Published:Updated:

நயன்தாரா ஸ்கர்ட்ஸ் நம்ம ஸ்பெஷல்! - டிசைனர் சாரு ரூபா

நயன்தாரா ஸ்கர்ட்ஸ் நம்ம ஸ்பெஷல்! - டிசைனர் சாரு ரூபா
பிரீமியம் ஸ்டோரி
News
நயன்தாரா ஸ்கர்ட்ஸ் நம்ம ஸ்பெஷல்! - டிசைனர் சாரு ரூபா

ஆர்வம் இருந்தால் அள்ளலாம் பிரேமா நாராயணன்

ட்டகாசமான ஸ்கர்ட்ஸ் கலெக்‌ஷன்... ஒவ்வொன்றும் யுனீக். அனைத்தும், கோவையில் வசிக்கும் டிசைனர் சாரு ரூபா ஸ்ரீகாந்த்தின் கைவண்ணம். ‘கலர்ஸ் அண்டு மிரர்ஸ்’ டிசைன் ஸ்டுடியோவின் உரிமையாளர் சாரு.

‘`நான் சென்னையில் பிறந்தாலும், அப்பாவின் வேலை காரணமா பல ஊர்களிலும் வளர்ந்திருக்கேன். 14 பள்ளிகளில் படிச்சிருக்கேன்னா பார்த்துக்கோங்க. தஞ்சாவூர் சாஸ்த்ராவில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, சிங்கப்பூர்ல எம்.எஸ் பண்ணினேன். ஃபேஷன் டிசைனிங்ல நான் இதுவரை ஒரு டிப்ளோமா கோர்ஸ்கூட பண்ணினதில்லை. ஆனாலும், டிசைனிங்கில் எனக்குச் சின்ன வயசிலிருந்தே ஒரு தனி ஆர்வம். குறிப்பா, எனக்கு ஸ்கர்ட்ஸ் ரொம்பப் பிடிக்கும். ஆனா, என் விருப்பத்துக்கு ஏற்ற ஸ்கர்ட்ஸ் மார்க்கெட்டில் கிடைக்கவேயில்லை. அதனால, நானே எனக்கு டிசைன் பண்ண ஆரம்பிச்சேன். மூணு வருஷம் முன்னாடி, என் ஃப்ரெண்டுக்கு ஒரு ஸ்கர்ட் டிசைன் பண்ணிக் கொடுத்தேன். அதை ஃபேஸ்புக்கில் நான் ஷேர் பண்ணியதும், நண்பர்கள் வட்டத்திலிருந்து ‘இந்த மாதிரி கஸ்டம் டிசைன் க்ளோத்திங் வேணும்’னு எக்கச்சக்க விசாரிப்புகள்.

நயன்தாரா ஸ்கர்ட்ஸ் நம்ம ஸ்பெஷல்! - டிசைனர் சாரு ரூபா

2016 மார்ச் வரை, மாசத்துக்கு மூணு, நாலு பீஸ்தான் டிசைன் பண்ணிக் கொடுத்தேன். தொடர்ந்து நான் தயாரிச்ச ஸ்கர்ட்களை ஆன்லைன்ல போடுறதுக்கு முன்னாலயே புக் பண்ற அளவுக்கு ரெஸ்பான்ஸ் இருந்தது. அதன் பிறகுதான் ‘கலர்ஸ் அண்டு மிரர்ஸ்’ முழுவீச்சில் இயங்கியது. சம்மர் கலெக்‌ஷனாக 12 `ராப் அரௌண்டு ஸ்கர்ட்ஸ்’ தயாரிச்சு ஃபேஸ்புக்கில் போட்டேன். ரெண்டு மணி நேரத்துக்குள் எல்லாம் வித்துடுச்சு. அப்புறம்தான் இதை ‘பிராண்டு’ பண்ணி, விற்க ஆரம்பிச்சேன்’’ என்று தன் பிராண்டு உருவான  பின்னணி சொன்னவர், தன் பணி பற்றியும் பகிர்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நயன்தாரா ஸ்கர்ட்ஸ் நம்ம ஸ்பெஷல்! - டிசைனர் சாரு ரூபா

‘`ஒரு ஸ்கர்ட்டுக்கான கான்செப்ட் யோசிக்கிறதில் தொடங்கி, அதை வடிவமைக் கிறது, அதுக்கான முதலீடு  போடுறது, தைக்கிறது, அந்த புராடக்ட்டை போட்டோஸ் எடுக்கிறது, சோஷியல் மீடியாவில் மார்க்கெட்டிங் பண்றது, ஆர்டர் வந்ததும் பேக் பண்ணி அனுப்புறது, அனுப்பின பிறகு வாடிக்கை யாளர்களைப் பேணும் ‘கஸ்டமர் கேர்’ வரை... எல்லாமே அடியேன்தான்.

நயன்தாரா ஸ்கர்ட்ஸ் நம்ம ஸ்பெஷல்! - டிசைனர் சாரு ரூபா

என் ‘கலர்ஸ் அண்டு மிரர்ஸ்’ லேபிள் கொண்ட ஸ்கர்ட்கள் இணையத்தில் மட்டுமே கிடைக்கும். இது எங்க தயாரிப்புகளுக்கான லேபிள்தானே தவிர, மத்தவங்களுடைய டிசைனர் புராடக்ட்டுகளை மறுவிற்பனை செய்யும் பொட்டீக் கிடையாது. ஒரு பீஸ் போல இன்னொரு பீஸ் எங்ககிட்டயே கிடைக்காது. ஒவ்வொன்றும் யுனீக் டிசைன் என்பதுதான் எங்க ஸ்பெஷல்’’ என்கிற சாரு, தன் ஆன்லைன் வர்த்தகத்தின் வெற்றிக்குக் காரணமான தன் சக கலைஞர்களை நன்றியுடன் குறிப்பிடுகிறார்.

நயன்தாரா ஸ்கர்ட்ஸ் நம்ம ஸ்பெஷல்! - டிசைனர் சாரு ரூபா

‘`என் அலைவரிசைக் கேற்ற ரசனை கொண்ட வங்க என்கூட தொழிலில் இணைஞ்சாங்க. என் தம்பியும் புகைப்படக் கலைஞருமான அனிருத் ஸ்ரீகாந்த், ஃபுட் அண்டு ஃபேஷன் போட்டோகிராபர் அனிதா காமராஜ்... இவங்க ரெண்டு பேரின் பேரார்வமும், கடும் உழைப்பும்தான் என் தயாரிப்புகளை வெளியுலகுக்கு இன்னும் அழகாக எடுத்துக்காட்டுது. மேலும், எங்க மாடல்களுக்கு மேக்கப் செய்யும் ஒப்பனைக் கலைஞர்கள் விஷ்ணுப்ரியா முரளி, ஸ்ரிங்கா ஷ்யாம் ரெண்டு பேருக்கும் நன்றிகள்’’ என்று சொல்லும் சாரு, தன் பிராண்டுக்கான மாடல்கள் விஷயத்திலும் மாறுபட்டு யோசித்திருக்கிறார்.

நயன்தாரா ஸ்கர்ட்ஸ் நம்ம ஸ்பெஷல்! - டிசைனர் சாரு ரூபா

‘`எங்க ஸ்கர்ட்டுகளுக்கு மாடலிங் செய்ய புரொஃபஷனல் மாடல்களைத் தேடிப் போறதில்லை. பைக் ரேஸர்ஸ், சிறப்புக் கல்வி ஆசிரியர்கள், மருத்துவர்கள், மேடை நாடகக் கலைஞர்கள், ஒப்பனைக் கலைஞர்கள், ஃபிட்னஸ் இன்ஸ்ட்ரக்டர்கள், நடனக் கலைஞர்கள், எழுத்தாளர்கள்... இப்படி பல துறைகளைச் சேர்ந்த, மாடலிங் துறைக்குத் தொடர்பில்லாத பெண்களை நாங்க எங்க பிராண்டுக்கு மாடலிங் செய்ய வெச்சிருக்கோம். குறிப்பா, எங்களுடைய ‘எம்ப்ரேஸிங் டைவர்ஸிட்டி’ என்கிற போட்டோ சீரிஸுக்காக ரெண்டு திருநங்கைகள் மற்றும் ஒரு வெண்புள்ளி பாதிப்பாளரை வைத்து ஷூட் பண்ணினோம். திருநங்கை பாரா, எலெக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன்ஸ் இன்ஜினீயர். டிபார்ட்மென்ட் டாப்பர், கோல்டு மெடலிஸ்ட்டும்கூட. எப்போதும் அவரைச் சுத்தி ஒயர்களும் கருவிகளும் இறைஞ்சு கிடக்க, ஏதாவது புராஜெக்ட் பண்ணிட்டே இருப்பாங்க. பரதத்தை முறையாகக் கத்துக்கிட்டு, நிறைய நிகழ்ச்சிகள் நடத்தியிருக்காங்க. அடுத்தவர், திருநங்கை மாடல் ரகஸ்யா. ‘மிஸ் ட்ரான்ஸ்க்வீன் இந்தியா பேஜென்ட் 2017’ அழகிப் போட்டியின் ரன்னர்.  மாடல்களாக விரும்பும் திருநங்கைகளுக்காகத் தென்னிந்தியாவில் அகாடமி நடத்துறாங்க. இப்போ ‘மிஸ் ட்ரான்ஸ் செக்‌ஸுவல் ஆஸ்திரேலியா இன்டர்நேஷனல் 2018’ போட்டியில் கலந்துக்கிறதுக்காக தீவிரத் தயாரிப்பில் இருக்காங்க.

ரஞ்சனி ராமகிருஷ்ணன், விஸ்காம் ஃபைனல் இயர் ஸ்டூடன்ட்.  தன் 11 வயதில் ‘விடிலிகோ’ என்கிற, உடலில் வெண்புள்ளிகள் தோன்றும் குறைபாடு இருக்கிறதை தெரிஞ்சுகிட்டவங்களுக்கு புரொடக்‌ஷன் டிசைனர் அல்லது ஆர்ட் டைரக்டர் ஆகணும்னு ஆசை. இப்போ அவங்க சென்னை ‘லிட்டில் தியேட்டர்’க்கு செட் பிராப்பர்டி டிசைன் பண்ணிட்டிருக்காங்க’’ என்று ஆச்சர்யத் தகவல்கள் கூறுகிறவர், தன் வாடிக்கையாளர்கள் மற்றும் குடும்பம் பற்றிச் சொல்லும்போது இன்னும் உற்சாகமாகிறார்.

நயன்தாரா ஸ்கர்ட்ஸ் நம்ம ஸ்பெஷல்! - டிசைனர் சாரு ரூபா

‘`எனக்கு இந்தியா முழுக்க கஸ்டமர்ஸ் இருக்காங்க. வெளிநாடுகளில் அதிகம். அவங்களுக்காக பிரத்யேகமாக நான் உருவாக்கிக் கொடுக்கும் உடைகள் அவங்களை எப்படி ஃபீல் பண்ண வைக்குதுன்னு அவங்க அனுப்பும் மெசேஜில்தான் காலையில் கண் விழிப்பேன். அது பெரிய பூஸ்ட். என் வெற்றிக்கு, என் கணவர் மற்றும் மாமியார், மாமனார், மைத்துனர் தரும் ஆதரவு முக்கியக் காரணம். என் கணவர் சத்யா எம்.பி.ஏ பட்டதாரி என்பதால் பிசினஸில் ‘போரிங்’ விஷயமான கணக்கு வழக்கெல்லாம் அவர் பார்த்துப்பார். அதனாலதான் க்ரியேட்டிவ் சைடில் என்னால் முழு கவனமும் செலுத்த முடியுது. வெப்சைட்டை உருவாக்கியவர் என் மைத்துனர். என் மாமனார் லாஜிஸ்டிக்ஸ் சம்பந்தப்பட்ட எல்லா உதவிகளும் செய்வார். ‘சாரு... இது எப்படி இருக்கும்’னு எனக்குப் புதுப்புது ஐடியாஸ் கொடுப்பாங்க என் மாமியார். என்னுடைய முதல் ஷோவில் உபயோகப்படுத்திய 200-க்கும் மேற்பட்ட துணிப்பைகளுக்கு என் மாமனார், மாமியார்தான் கைகளால் குஞ்சம் முடிஞ்சு கொடுத்தாங்க’’ என்று நெகிழ்பவர், திரைத்துறையிலும் பணிபுரிந்திருக்கிறார்.

நயன்தாரா ஸ்கர்ட்ஸ் நம்ம ஸ்பெஷல்! - டிசைனர் சாரு ரூபா

‘` ‘வேலைக்காரன்’ படத்தின் புரொமோஷனில் பேனர், போஸ்டர்ல நயன்தாரா போட்டிருக்கும் ஸ்கர்ட்ஸ் எல்லாம் எங்க தயாரிப்புகள்தான். அதுக்கப்புறம் நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. என்றாலும், இன்னும் முழுத் திரைப்படத்துக்கும் வொர்க் பண்ணலை. அதைவிட, என் இலக்கு முழுக்க முழுக்க என் கஸ்டமர்கள்தான். ‘ஸாரி, ஸ்டாக் இல்லை’னு சொல்லாம அவங்களுக்கு புராடக்ட்ஸ் கொடுக்கணும். கூடிய விரைவில் பேட்ச் வொர்க் செய்த புடவைகளை அறிமுகப்படுத்தலாம்னு இருக்கேன்’’ என்கிறார் துள்ளலுடன்.

வெல்கம்!

நயன்தாரா ஸ்கர்ட்ஸ் நம்ம ஸ்பெஷல்! - டிசைனர் சாரு ரூபா

400 ஸ்கர்ட்ஸ்...

400 டிசைன்ஸ்!


‘`நாங்க நம் நாட்டின் எல்லா மாநில நெசவாளர்களின் தறி மெட்டீரியல்களையும், பிரின்ட்களையும் பயன்படுத்து றோம். பருத்தி, காதி, சில்க் காட்டன் மற்றும் ஆர்கன்ஸா ஆகியவை எங்களுடைய டாப் லிஸ்ட் மெட்டீரியல்கள். இதுவரை 400 ஸ்கர்ட்கள் தயாரிச்சுருக்கோம். அதாவது, 400 டிசைன்ஸ். இதில் நாங்க ட்ரெண்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதில்லை. நான் சொல்ற டிப்ஸும் அதுதான். அப்பப்போ வர்ற ட்ரெண்டை ஃபாலோ பண்ண வேண்டாம்; பாரம்பர்யத்தைத் தூக்கிட்டும் திரிய வேண்டாம். உங்களுக்கு என்ன டிரஸ் பிடிக்குதோ, அதை அழகா, நளினமா உடுத்திக்கொண்டால் போதும். பிடிச்ச டிரஸ்ஸை உடுத்தும்போதுதான் அதில் சௌகர்யமா உணர முடியும்” என்கிறார் சாரு.