Published:Updated:

பரிசு - மனதுக்கு நெருக்கமானது

பரிசு - மனதுக்கு நெருக்கமானது
பிரீமியம் ஸ்டோரி
பரிசு - மனதுக்கு நெருக்கமானது

கிராஃப்ட்சு.சூர்யாகோமதி

பரிசு - மனதுக்கு நெருக்கமானது

கிராஃப்ட்சு.சூர்யாகோமதி

Published:Updated:
பரிசு - மனதுக்கு நெருக்கமானது
பிரீமியம் ஸ்டோரி
பரிசு - மனதுக்கு நெருக்கமானது

`அன்புக்குரியவருக்குப் புதுமையாக என்ன பரிசு கொடுத்து சர்ப்ரைஸ் ஆக்கலாம்?’ என்று மூளையைக் கசக்கிக்கொண்டிருப்பவர்களுக்கு ஸ்மார்ட்டான பதில், ‘முத்ரா கிராஃப்ட் ஸ்டாம்ப்ஸ்’. நீங்களே உங்கள் கைகளால் செய்து அசத்தும் வகையில் இவர்களிடம் கிடைக்கக்கூடிய  மேக் இன் ஹோம் ஸ்டாம்ப் பேக்கேஜ்கள், நவீன சிந்தனை. ‘முத்ரா கிராஃப்ட் ஸ்டாம்ப்ஸ்’ஸின் உரிமையாளரான  சென்னையைச் சேர்ந்த வர்ஷிதாவிடம் பேசினோம்.

பரிசு - மனதுக்கு நெருக்கமானது
பரிசு - மனதுக்கு நெருக்கமானது
பரிசு - மனதுக்கு நெருக்கமானது

“எனக்கு கிராஃபிக் டிசைனிங் ரொம்பப் பிடிக்கும். பள்ளிப்படிப்பு முடித்ததும் கிராஃபிக் டிசைனிங் கோர்ஸில் சேர்ந்தேன். பின்னர் திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆகிட்டேன். அங்கே கத்துக்கிட்டதுதான் இந்த ஸ்டாம்ப் மேக்கிங். ஒரு நிறுவனத்தின் பெயர் அல்லது தனி நபரின் பெயருக்கு ஸ்டாம்ப்கள் செய்வதையே கொஞ்சம் க்ரியேட்டிவாக யோசித்து, ரசனையான வடிவமைப்பில், பரிசளிக்கும் வகையில் உருவாக்கும் ஸ்டாம்ப்புகள் இவை. எல்லோருக்குமே தான் விரும்புகிறவங்களுக்கு தன் கைகளால் கிஃப்ட் செய்து கொடுக்கணும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அந்தளவுக்கு கலைநுட்பம், பொறுமை, நேரம் எல்லோருக்கும் கைவரப் பெறுவதில்லை. அவங்க, இந்த ரெடிமேட் ஸ்டாம்ப்பை வாங்கி, அவங்களோட கற்பனைத்திறனுக்கு ஏற்ப பேப்பர், கார்டு, மரப்பலகை என விரும்பும் பொருள்களில் டிசைன் செய்து, அன்பு கலந்து வண்ணமிட்டு, ‘உங்களுக்காக நானே என் கைப்பட செய்தது’னு நேசத்துக்கு உரியவருக்குப் பரிசளிக்கலாம். அதேபோல, ஸ்டாம்ப் பேக்கேஜ் வாங்கி, வீட்டிலேயே ஸ்டாம்ப்ஸ் உருவாக்கவும் செய்யலாம்.

பரிசு - மனதுக்கு நெருக்கமானது
பரிசு - மனதுக்கு நெருக்கமானது
பரிசு - மனதுக்கு நெருக்கமானது
பரிசு - மனதுக்கு நெருக்கமானது

கிராஃப்ட் ஸ்டாம்ப் செய்யக் கத்துக்கிட்ட உடன் என் கணவருக்கு ஒரு ஸ்டாம்ப் கிரீட்டிங் கார்டு செய்து கொடுத்தேன். அசந்துபோயிட்டார். பின்னர், தெரிந்தவர்களின் பிறந்த நாள், திருமண நாள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு நானே சில பெர்சனலைஸ்டு ஸ்டாம்ப் கார்டுகள் செய்து பரிசளிக்க, ‘ஆச்சர்யமா இருக்கே... இதை எங்கே வாங்கினீங்க?’னு கேட்டாங்க. அந்தப் பாராட்டுகளில்தான், இதை பிசினஸாகச் செய்யலாம் என்ற நம்பிக்கைக் கிடைத்தது. நிறைய தேடலுக்குப் பிறகு தரமான மெட்டீரியல்கள் வாங்கி காதல் சின்னங்கள், வண்ணத்துப்பூச்சி, ரொமான்ஸ் கப்பிள் என்று நிறைய வடிவங்களில் ஸ்டாம்ப்ஸ் செய்து ஆன்லைனில் அப்லோடு செய்தேன். பலரும் ‘இது புதுமையா இருக்கே’னு ஆர்வமானதுடன், ஆர்டர்களும் கொடுத்தாங்க. நான் இன்னும் க்ரியேட்டிவ்வான வடிவங்களில் ஸ்டாம்ப்ஸை உருவாக்கினேன்.

பரிசு - மனதுக்கு நெருக்கமானது
பரிசு - மனதுக்கு நெருக்கமானது
பரிசு - மனதுக்கு நெருக்கமானது
பரிசு - மனதுக்கு நெருக்கமானது
பரிசு - மனதுக்கு நெருக்கமானது

நான் உருவாக்கி வைத்திருக்கும் இந்த ஸ்டாம்ப்ஸ் மூலம், கார்டு மேக்கிங், கிஃப்ட் ராப்பிங், போட்டோ ஃபிரேமிங் போன்றவற்றைச் செய்து அசத்தலாம்; தீம் கான்செப்ட்டிலும் ஸ்டாம்ப்ஸ் தேர்வு செய்யலாம்; பார்ட்னருக்குப் பிடித்த விஷயங்களாகவும் பார்த்து வாங்கலாம். பார்ட்னருக்கு என்ன பிடிக்கும் எனக் குழம்புபவர்களுக்கு நாங்களே ஐடியாவும், அதற்கான பொருளையும் தேர்வு செய்து வழங்குகிறோம்.கார்டு, பெயின்ட், வார்னிஷ், பிரெஷ், பசை, ஸ்டாம்ப் என  பேக்கேஜ் ஆகவும் வாங்கி, சுயமாகச் செய்து மகிழலாம். திருமண அழைப்பிதழில் அச்சிடும் ஸ்டாம்ப்கள் முதல், ரிட்டர்ன் கிஃப்ட்களில் அச்சிடும் ஸ்டாம்ப்கள் வரை இதற்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. இதுவே வெளியே கொடுத்து இப்படி ஓர் வடிவத்தை பிரின்ட் செய்து வாங்க இதைவிடப் பல மடங்கு செலவாகும் என்பதால், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிச்சுட்டே இருக்கு. கொஞ்சம் புதுமையா யோசிச்சா நாமதான் மாஸ்’’ என்று சிரிக்கும் வர்ஷிதாவின் கிராஃப்ட் ஸ்டாம்ப் கலெக்‌ஷன், உங்கள் பார்வைக்கு!