Published:Updated:

தனிமைக்கும் கவலைக்கும் எது மருந்து? - மமதி சாரி

தனிமைக்கும் கவலைக்கும் எது மருந்து? - மமதி சாரி
பிரீமியம் ஸ்டோரி
தனிமைக்கும் கவலைக்கும் எது மருந்து? - மமதி சாரி

கற்றதும் பெற்றதும்கு.ஆனந்தராஜ், படம்: ப.சரவணகுமார்

தனிமைக்கும் கவலைக்கும் எது மருந்து? - மமதி சாரி

கற்றதும் பெற்றதும்கு.ஆனந்தராஜ், படம்: ப.சரவணகுமார்

Published:Updated:
தனிமைக்கும் கவலைக்கும் எது மருந்து? - மமதி சாரி
பிரீமியம் ஸ்டோரி
தனிமைக்கும் கவலைக்கும் எது மருந்து? - மமதி சாரி

னித்துவமான தமிழ் உச்சரிப்பால், 2000-ம் ஆண்டுகளில் தனி ரசிகர் பட்டாளத்தைக்கொண்டிருந்தவர் தொகுப்பாளர் மமதி சாரி. சில ஆண்டுகள் ஊடகத்தி லிருந்து விலகியிருந்தவர், இப்போது
ரீ-என்ட்ரி கொடுத்ததோடு, `பிக் பாஸ்' நிகழ்ச்சி யின் மூலம் புதிய பிரபல்யம் அடைந்திருக்கிறார். அவரோடு ஓர் உரையாடியதிலிருந்து...

ஊடகத்திலிருந்து விலகியிருந்தது ஏன்?

பள்ளிப்பருவத்திலேயே ராஜ் டி.வி-யில் தொகுப்பாளராகச் சேர்ந்து, கல்லூரிப் படிப்பை முடிக்கிற வரை அங்கே வேலைபார்த்தேன். அப்போது, தமிழ்நாட்டில் முதல் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி
னேன். பிறகு, விஜய், சன் தொலைக் காட்சிகளில் என் பயணம் சிறப்படைந்தது.  தனிப்பட்ட காரணங்களால் ‘கொஞ்ச காலம் ஊடக வேலையிலிருந்து விலகியிருக்கலாம்’ என 2010-ம் ஆண்டு முடிவு எடுத்தேன். சில ஆண்டுகள் கழித்து, ‘நீங்கதான் செய்யணும்’ என்று சொல்லி வாய்ப்புகள் வர, சன் டி.வி ‘சூப்பர் குடும்பம்’ மற்றும் ‘செல்லமே செல்லம்’ நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினேன். ஆனால், முன்புபோல முழுமையாக என்னை வெளிப்படுத்த முடியவில்லை. எப்போதும் `ஸ்லிம் ஃபிட்'டாக இருப்பதை விரும்பும் நான், அந்நாள்களில் எடை கூடியிருந்தேன். அது ஏற்படுத்திய ஒருவித மனத்தடையினாலேயே மனமும் உடலும் ஆக்டிவ்வாக இல்லாததுபோல உணர்ந்தேன். மீண்டும் பிரேக் எடுத்தேன்.

தனிமைக்கும் கவலைக்கும் எது மருந்து? - மமதி சாரி

ஸ்லிம்மாக இருப்பது முக்கியமா?

எனக்கு அப்படி இருப்பது பிடிக்கும். ஊடகப் பணியில், ஒருவருடைய தோற்றம் முக்கியம். அதனால், தினமும் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன். விளையாட்டிலும் அதிக ஆர்வம் உண்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அழகுத் தமிழ் உச்சரிப்பு, தொகுப் பாளரான பின் மெருகேற்றிக்கொண்ட விஷயமா?

சிறுவயதில் இருந்தே எனக்குத் தமிழ் மிகவும் பிடிக்கும். தொகுப்பாளரானபோது, ரசிகர்களைக் கவர நல்ல தமிழில் பேச வேண்டும் என்று நினைத்ததுடன், தமிழ் மொழியின் அழகையும் மக்களிடம் கொண்டு
போக நினைத்தேன். நான் பேசுவது செந்தமிழ் கிடையாது. ஆங்கிலம் கலக்காத தமிழ். ‘நீங்க பேசுறது பல நேரங்களில் புரிவதில்லை’ என்று பலரும் சொல்லியதுண்டு. தமிழ் புரியவில்லை என்று சொல்லும் தமிழர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று எனக்கும் தெரியவில்லை.

எனக்குப் பத்து மொழிகள் தெரியும். மொழிப் பயிற்சிக்காக மெனக்கெடலுடன் நேரம் ஒதுக்குவேன். நிறைய தமிழ்ப் புத்தகங்கள் படிப்பேன். என் தனிமைக்கும் கவலைக்கும் அவையே மருந்து!

இல்லற வாழ்க்கையில் என்ன பிரச்னை?

அவர் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர். ஏற்கெனவே திருமணமாகி, விவாகரத்து பெற்றிருந்தார். அவரின் முன்னாள் மனைவியையும் நான் அறிவேன் என்பதால், அவரின் சம்மதத்தைப் பெற்று காதலை ஏற்றேன். எங்கள் உறவு அன்பால் அடர்த்தியானது. ஆறு வருடங்கள் `லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்'பில் இருந்தோம். பிறகு, சட்டப்படி ஆறு ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்தோம். ஒருவர் பாதைக்கு ஒருவர் மாற முடியாத தருணத்தைச் சந்தித்தோம். அது என் வாழ்வின் மிகச் சிக்கலான காலகட்டம்.

2014-ல் விவாகரத்து பெற்றோம். ஒரு பெண்ணால் ஆண் துணை இல்லாமல் வாழவே முடியாதா என்ன? நிச்சயம் சுயமரியாதையுடன் வாழ முடியும். அதற்கு நான் ஓர் உதாரணம். நான் நானாக வாழ வேண்டும் என்கிற ஆசை எனக்குண்டு.

பொருளாதாரச் சிரமம்?

அப்பா சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றியவர். அம்மா நல்ல வேலையில் இருந்தார். வசதிகளுக்குக் குறைவில்லாமல் வளர்ந்தேன்.

2000-க்குப் பிறகான சில ஆண்டுகளில் அதிக ஊதியம் பெறும் தொகுப்பாளராக நான் இருந்திருக்கிறேன்.

‘சட்டப்படி முன்னாள் கணவருக்கும் (அப்படித்தான் குறிப்பிடுகிறார்)’ எனக்கும் தனித்தனியே நிறுவனங்கள் இருந்தன. இருவரும் இணைந்து ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பிஸியாக இயங்கினோம். பல வீடுகள், நிலங்கள், மலைப்பகுதி எஸ்டேட்டுகள் என ஏராளமான சொத்துகளைச் சேர்த்தோம். பிரிந்து வரும்போது எதையும் எதிர்பார்க்காமல் அவரிடமே விட்டுட்டு வந்துட்டேன்.

பிறகு, தனியாக ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தைத் தொடங்கினேன். ஒரு கட்டத்தில் ரியல் எஸ்டேட் துறை வீழ்ச்சியடைந்தது. பிரின்டரை விற்ற நாள், என் பியானோவை விற்று மும்பை சென்ற நிலை என இரண்டு வருடங்கள் கடும் பொருளாதாரச் சிரமங்களை எதிர்கொண்டேன். இப்போது நான் வசிப்பது, வாடகை வீடு. என் வாழ்க்கையில் நான் வசிக்கும் முதல் வாடகை வீடு இது. அதற்கெல்லாம் ஒருபோதும் நான் கவலைப்பட்டதேயில்லை. என்னைப் பொறுத்தவரை அனைத்தும் ஆகச்சிறந்த அனுபவங்களே.

இன்னும் ஒரு கடமை எனக்குப் பாக்கியிருக்கிறது. என் ‘சட்டப்படி முன்னாள் கணவருக்கும்’ அவரின் முன்னாள் மனைவிக்கும் பிறந்த குழந்தை, என் மேல் அதிக பாசம் கொண்டவர். பக்குவம் அடைந்ததும் நிச்சயம் அவர் என்னைத் தேடி வருவார். அப்போது அவருக்கும் என்னால் இயன்றதைச் செய்வேன். பிறகு, நான் வாழும் காலம் வரை என் நாய்கள் மற்றும் பூனைகளை வளர்ப்பது மட்டுமே என் கடமையென காலத்தை எதிர்கொள்வேன்.

மமதிக்கு என்ன பிடிக்கும்?

சுதந்திரம்... அமைதி. ஊடகத் துறையில் புகழில் இருந்த என் 19 வயதில், பெற்றோரை விட்டு வேறு தனி வீட்டில் வசித்தேன். அவர்கள் என்னையும், நான் அவர்களையும் சென்று சந்தித்துக்கொள்வோம். இப்போது என்னுடன் செல்வி அக்காவும் (வீட்டுப் பணியாளர்), என் நாய்கள், பூனைகளும் இருக்கிறார்கள். வாழ்க்கையில் பிறரை எதிர்பார்த்து இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் பயனுள்ள விஷயங்களைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். நான் பணிசெய்யும் துறைக்குத் தகுதியாக என்னைப் பூரணமாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் கற்றவை, பெற்றவை..?

பணம், புகழ், வெற்றிக்காக சில நேரங்களில் மனிதர்களாக இருக்கவே மறந்துவிடுறோம். ‘பிக் பாஸ்’ வீட்டில் பலரும் அப்படித்தான் இருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் இருந்து நான் வெளியேறினாலும், ஒருபோதும் எப்போதும் மனிதநேயத்தை மீறி நடக்கக் கூடாது என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தமாகப் புரிந்துகொண்டிருக்கிறேன். இவை, கற்றவை. மும்தாஜ் மற்றும் பல புதிய நண்பர்கள் அங்கு கிடைத்தார்கள்; இது, பெற்றவை!

ரசிகர்களிடம் இருந்து விலகிச் சென்றதாக உணர்கிறீர்களா?

என் மேல் அன்புகொண்ட ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள். ஆனாலும், இது டிஜிட்டல் உலகமல்லவா! இந்தக் கால இளைய தலைமுறை ரசிகர்களின் ஆதரவை நான் பெறவில்லை என்றுதான் நினைக்கிறேன். அனுபவத்தில் இருந்து பாடம் கற்காதவர், மிகப்பெரிய முட்டாள். நான் முட்டாளாக இருக்க விரும்பவில்லை. இனி எல்லாத் தரப்பு ரசிகர்களின் அன்பையும் பெற முயற்சி செய்வேன்!