Published:Updated:

‘பெண்கள் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்’ - மேற்கிந்தியத் தீவுகள் அணி த்ரில் வெற்றி

‘பெண்கள் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்’ - மேற்கிந்தியத் தீவுகள் அணி த்ரில் வெற்றி
‘பெண்கள் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்’ - மேற்கிந்தியத் தீவுகள் அணி த்ரில் வெற்றி

பெண்கள் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி த்ரில் வெற்றி பெற்றது

பெண்கள் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, மேற்கிந்தியத் தீவில் நடைபெற்றுவருகிறது. தற்போது, லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. குரூப்‘ஏ’ பிரிவில் இன்று நடைபெற்ற போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி, இங்கிலாந்தை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, பந்து வீச்சைத் தேர்வுசெய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில், அதிகபட்சமாக சோபியா ( Sophia Dunkley) 35 ரன்களை எடுத்தார். மேற்கிந்தியத் தீவுகள் அணி தரப்பில் ஷகீரா, டியான்ரா டோட்டின் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்துக் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. அந்த அணியில் டியான்ரா டோட்டின் 46 ரன்களைக் குவித்தார். இந்த இரு அணிகளும் ஏற்கெனவே அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்துவிட்டன. நவம்பர் 22-ம் தேதி நடைபெறும் அரையிறுதிப் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. மற்றொரு போட்டியில், இங்கிலாந்து அணி இந்தியாவை எதிர்கொள்கிறது. இறுதிப் போட்டி நவம்பர் 25-ம் தேதி நடைபெறும்.