Published:Updated:

சச்சினை வியக்க வைத்த தமிழரின் ஓவியம்!

சச்சினை வியக்க வைத்த தமிழரின் ஓவியம்!
சச்சினை வியக்க வைத்த தமிழரின் ஓவியம்!

தன் மினிமலிச ஓவியங்கள் மூலம் தமிழகத்தில் பரவலான கவனத்தைப் பெற்றவர் ஓவியர் சந்தோஷ் நாராயணன். இவர் சச்சினின் 100 செஞ்சுரிகளைக் கொண்டு வரைந்த புகைப்படம் சச்சினுக்கு பரிசளிக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்த சச்சின் டெண்டுல்கர்  அதன் நுணுக்கமான விஷயங்களைப் பாராட்டியுள்ளார். இந்த ஓவியம் குறித்து சந்தோஷ் நாராயணனிடம் பேசினோம். 

சச்சினை வியக்க வைத்த தமிழரின் ஓவியம்!

``இந்த ஓவியம் ரொம்ப நாளைக்கு முன்னாடி வரைஞ்சது. அவரோட செஞ்சுரிகளை மையமா வச்சு வரைஞ்ச typography potrait அது. அதுல சச்சின் அடிச்ச ஒவ்வொரு செஞ்சுரிகளைப் பத்தியும் சின்னச் சின்ன தகவல் இருக்கும். ஸ்போர்ட் ஸ்டார் பத்திரிகையோட ஆசிரியர் சச்சினை சந்திக்கப் போறேன். உங்களோட வொர்க்க தான் கிஃப்ட் பண்ணப் போறேன்னு சொன்னாரு, சச்சின் அதைப் பார்த்து ரொம்ப நேரம் பாராட்டினதா சொன்னாங்க. ரொம்ப சந்தோஷம்'' என்றார். 

சச்சினை வியக்க வைத்த தமிழரின் ஓவியம்!

 மினிமலிச ஓவியங்கள் மட்டுமின்றி, வாட்டர் கலர், டிஜிட்டல் பெயின்டிங், புத்தக வடிவமைப்பு எனப் பல தளங்களில் இயங்கி வருபவர். பல வித்தியாசமான நுணுக்கமான இவரது வேலைப்பாடுகள் சுவாரஸ்ய தன்மையுடன் இருக்கும். இவர் எழுதிய 'கலைடாஸ்கோப்' புத்தகம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.