Published:Updated:

கமலும் அஜித்தும் என் மாணவர்கள்! - சந்தியா வசந்தகுமார்

கமலும் அஜித்தும் என் மாணவர்கள்! - சந்தியா வசந்தகுமார்
பிரீமியம் ஸ்டோரி
கமலும் அஜித்தும் என் மாணவர்கள்! - சந்தியா வசந்தகுமார்

அடையாளம்கு.ஆனந்தராஜ், படம் : ரா.வருண் பிரசாத்

கமலும் அஜித்தும் என் மாணவர்கள்! - சந்தியா வசந்தகுமார்

அடையாளம்கு.ஆனந்தராஜ், படம் : ரா.வருண் பிரசாத்

Published:Updated:
கமலும் அஜித்தும் என் மாணவர்கள்! - சந்தியா வசந்தகுமார்
பிரீமியம் ஸ்டோரி
கமலும் அஜித்தும் என் மாணவர்கள்! - சந்தியா வசந்தகுமார்

‘`இசைதான் அனுதினமும் என்னை மகிழ்ச்சியோடு இயங்கவைக்குது.  இசையைத் தவிர என் வாழ்க்கைக்கான அர்த்தமும் அடையாளமும் வேறு எதுவுமில்லை” - அன்பும் அடக்கமுமாகப் பேசுகிறார் சந்தியா வசந்தகுமார். புகழ்பெற்ற இசை ஆசிரியரான இவர், ஆயிரக்கணக்கானோருக்கு இசையைப் பயிற்றுவித்தவர்.

“பிறந்து வளர்ந்ததெல்லாம் மகாராஷ்டிராவிலுள்ள புனே நகரில். அப்பா போலீஸ் ஆபீஸர். அம்மா டாக்டர். சின்ன வயசுல ஒருமுறை அப்பாவின் நண்பர் ஒருவர் கிடார் வாசிக்கிறதைப் பார்த்து எனக்கும் ஆர்வம் ஏற்பட்டுச்சு. ஒன்பதாவது படிச்சுட்டிருந்தப்போ, எனக்குப் பிடிச்ச பியானோ க்ளாஸ்ல சேர்ந்தேன். படிப்பைவிட இசையில்தான் ஆர்வம் இருந்தது. 1975-ம் வருஷம் பி.எஸ்ஸி செகண்டு இயர் படிச்சுட்டிருந்தப்போ கல்யாணமாச்சு. கணவர் வசந்தகுமாருக்கு பூர்வீகம் சென்னைதான். அவர் புகழ்பெற்ற கிடார் இசைக்கலைஞர். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, சங்கர் - கணேஷ், பாம்பே ரவி, மலையாளம் ரவி, சலீல் சவுத்ரி உள்ளிட்ட புகழ்பெற்ற தென்னிந்திய இசைக்கலைஞர்களிடம் வேலைபார்த்தவர்’’ என்றவர், திருமணத்துக்குப் பிறகு தன் இசைப்பயணத்தை இன்னும் ஆர்வத்துடன் தொடர்ந்திருக்கிறார்.


‘`டிகிரி முடிச்சதும், சென்னை ‘மியூசீ மியூசிகல்ஸ்' ஸ்கூல்ல வெஸ்டர்ன் மியூசிக் கத்துகிட்டேன். அப்புறம் மியூசிக் டீச்சரா வொர்க் பண்ணினேன். கணவர் பிஸியான நபராக இருந்தாலும், கிடைக்கும் நேரங்களில் எல்லாம் இசை சார்ந்த நிறைய விஷயங்களை எனக்குச் சொல்லிக்கொடுப்பார். 1989-ம் வருஷம் அவர் இறந்துட்டார். ஈடுசெய்ய முடியாத அவர் இழப்பில் இருந்து மீண்டுவர, இசையைத்தான் பற்றிக்கொண்டேன்’’ என்பவருக்கு ரீனு, மீனு, அன்னு என்று மூன்று மகள்கள்.

கமலும் அஜித்தும் என் மாணவர்கள்! - சந்தியா வசந்தகுமார்

‘`சிங்கிள் மதராக அவங்களை வளர்த்தெடுக்க, இசைதான் எனக்கு வருமானம் கொடுத்தது. அவங்க மூணு பேரும் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்கள்கிட்ட நிறைய ஜிங்கிள்ஸ் பாடியிருக்காங்க” என்கிறவரிடம் நூற்றுக்கணக்கான பிரபலங்களும் பிரபலங்களின் வாரிசுகளும் இசை பயின்றிருக்கிறார்கள்.

“நான் பியானோ, கீபோர்டு, கிடார், வெஸ்டர்ன் மியூசிக் கருவிகள், ஸ்டோரி ஆஃப் மியூசிக் இதெல்லாம் சொல்லிக்கொடுப்பேன். கோடம்பாக்கத்திலிருந்த என் வீட்டில்தான் அந்த இசை வகுப்புகளெல்லாம் எடுத்தேன். அப்போ அனிருத், சிலம்பரசன், நரேஷ் ஐயர், சின்மயி, சுசித்ரா, நிரோஷா (நடிகை), அனுபமா, லியோன் ஜேம்ஸ், ஃப்ளூட் நவீன் குமார் உள்பட,  இன்னிக்குப் பிரபலமா இருக்கிற பலரும், பிரபலங்கள் பலரின் குழந்தைகளும் என் மியூசிக் ஸ்டூடன்ட்ஸ் என்பதில் பெருமை எனக்கு.

நடிகர் கமல்ஹாசன் ஆபீஸுக்குப் போய் 15 நாள்களுக்கும் மேல அவருக்கு பியானோ ஃபிங்கரிங் மற்றும் வாசிக்கச் சொல்லிக்கொடுத்தேன். நடிகை ஷாலினி, என் பொண்ணு மீனுவின் க்ளோஸ் ஃப்ரெண்டு. ஷாலினி பியானோவும், நடிகர் அஜித்குமார் கிடாரும் சில கிளாஸ்கள் எங்கிட்ட கத்துக்கிட்டாங்க. தவிர, ஸ்கைப் மூலமாக ஆன்லைன் எங்கிட்ட க்ளாஸும் எடுக்கிறேன். டைரக்டர் ஷங்கர் வற்புறுத்தி கேட்டதால ‘பாய்ஸ்’ படத்துல ஜெனிலியாவின் மியூசிக் டீச்சரா சின்ன ரோல்ல நடிச்சேன்’’ என்கிறவர் 2011-ம் ஆண்டு பெங்களூரில் செட்டில் ஆகியிருக்கிறார்.

“என் மாணவர்களுக்குள் எந்தப் பாகுபாடும் பார்க்க மாட்டேன். பிரபலங்களின் பிள்ளைகளா இருந்தாலும், என் வகுப்பில் மற்ற மாணவர்களைப்போலதான் அவங்களும்.

எப்பவும் சிரிச்ச முகத்துடன் அம்மாபோன்ற ஒரு பாண்டிங்லதான் பழகுவேன். மூணு வயசுக் குழந்தை முதல் 70 வயது முதியவர் வரை, இதுவரை ரெண்டாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மியூசிக்சொல்லிக்கொடுத்திருக்கேன். விரைவாக கத்துக்கிறது, லேட் பிக் அப்னு ஒவ்வொருத்தரின் கற்கும் தன்மையையும் புரிஞ்சுகிட்டுப் பயிற்சி கொடுப்பேன். என் ஸ்டூடன்ட்ஸ் பலர் இன்னிக்கு மியூசிக் டீச்சரா வேலை பார்க்கிறாங்க; மியூசிக் ஸ்கூல் தொடங்கி நடத்திட்டிருக்காங்க; சிலர் இசைத் துறையில் ஜொலிக் கிறாங்க’’ என்று மகிழ்வும் பெருமையுமாகச் சொல்கிறவர், ‘`சாப்பாடு, தூக்கத்தைவிட எனக்கு மியூசிக்தான் பெருசு. இசைப் பயணத்தைத் தொடங்கி 45 வருஷங்களுக்கும் மேலாகுது. ஓய்வைப் பொருட்படுத்தாமல் நான் ஸ்வரங்களுடனும் என் ஸ்டூடன்ட்ஸுடனும் ஆக்டிவாக இருக்க நான் இசையை ரொம்ப ரொம்ப நேசிக்கிறதுதான் காரணம்’’ - புன்னகையுடன் விடைபெறுகிறார் சந்தியா வசந்தகுமார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!