Published:Updated:

உங்கள் காரில் ஒரு தோட்டம்! - குஷ்பூ ரஸ்தோகி

உங்கள் காரில் ஒரு தோட்டம்! - குஷ்பூ ரஸ்தோகி
பிரீமியம் ஸ்டோரி
உங்கள் காரில் ஒரு தோட்டம்! - குஷ்பூ ரஸ்தோகி

அடடே ஐடியாஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்

உங்கள் காரில் ஒரு தோட்டம்! - குஷ்பூ ரஸ்தோகி

அடடே ஐடியாஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்

Published:Updated:
உங்கள் காரில் ஒரு தோட்டம்! - குஷ்பூ ரஸ்தோகி
பிரீமியம் ஸ்டோரி
உங்கள் காரில் ஒரு தோட்டம்! - குஷ்பூ ரஸ்தோகி

‘`நான் வடிவமைத்த பசுமை வாகனம், சர்வதேச அளவிலும் கவனிக்கப்பட்டிருக்கிறது!’’ - பெருமையும் பெரிய புன்னகையுமாகச் சொல்கிறார் டெல்லியில் வசிக்கும் குஷ்பூ ரஸ்தோகி. வாகனப் புகையால் காற்று மாசுபடுவதைத் தடுக்கும் வகையில் வாகனத்தின் மேற்கூரையில் சிறு தோட்டம் அமைத்து, பசுமை கலந்ததொரு கண்டுபிடிப்பைத் தந்திருப்பவரிடம் பேசினோம்.

உங்கள் காரில் ஒரு தோட்டம்! - குஷ்பூ ரஸ்தோகி

‘`நான் ஃபுட் டெக்னாலாஜி பட்டதாரி. பல நிறுவனங்களில் பணியாற்றினேன். இப்போது மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து பணியாற்றிவருகிறேன். டெல்லி நகரத்தில் காற்று மாசுபடுவதால் பல நாள்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது வழக்கமாகி வருகிறது. சாலையில் நடமாடும்போது மாஸ்க் அணிந்தும், வீட்டுக்குள் ஏர் ப்யூரிஃபையர் உபயோகப்படுத்தியும் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது’’ என்கிறவருக்கு, போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவஸ்தையுடன் நின்றுகொண்டிருந்த  சில நிமிடங்களில்தான், வாகனத்தின் மேற்கூரையில் சிறு தோட்டம் அமைக்கும் எண்ணம் தோன்றியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் காரில் ஒரு தோட்டம்! - குஷ்பூ ரஸ்தோகி

‘`முதலில், வாகனத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் மேற்கூரையில் தட்டு போன்ற பகுதியை உருவாக்கினேன். அடுத்ததாக, நீண்ட நேரம் ஈரப்பதத்துடன் இருக்கும் வளமான மண் கலவையைத் தயாரித் தேன். எந்தப் பருவ நிலையிலும் சாலையின் தூசுகளைத் தாக்குப்பிடித்து வளரும் செடிகளைப் பல கட்ட விசாரணைகள், ஆலோசனைகள், சோதனைகளுக்குப் பிறகு தேர்ந்தெடுத்தேன். வாகனத்தின் தோற்றத்தை மெருகூட்டும் வகையில் டிசைன் செய்தேன்; எளிதில் பொருத்தக்கூடிய உலோகங்களைப் பயன்படுத்தினேன். வாகனத்தில் பயணம் செய்பவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதில் அதிகக் கவனம் செலுத்தினேன். இப்படித்தான், மிகக் குறைந்த செலவில், பராமரிக்க எளிதான பசுமை வாகனம் என் முன் உருப்பெற்றது’’ என்கிறவரை, வாகன உரிமையாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் பலர், தங்கள் வாகனங்களைப் பசுமை வாகனமாக மாற்றித் தரச் சொல்லி தொடர்புகொள்கின்றனர்.

``சமூக வலைதளங்களில் GreenGaddi என்ற பெயரில் பசுமை வாகனம் குறித்த தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறேன். இந்தியா முழுவதும் இந்தப் பசுமை வாகனத்தை அறிமுகம் செய்து, பயன்பாட்டைப் பரவலாக்குவதே என் நோக்கம்’’ - நம்பிக்கையும் சமூக அக்கறையும் நிரம்பச் சொல்கிறார், குஷ்பூ ரஸ்தோகி!