Published:Updated:

என்னால் பேச முடியாவிட்டாலும் என் வெற்றி பேசும்!

என்னால் பேச முடியாவிட்டாலும் என் வெற்றி பேசும்!
பிரீமியம் ஸ்டோரி
என்னால் பேச முடியாவிட்டாலும் என் வெற்றி பேசும்!

மாற்றுத்திறனாளி தொழில்முனைவோர் ஹரணி ஹரிநம்பிக்கைஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்

என்னால் பேச முடியாவிட்டாலும் என் வெற்றி பேசும்!

மாற்றுத்திறனாளி தொழில்முனைவோர் ஹரணி ஹரிநம்பிக்கைஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்

Published:Updated:
என்னால் பேச முடியாவிட்டாலும் என் வெற்றி பேசும்!
பிரீமியம் ஸ்டோரி
என்னால் பேச முடியாவிட்டாலும் என் வெற்றி பேசும்!

‘`மகளிர் சுயஉதவிக் குழுக்களை உருவாக்கி, அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து, சர்வதேச தரத்தில் பொருள்களைத் தயாரித்து விற்பதே என் லட்சியம்’’ - ஹரிணி ஹரியின் பிசினஸ் விஷன் இது. இவர் செவித்திறன், பேச்சுத்திறன் குறைப்பாடுள்ள மாற்றுத்திறனாளி. ஆன்லைனில் இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஹோம் கிராஃப்ட் பொருள்களை விற்பனை செய்துவரும் தொழில்முனைவோர். மங்களூரில் வசிக்கும் இந்த சென்னைப் பெண், தன் உணர்வுகளை எழுத்துகளாக வடித்து அனுப்பிய மெயிலும், சந்திப்பின்போது சைகை மொழியில் அவர் பேசிய விஷயமும் அழகு!

‘`என் நான்கு வயதில் செவித்திறன் குறைபாட்டுக்கு  ஆளானேன்.

என்னால் பேச முடியாவிட்டாலும் என் வெற்றி பேசும்!

வகுப்பில் முதல் வரிசையில் அமர்ந்து ஆசிரியரின் வாய் அசைவை உற்றுக் கவனித்து பாடங்களைப் புரிந்துகொள்வேன். பேச முடியாத என் உலகத்தின் தனிமை, படிப்பின் மீதான கவனத்தில் என்னைத் தள்ளி
யது. பி.எஸ்ஸி மற்றும் எம்.சி.ஏ முடித்தேன். பன்னாட்டு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பத்து வருடங்களுக்கு மேல் பணிபுரிந்தேன். என் கணவரும் என்னைப்போலவே செவித்திறன் குறைபாடு உடையவர். அவர் வட இந்தியாவில் பணியாற்றியதால், திருமணத்துக்குப் பின் அங்கு செல்ல நேர்ந்தது.

வேலையை விட்டாலும், வீட்டிலிருந்தே ஏதாவது சுயதொழில் செய்ய நினைத்தேன். சிறுவயதில், என் பாட்டி மற்றும் அம்மாவிடம் பயின்ற ஹோம் கிராஃப்ட் பொருள்களைத் தற்கால தேவைக்கேற்ப அப்டேட்டடாக செய்து விற்க முடிவெடுத்து, ஆன்லைன் மூலமாக அதைப்பற்றிய மேலதிக விவரங்களை அறிந்துகொண்டேன். பெண்கள் அணியும் நகைகள், பெயர்ப்பலகை, குங்குமச் சிமிழ், கிஃப்ட் கவர் எனத் தயாரித்து, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குக் கொடுத்தேன். அடுத்து, அவர்களின் வீட்டில் நடந்த  விசேஷங்கள், நவராத்திரி மற்றும் பண்டிகைகளுக்கு என் தயாரிப்புகளை வாங்க ஆரம்பித்தனர். வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்ள வசதியாக ‘ஹரிணி’ஸ் க்வில்லிங் க்ரியேஷன்ஸ்’ என்ற முகநூல் பக்கத்தைத் தொடங்கினேன். இந்தியாவின் பல இடங்களிலிருந்தும் ஆர்டர்கள் வர ஆரம்பித்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என்னால் பேச முடியாவிட்டாலும் என் வெற்றி பேசும்!

என்னிடம் வாங்கிய பொருள்களைச் சிலர் வெளிநாட்டில் வசிக்கும் தங்கள் உறவினர்களுக்கு  அனுப்ப, வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் வரத் தொடங்கின. வெளிநாட்டு வாடிக்கையாளர்களைக் கவர பேக்கிங்கில் விசேஷ கவனம் செலுத்தினேன். ஆன்லைன் பிசினஸ் தவிர, இப்போது மங்களூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிற்சி வகுப்புகளும் நடத்துகிறேன். வாடிக்கையாளரின் விருப்பத்துக்கேற்ப பட்ஜெட்டுக்குள் உரிய நேரத்தில் பொருள்களை டெலிவரி செய்வதே என் வெற்றியின் ரகசியம். கிடைக்கும் லாபத்தில் ஐம்பது சதவிகிதத்தை குழந்தைகள் காப்பகத்துக்கு நன்கொடையாக அளிக்கிறேன். அதில் கிடைக்கும் மனநிறைவே என்னை இயக்கும் உந்து சக்தி.

கேட்கமுடியாத, பேச முடியாத மாற்றுத்திறனாளியாக நான் எதிர்கொண்ட சவால்களைப் பற்றி கூறவில்லையே என்று நினைக்கலாம். அதுதான் என் வெற்றிக்குக் காரணம். அதாவது, எனக்கு இப்படி ஒரு குறை இருப்பதையே மறந்து, பார்க்கும் வேலைகளில் கரைந்துவிடுவேன். சுயபச்சாதாபத்தால் பின்னிழுக்கப்படாமல், தொழில்முனைவோராக நான் முன்னேறிச் சென்றுகொண்டிருக்க, இந்த பாசிட்டிவ் ஆட்டிட்யூடும் முக்கியக் காரணம். மேலும், ‘Listening is different from hearing’ என்பதை நான் நம்புகிறேன். என்னால் கேட்க முடியாமல், பேச இயலாமல் போகலாம்... ஆனால், மனதால் உள்வாங்கவும், அதைச் செயலாக வெளிப்படுத்தவும் முடியும்!”