இந்தியாவில் தொழில் வளர்ச்சிக்கான மாநிலங்களின் பட்டியலில் கடந்த ஆண்டில் 18-வது இடத்தில் இருந்த தமிழகம், இந்த ஆண்டு 15-வது இடத்துக்கு வந்துள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது, தொழில் துறையில் தமிழகம் முன்னேற்றம் கண்டுவருவதாக நினைக்கிறீர்களா என நாணயம் ட்விட்டரில் ஒரு கேள்வி கேட்டிருந்தோம்.

நமது கேள்விக்கு 83% பேர் ‘இல்லை’ என்று பதில் சொல்லியிருக்கின்றனர். இந்த சர்வேயில் பதில் சொன்னவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த சர்வேயின் முடிவை நம்பவில்லை என்றே அவர்கள் சொன்ன பதிலில் இருந்து தெரிகிறது. சிலபல தொழில் நிறுவனங்கள் தமிழகத்திலிருந்து வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்வது, கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகத்தை நோக்கிவரும் தொழில் முதலீடுகள் குறைந்துவருவது, இதனால் அதிகரித்துவரும் வேலை வாய்ப்பின்மை போன்ற காரணங்களை மனதில் வைத்து இவர்கள் இந்த மாதிரியானதொரு பதிலைச் சொல்லி இருக்கலாம். நாம் கேட்ட கேள்விக்கு 17% பேர் ‘ஆம்’ என்று பதில் சொல்லியிருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில் கிடைக்கும் புள்ளிவிவரங்களையும், இப்போது வந்திருக்கும் புள்ளிவிவரத்தையும் பார்க்கும்போது, தமிழகத்தில் தொழில் சூழல் மாறிவருவதைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

தமிழகத்தில் தொழில் வளர்ச்சி காண்பதற்குப் பல்வேறு தடைகள் இருந்தாலும், அந்தத் தடைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருகின்றன என்பதை நாம் புரிந்துகொண்டு, தொழில் துறை வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!

- ஏ.ஆர்.கே