Published:Updated:

` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல!' - கொதிக்கும் அனிதா குடும்பம்

` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல!' - கொதிக்கும் அனிதா குடும்பம்
` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல!' - கொதிக்கும் அனிதா குடும்பம்

` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல!' - கொதிக்கும் அனிதா குடும்பம்

``னிதாவோட பிறந்தநாள் அன்னிக்கு 'டாக்டர் எஸ். அனிதா எம்.பி.பி.எஸ்' என்ற படத்தோட போஸ்டரைப் பார்த்ததுமே அப்பாவுக்கும் எனக்கும் பெரிய அதிர்ச்சியா இருந்துச்சு. அப்போது இருந்தே அப்பாவுக்கு அனிதாவோட வாழ்க்கைய அடிப்படையா வெச்சு படம் எடுக்கிறதுல விருப்பம் இல்ல. பட வேலைகளை நிறுத்துவதற்காக எங்க தரப்புல இருந்து எவ்வளவோ முயற்சி செய்தோம். ஆனாலும், படத்தை நிறுத்துறதுக்கான எந்த அறிகுறியும் தெரியல. அதனாலதான் இப்போ சென்னை உயர் நீதிமன்றத்துல வழக்கு போட்டிருக்கோம்” என ஆதங்கத்தோடு பேசுகிறார் அனிதாவின் அண்ணன் மணிரத்தினம். தொடர்ந்து நம்மிடம் பேசியவர்,

``எங்களுக்கு இயக்குநர் அஜய் யாருன்னே தெரியாது. அதுமட்டுமில்ல, அவர் படம் எடுக்கிறதுக்கு முன்னாடியும் சரி, போஸ்டர் வெளியிட்டதுக்கு அப்பறமும் சரி... ஒரு வார்த்தைகூட எங்க யார்ட்டேயும் பேசவோ, அனுமதி வாங்கவோ இல்ல. அவங்களுக்கு அனிதாவைப் பத்தி எதுவுமே தெரியாது. நீட் தேர்வை எதிர்த்து தற்கொலை பண்ணிக்கிட்டதை மட்டும் தெரிஞ்சுக்கிட்டு அவரால எப்படிப் படம் பண்ண முடியும். அதோட, அந்த இயக்குநர் பா.ஜ.க ஆதரவாளர். இது ஒண்ணே போதும் அனிதாவைப் பற்றி படம் எடுக்க அவர் சரியான நபர் இல்லை எனச் சொல்வதற்கு. 

அனிதாவின் தந்தை சண்முகம்

பா.ஜ.க சித்தாந்தம்கொண்ட ஒருவர், இந்த விஷயத்தை எப்படி அணுகுவாரோன்னு எங்களுக்குப் பயமா இருக்கு. கோர்ட்டுல கேஸ் போடுறதுக்கு முன்னாடி நான் நேர்ல போய் அந்த இயக்குநரைப் பார்க்க முயற்சி பண்ணினேன். ஆனா, அவர் எங்களைப் பார்க்கவே விரும்பல. உள்ள இருந்துக்கிட்டே இல்லைன்னு சொல்ல வெச்சாரு. குறும்பட இயக்குநர்கள்கூட எங்ககிட்ட சொல்லிட்டுதான் படம் எடுக்கிறாங்க. ஆனா, இவரு எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கலை. அனிதாவோட மரணத்தை வெச்சுப் பேர் வாங்கிடணும், பணம் பார்த்துடணும்ங்கிறது மட்டும்தான் அவரோட எண்ணமா இருக்கு. எங்களோட உணர்வுகளைப் பத்தியெல்லாம் அவர் கவலைப்படவே இல்ல. நிஜமாவே இந்த விஷயம் எங்களை மன உளைச்சலுக்குத் தள்ளிடுச்சு. அனிதாவோட ஆத்மாவும் நிச்சயமா இதை ஏத்துக்காது” என்றார் வருத்தத்துடன். 

 `தன் மகளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் அஜய்குமார் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் வேறு எவரும் படம் எடுக்கவோ, விளம்பரப்படுத்தவோ கூடாது' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் அனிதாவின் தந்தை சண்முகம். இந்த வழக்கின் முடிவுக்காகக் காத்திருக்கின்றனர் அனிதா குடும்பத்தினர். 

அடுத்த கட்டுரைக்கு