Published:Updated:

தேடி... தேடி... ஷாப்பிங்... ஷாப்பிங்!

தேடி... தேடி... ஷாப்பிங்... ஷாப்பிங்!
பிரீமியம் ஸ்டோரி
தேடி... தேடி... ஷாப்பிங்... ஷாப்பிங்!

கலைடாஸ்கோப்ப.தினேஷ்குமார்

தேடி... தேடி... ஷாப்பிங்... ஷாப்பிங்!

கலைடாஸ்கோப்ப.தினேஷ்குமார்

Published:Updated:
தேடி... தேடி... ஷாப்பிங்... ஷாப்பிங்!
பிரீமியம் ஸ்டோரி
தேடி... தேடி... ஷாப்பிங்... ஷாப்பிங்!

நீங்கள் ஆசைப்பட்டு, ஷாப்பிங்கில் கிடைக்காத பொருள்?

நந்திதா, நடிகை

தேடி... தேடி... ஷாப்பிங்... ஷாப்பிங்!

``நான் ஒருதடவை ஆன்லைன்ல பார்பெர்ரி பேக் பார்த்துவெச்சிருந்தேன். அது இப்போ வரைக்கும் கிடைக்கவேயில்லை. எப்போ ஆன்லைன் போய் செக் பண்ணாலும் `அவுட் ஆஃப் தி ஸ்டாக்'தான் காட்டுது. ஒரு பொருள் எனக்குக் கிடைக்கலைன்னா, என் மனசு பூரா அந்தப் பொருள்மேலதான் இருக்கும். அந்தப் பொருளைக் கண்டுபிடிச்சு வாங்கற வரை மனசு ஆறாது. நானும் நாலு மாசமா தேடிட்டிருக்கேன். இன்னும் கிடைக்கவேயில்லை. அந்த பேக் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ஒருநாள், அந்த பேக்கை நிச்சயம் வாங்குவேன்!''

பிடித்த ஷாப்பிங் மால்?

காயத்ரி ரகுராம், நடன இயக்குநர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேடி... தேடி... ஷாப்பிங்... ஷாப்பிங்!

``பீனிக்ஸ் மால்தான். அஞ்சு வருஷமா அங்கே போயிட்டிருக்கேன். சில நேரம், ஷாப்பிங் முடிச்சுட்டு அப்படியே படமும் பார்த்துட்டு வருவேன். அக்காப்பசங் களை அங்கே கூட்டிட்டுப் போனா, நேரம் போறதே தெரியாது. பீனிக்ஸ்ல சாரா (Zara)னு ஒரு பிராண்டு ஷோ ரூம் இருக்கு. அடிக்கடி அங்கே டிரஸ் எடுப்பேன்.  தனுஷ் சாரின் பையன் லிங்கா பிறந்த நாள் கொண்டாட்டம் அங்கேதான் நடந்துச்சு. அதுக்காக, சமீபத்திலும் பீனிக்ஸ் மாலுக்கு போயிட்டு வந்தேன்.''

வெளிநாடுகளில் ஷாப்பிங் செய்யும் பொருள்?

இளவழகி, கேரம் பிளேயர்

``நாம இப்ப இந்த நாட்டுக்கு வந்துட்டோம். அடுத்து இந்த நாட்டுக்கு வருவோமா, வர மாட்டோமான்னு நமக்கு நிச்சயம் தெரியாது. நாம இந்த நாட்டுக்கு வந்த ஞாபகமாக, புகழ்பெற்ற சின்னங்கள் பொறிக்கப்பட்டிருக்கும் காபி கப்களை வாங்கிட்டு வருவேன்.

தேடி... தேடி... ஷாப்பிங்... ஷாப்பிங்!

இப்போ அமெரிக்கா போனப்போ, எம்பயர் ஸ்டேட் பில்டிங் உருவம் பொறிக்கப்பட்ட ரெண்டு காபி கப் வாங்கிட்டு வந்தேன். மலேசியா, மாலத்தீவு, இலங்கை போனப்பவும், இதே மாதிரி காபி கப்கள் வாங்கிட்டு வந்திருக்கேன்!"

பிடித்த ஷாப்பிங் இடம்?

நதியா, நடிகை

தேடி... தேடி... ஷாப்பிங்... ஷாப்பிங்!

``நான் இப்போ மும்பையில தான் இருக்கேன். இங்கே, `காட்டன்ஸ்'னு ஒரு கடை இருக்கு. அங்கே நம்ம க்ளைமேட்டுக்கு ஏத்த மாதிரி காட்டன் டிரஸ்கள் விதவிதமா கிடைக்கும். ஆறு வருஷமா இந்தக் கடையில் ஷாப்பிங் செய்துட்டு வர்றேன். ரெண்டு வாரத்துக்கு ஒருமுறை போய், புதுசா ஏதாவது வந்திருக்கான்னு பார்த்துட்டு வருவேன். அப்புறம் ஒருநாள் காட்டன்ஸுக்குப் போய், அது வரை என்னென்ன டிரஸ் பார்த்து
வெச்சிருந்தேனோ, அத்தனை யையும் மொத்தமாக வாங்கிட்டு வந்துடுவேன். எனக்கு ஷாப்பிங் செய்ய பிடிச்ச இடம்னா, அது `காட்டன்ஸ்'தான்!''

வெளிநாடுகளில் ஷாப்பிங் செய்ய பிடித்த இடம்?

பூர்ணிமா ராமசாமி, காஸ்டியூம் டிசைனர்

``என்னுடைய தொழிலே ஷாப்பிங் செய்றதுங்கிறதால, பர்சனலா எனக்கு ஷாப்பிங் செய்ய அவ்வளவா பிடிக்காது. வெளியூர்களுக்குப் போகும்போதுதான் பர்சனல் ஷாப்பிங் பண்ணுவேன். அப்படி எனக்கு ஷாப்பிங் செய்ய பிடிச்ச இடம் சிங்கப்பூர்தான்!

தேடி... தேடி... ஷாப்பிங்... ஷாப்பிங்!

அங்கே `ஆர்ச்சர் ரோடு'னு ஓர் இடம் இருக்கு. எங்க சித்தி சிங்கப்பூர்ல இருக்கிறதால, சின்ன வயசுல இருந்தே அந்த `ஆர்ச்சர் ரோடு' எனக்கு அத்துபடி. அந்த ரோடுல நிறைய மால்கள் இருக்கும். இன்டர்நேஷனல் அளவில் லேட்டஸ்ட்டா வந்த எல்லாப் பொருள்களும் கிடைக்கும். ரொம்ப வருஷமா அந்த இடத்துல ஷாப்பிங் பண்ணிட்டிருக்கேன். போன மாசம்கூட பர்ச்சேஸ் பண்ணிட்டு வந்தேன்!''

உங்களுடைய ஷாப்பிங் பார்ட்னர் யார் ?

அனிதா குப்புசாமி, பாடகி

``நாங்க ஏழு அக்கா தங்கைகள். ஷாப்பிங் போவதற்காக நாங்க ஒண்ணு சேர்ந்துட்டா, ஒரே அதகளம்தான். மழை சோன்னு கொட்டினாலும் சரி, வெயில் சுர்ருனு அடிச்சாலும் சரி, எந்த க்ளைமேட்லயும் நாங்க ஷாப்பிங் பண்ண தயங்கவேமாட்டோம். தி.நகர், சௌகார்பேட்னு எல்லா இடங்களுக்கும் போவோம். திருப்திவரும் வரைக்கும் நாள் முழுக்க நிதானமா ஷாப்பிங் செய்வோம்.

தேடி... தேடி... ஷாப்பிங்... ஷாப்பிங்!

மூணு வேளையும் கடையில சாப்பிட்டுட்டு, நைட்தான் வீடு திரும்புவோம். யார் எந்தப் பொருள் வாங்கினாலும், அதை ஏழு பொருளாதான் வாங்குவோம். நாங்க ஷாப்பிங் பண்ற ஒவ்வொரு பொருளும் வித்தியாசமா இருக்கும். பணம் கரையுதோ இல்லையோ, மனசு நிறையணும். அதுதான் ஷாப்பிங் செய்ததற்கான அடையாளம்!''

மறக்க முடியாத ஷாப்பிங் அனுபவம்?

சுகிர்தராணி, கவிஞர்

``ஒரு பயிலரங்குக்காக ஹைதராபாத் போயிருந்தேன். நண்பர்களோடு இரவு 9 மணிக்கு ஒரு கண்காட்சிக்குச் சென்றேன். புதிய பொருள்களோடு ஏற்கெனவே பயன்படுத்திய பொருள்களையும் அங்கு விற்பனைக்கு வைத்திருந்தார்கள். அந்தப் பழைய பொருள்களையும் மக்கள் விரும்பி வாங்கினார்கள். நானும் இரண்டு பை நிறைய பல்வேறு இடங்களில் ஷாப்பிங் செய்தேன். ஒரு கடையில் பில் போடும் இடத்துக்கு வந்தபோது, பர்ஸைக்  காணவில்லை. `இதற்கு முந்தைய கடையில் மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டேன்' என நினைத்துக்கொண்டு, அந்தக் கடைக்காரரிடம் சென்று பர்ஸ் குறித்து விசாரித்தேன். அவர் `அதெல்லாம் எனக்குத் தெரியாதுமா, நான் பார்க்கலை' எனச் சொல்ல, நான் அவருடன் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டேன்.

தேடி... தேடி... ஷாப்பிங்... ஷாப்பிங்!

கடைசியாக, நண்பர்கள் `பையை நன்றாக செக் பண்ணலாம்' எனச் சொல்லி, அதில் இருந்த எல்லா பொருள்களையும் கீழே கொட்டிப் பார்க்கும்போதுதான், ஒரு பைக்கு அடியில் அந்த பர்ஸ் இருப்பது தெரிந்தது. என் நண்பர்கள் இதையே சாக்காகவைத்துக்கொண்டு என்னைக் கலாய்த்துத் தள்ளி விட்டார்கள். அதன்பிறகு அந்தக் கடைக்காரரிடம்  மன்னிப்பு கேட்டு விட்டுத் திரும்பினேன். பர்ஸை பையிலேயே வைத்துக்கொண்டு தேடிய அந்தச் சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது!''