Published:Updated:

``புரிந்து கொள்ளுங்கள்... அவருக்கு வயசு 20 இல்ல” -தோனி குறித்து கபில்தேவ்

``புரிந்து கொள்ளுங்கள்... அவருக்கு வயசு 20 இல்ல” -தோனி குறித்து கபில்தேவ்
``புரிந்து கொள்ளுங்கள்... அவருக்கு வயசு 20 இல்ல” -தோனி குறித்து கபில்தேவ்

இந்தியக்கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி-20 தொடரில் இருந்து ஓய்வு வழங்கப்பட்டது. இளம்வீரர்களுக்கு போதிய வாய்ப்பு வழங்க தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தேர்வுக்குழுத் தலைவர் தெரிவித்தார். தோனி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்துவிட்டார். தற்போது ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்த நிலையில் ஆஸ்திரேலியா டி-20 தொடரில் தோனியை நீக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தோனி கடந்த ஆண்டில் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை என்பது உண்மை தான். ஆனால் ஸ்டெம்புக்கு பின்னால் தோனி கில்லி தான். இதனால்  டி-20 நீக்கம் தோனி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விராட் கோலி தலைமையிலான இந்தியக் கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி-20 கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில்  நாளைத் தொடங்குகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், ``தோனி இந்திய அணியின் சொத்து. அவரது உடற்தகுதி மட்டுமே முக்கியம். தோனி எதைச் செய்தாலும் அதை சிறப்பாகவே செய்துள்ளார் என நான் நினைக்கிறேன். அவர் அனுபவம் வாய்ந்த வீரர். அவரது அனுபவம் இந்திய அணிக்கு உதவியாக இருக்கும். ஆனால் நாம் 20 வயதில் தோனி செய்ததை இப்போதும் செய்வார் என நாம் எதிர்பார்ப்பது தவறு. ஒரு விஷயத்தை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் தோனிக்கு 20 வயது இல்லை. அவரால் மீண்டும் அந்த வயதிற்குப் போக முடியாது. அவரால் அணிக்கு எவ்வளவு ரன்களை சேர்க்க முடியுமோ அதைச் செய்வார். அவரது உடற்தகுதிதான் முக்கியம். அதிக போட்டிகளை விளையாட வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.