Published:Updated:

சம்பளத்தைக் குறைத்துக் காட்டிய நிஸான் சி.இ.ஓ ஊழல் வழக்கில் கைது - நிறுவனப் பங்குகள் வீழ்ச்சி!

சம்பளத்தைக் குறைத்துக் காட்டிய நிஸான் சி.இ.ஓ ஊழல் வழக்கில் கைது - நிறுவனப் பங்குகள் வீழ்ச்சி!
சம்பளத்தைக் குறைத்துக் காட்டிய நிஸான் சி.இ.ஓ ஊழல் வழக்கில் கைது - நிறுவனப் பங்குகள் வீழ்ச்சி!

ரெனோ-நிஸான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கார்லோஸ் கோன் (Carlos Ghosn) டோக்கியோவில் கைது செய்யப்பட்டுள்ளார். உலகம் வியந்து பார்க்கும் தனியார் துறைத் தலைவர்களில் இவரும் ஒருவர். நிஸான் மற்றும் ரெனோ நிறுவனத்தின் பங்குகள் அசுர வளர்ச்சியை அடைந்ததற்கு இவர் மிகப்பெரிய காரணம். தன் சம்பளத்தை குறைவாகக் காட்டுவதற்காக நிஸான் நிறுவனத்தின் கணக்குகளை மாற்றி எழுதியதால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

CEO கார்லோஸ் மற்றும் Representative director கிரெக் கெல்லி (Greg Kelly) மீது சந்தேகம் எழ, சில மாதங்களாக இவர்களை விசாரித்து வந்ததில், இருவரும் சேர்ந்து பல ஆண்டுகளாக தங்கள் சம்பளத்தைக் குறைத்துக் காட்டுவதற்காக நிஸான் நிறுவனத்தின் கணக்குகளை மாற்றியுள்ளார்கள் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், இவர்கள் CEO பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர். தற்போது  டோக்கியோ ஸ்டாக் எக்ஸ்சேன்ஜில் கணக்குகளைப் போலியாக காட்டியதற்காக கார்லோஸ் கைது செய்யப்பட்டுள்ளார். 2017-ம் ஆண்டு ரெனோ நிறுவனத்துக்காக 60 கோடி ரூபாயும், நிஸான் நிறுவனத்துக்காக 75 கோடி ரூபாயும், மொத்தமாக 135 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றிருக்கிறார் இவர்.

நிஸான் நிறுவனம் திவாலாவதாக அறிவித்திருந்த நேரத்தில் அதை ரெனோ நிறுவனத்துடன் இணைத்து இரண்டு நிறுவனங்களையும் லாபத்தில் இயங்கும்படி மீட்டுக்கொண்டு வந்தவர் கார்லோஸ் கோன். நிஸான்-ரெனோ-மிட்சுபிஷி மூன்று நிறுவனங்களும் இணைந்ததற்கு இவர் முக்கிய காரணம். தற்போது இந்தக் கூட்டணிகளின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவில் தோல்வியடையும் நிலையில் இருந்த நிஸான் நிறுவனத்தை டட்ஸன் பிராண்டு மூலமாக மீண்டும் லாபத்தில் இயங்கச் செய்தார்.  

பிரேசில், லெபனான் மற்றும் ஃபிரான்ஸ் ஆகிய குடியுரிமையைக் கொண்டுள்ளவர் கார்லோஸ் கோன். இவர் கைதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் நிஸான் மற்றும் ரெனோ நிறுவனத்தின் பங்குகள் கிடுகிடுவென இறங்கி வருகின்றன.