Published:Updated:

`கூடைப்பந்து விளையாட வருபவர்களுக்கு ரோல்மாடலாக இருப்பேன்!’ - ஸ்ருஷ்டி சுரேன்

`கூடைப்பந்து விளையாட வருபவர்களுக்கு ரோல்மாடலாக இருப்பேன்!’ - ஸ்ருஷ்டி சுரேன்
News
`கூடைப்பந்து விளையாட வருபவர்களுக்கு ரோல்மாடலாக இருப்பேன்!’ - ஸ்ருஷ்டி சுரேன்

`கூடைப்பந்து விளையாட வருபவர்களுக்கு ரோல்மாடலாக இருப்பேன்!’ - ஸ்ருஷ்டி சுரேன்

சமீபத்தில், ஃபிபா (FIBA - International Basketball Federation Association) சார்பாக 18 வயதுக்கு உட்பட்டோருக்கான சர்வதேச அளவிலான கூடைப்பந்து விளையாட்டுப்போட்டி பெங்களூரில் நடைபெற்றது. இதில் சென்னையைச் சேர்ந்த ஸ்ருஷ்டி சுரேன் தன்னுடைய முழுமையான திறனை வெளிப்படுத்தி, இந்தியா வெற்றிபெற வழிவகுத்தார். வெற்றிக் கோப்பையுடன் தமிழகம் திரும்பிய ஸ்ருஷ்டியிடம் பேசினேன்.

``கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கூடைப்பந்து விளையாடி வருகிறேன். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கூடைப்பந்தில் கவனம் செலுத்துபவர்கள் மிகவும் குறைவானவர்களே. அதனால்தான் கூடைப்பந்தில், நான் மற்றவர்களுக்கு, முன் மாதிரியாகத் திகழ வேண்டும் என ஆசைப்பட்டேன். பெங்களூரில் பி.ஏ சைக்காலஜி முதலாமாண்டு படித்து வருகிறேன். இப்போது, கூடைப்பந்தை அமெரிக்காவில் சென்று பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அதனால், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து என் படிப்பை அமெரிக்காவில் தொடரவிருக்கிறேன். சிறப்பாகப் பயிற்சியில் ஈடுபட்டு, இந்தியாவுக்காக அடுத்தடுத்த கோப்பைகள் குவிக்க வேண்டும் என்பதே என்னுடைய கனவு. அதே நேரத்தில், சமூகத்தில் பெண்களுக்கு முன்மாதிரியாகவும் திகழ வேண்டும். பெண்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் உறுதியானவர்கள் என்பதை நிச்சயம் நிரூபிப்பேன்" என்று சொல்லும் ஸ்ருஷ்டி மாடலிங் செய்வதிலும் அதிக ஆர்வம் கொண்டவர்.

கனவு ஜெயிக்க வாழ்த்துகள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz