி யுனீக்கான டிரஸ் வேணும்’னுதான் கேட்கிறாங்க. அதில், ‘லவ் ஸ்டோரி கான்செப்ட்’ முதல் இடத்தில் இருக்கு. இந்த கான்செப்ட்ல இப்போ எங்ககிட்ட மூணு ஆர்டர் புராசஸ்ல இருக்கு. மலேசியா, சிங்கப்பூரிலுள்ள தமிழ்க் குடும்பத்தினர், தங்களோட கல்யாண ஷாப்பிங்க்கு  சென்னைக்குத்தான் வர்றாங்க. அவங்களும் இப்போ ‘லவ் ஸ்டோரி’ கான்செப்ட் ஆடைகளை அதிகம் விரும்புறாங்க. க்ரியேட்டிவிட்டியோடு யோசிச்சு, யுனீக்கான டிசைன்களை உருவாக்கி, மற்ற டிசைனர்களோட தயாரிப்புகளையும்  தொடர்ந்து ஃபாலோ செய்து, ட்ரெண்ட்டுக்கு ஏற்ப நம்மை அப்டேட் பண்ணிக்கிட்டா... பெரிய சக்ஸஸ் பார்க்கலாம்!”