Published:Updated:

`மாணவர்களுக்கு திட்டமிடல் தேவை!' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்

`மாணவர்களுக்கு திட்டமிடல்  தேவை!' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்
News
`மாணவர்களுக்கு திட்டமிடல் தேவை!' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்

`மாணவர்களுக்கு திட்டமிடல் தேவை!' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்

விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியர்களால் எதையும் சாதிக்க இயலும் என்பதை அப்துல் கலாமுக்குப் பிறகு சந்திராயன், மங்கல்யான் வெற்றியின்மூலம்  சாதித்துக் காட்டிய பத்மஸ்ரீ மயில்சாமி அண்ணாதுரை ஈரோட்டில் நடைபெற்ற செங்குந்தர் கல்விக் கழகத்தின் பவள விழா நிகழ்ச்சியில் மாணவர்கள் முன்னிலையில் சிறப்புரையாற்றினார். 

"கல்வி நிறுவனத்தைச் சிறப்பாக நடத்திக்கொண்டிருப்பவர்களுக்குச் சான்றோர் என்ற வார்த்தை மிகச்சரியாகப் பொருந்தும். சான்றோர் என்னும் சொல் சால் - [நிறைதல்] என்னும் அடிச்சொல்லிருந்து பிறந்தது. சரியான செயலைச் செய்து முடிப்பதற்காகச் சரியான பாதையில் செல்பவர்கள்தான் சான்றோர்கள் என்று சான்றோர்க்கான விளக்கத்தையும் கூறி, தனது உரையைத் தொடங்கிய மயில்சாமி அண்ணாதுரை" இங்கு கல்விக்கழகத்தை நடத்துபவர்களைச் சான்றோர்கள் என்று கௌரவித்ததைப் போல இந்திய விண்வெளித் துறையில் சான்றோர் என்ற பட்டம் கொடுக்க வேண்டுமென்றால் அதை சந்திரயான், மங்கல்யான்  விண்கலங்களுக்குத்தான் அவசியம் கொடுக்க வேண்டும். ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், சீன நாடுகளால் சாதிக்க இயலாததை  நாம் முதல் முயற்சியிலேயே மங்கள்யான் மூலம் சாதித்துக் காட்டினோம். சரியான திட்டமிடல் மற்றும் செயல்பாடுகளாலேயே இதைச் சாதிக்க முடிந்தது.

இங்குள்ள ஒவ்வொரு மாணவ, மாணவியரும் சான்றோராக முடியும். அதற்கு சந்திராயனும் மங்கல்யானும் சரியான உதாரணமாக இருக்கும். ஒவ்வொரு விண்கலமும் ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவப்படும் நாள்முதல், அது இலக்கை அடையும் நாள் வரை கணக்கிடப்பட்டு சரியான பாதையில் செலுத்தப்பட்டாலே, அதன் இலக்கைச் சரியான நேரத்தில் அடைய இயலும். அதற்கு, அதன் அடித்தளம் சரியாக அமைய வேண்டும். அதேபோல மாணவர்களாகிய நீங்களும் இளம் வயதில் கற்கும் கல்வியானது சரியானதாகவும் சிறப்பானதாகவும் அமைந்தால் மட்டுமே எந்தத் துறையில் நீங்கள் கால்பதித்தாலும் வெற்றியைச் சுவைக்க முடியும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மேலும், பாடப் புத்தகங்களைத் தாண்டி நிறையப் புத்தகங்களை வாசித்துக் கற்க வேண்டும். இன்றும் இரயில் நிலையம், விமான நிலையம் என எங்கு சென்றாலும், புத்தகங்களை வாங்கிப் படிப்பதை  வழக்கமாக வைத்துள்ளேன். கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் விண்கலம், அதே ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இலக்கை எட்டும்படி திட்டமிடப்பட்டிருந்தாலும், இதன் வெற்றி நாட்டின் வருங்கால சந்ததியினருக்குத்  தொடக்கமாக இருக்க வேண்டுமென்று எண்ணி, குழந்தைகள் தினமான நவம்பர் 14-ம் தேதி தரையிறக்கப்பட்டது. இவ்வாறு அவரது உரை பள்ளி மாணவ மாணவிகளை உற்சாகமூட்டும் வகையிலும், ஊக்கமூட்டும்  வகையிலும் அமைந்திருந்தது.