Published:Updated:

கடைக்குட்டி சிங்கம்... விவசாயிக்கு மரியாதை!

கடைக்குட்டி சிங்கம்... விவசாயிக்கு மரியாதை!
பிரீமியம் ஸ்டோரி
கடைக்குட்டி சிங்கம்... விவசாயிக்கு மரியாதை!

திரைக்களம்பசுமைக்குழுபடம்: வ.யஷ்வந்த்

கடைக்குட்டி சிங்கம்... விவசாயிக்கு மரியாதை!

திரைக்களம்பசுமைக்குழுபடம்: வ.யஷ்வந்த்

Published:Updated:
கடைக்குட்டி சிங்கம்... விவசாயிக்கு மரியாதை!
பிரீமியம் ஸ்டோரி
கடைக்குட்டி சிங்கம்... விவசாயிக்கு மரியாதை!

“டாக்டருக்கெல்லாம் டிஆர்-னு (Dr) போட்டிருக்கீங்க. இன்ஜினீயருக்கு இ.ஆர்னு (Er) போட்டிருக்கீங்க. பிரின்டிங் வெச்சு நடத்துற வடிவேலு மச்சானுக்குக்கூட ‘பிரஸ்’னு கௌரவமா போட்டிருக்கீங்க. விவசாயம் பண்ற எனக்கு, விவசாயினு போட்டிருக்கலாம்ல.”

“விவசாயினு போட்டா சிரிச்சுடுவாங்க மாப்ள” 

கடைக்குட்டி சிங்கம்... விவசாயிக்கு மரியாதை!

‘‘சிரிக்கிறவன செருப்பால அடிப்பேன். குணசிங்கம்... விவசாயினு போடுங்க. நல்லா கம்பீரமா இருக்கும். நானும் மாசம் ஒன்றரை லட்ச ரூவா சம்பாதிக்கிறேன்ல”

-சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் கடைக்குட்டி சிங்கம் படத்தில் தெறிக்கும் வசனம் இது.

விவசாயம், இறந்து கொண்டிருக்கிறது; விவசாயம் செய்தால் முன்னேறவே முடியாது; விவசாயிகளின் தற்கொலை தொடர்கதையாகி விட்டது என்பது போன்ற தகவல்களே அதிகமாகப் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில், இப்படிப்பட்ட வசனங்கள், விவசாயிகளுக்கும் விவசாய நேசர்களுக்கும் உந்துசக்தியாக இருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடைக்குட்டி சிங்கம்... விவசாயிக்கு மரியாதை!குறிப்பாக, வெகுஜன மீடியா என்றழைக்கப்படும் சினிமா மூலமாகக் கடத்தப்படும் இத்தகைய சங்கதிகள், வெகுவேகமாக ஊடுருவும் சக்தி படைத்தவை. அதைச் சரியாகப் புரிந்துகொண்டு படத்தில் பயன்படுத்தியிருக்கும் இயக்குநர் பாண்டிராஜ், பாராட்டுதலுக்குரியவர். அவருடைய எண்ணங்களைச் சரியாக வெளிப்படுத்தும் விவசாயியாக வாழ்ந்திருக்கும் நடிகர் கார்த்தியும் பாராட்டுக்குரியவரே! ஜனரஞ்சகம், பொழுதுபோக்கு, மனிதஉறவுகள் என்று கலவையான அம்சங்களோடு பயணிக்கும் கதையினூடே... இயற்கை விவசாயம், விவசாயக் குடும்பம், சேற்று வாழ்க்கை என்று அனைத்தையும் ஆங்காங்கே தொட்டுச்சென்றிருக்கிறார்கள்.

விவசாயி என்று பெரிதாக, பச்சை எழுத்தில் எழுதப்பட்டிருக்கும் பைக்கில் வரும் கதாநாயகன் கார்த்தி, “அட பாத்தீங்களா, இந்தச் சந்தோஷத்தையா (ரேக்ளா ரேஸ்) இத்தனை நாள் தடை பண்ணி வெச்சிருந்தீங்க. இங்க மனுஷனைவிட, மாட்டுக்குத்தான் மாஸ் அதிகம்” என்று அறிமுகக்காட்சியில் சொல்லும்போது, தியேட்டரே வெகுவாக ஆமோதிக்கிறது. படம் நெடுகவே கைதட்டல்களை அள்ளும் இத்தகைய வசனங்களுக்குப் பஞ்சமில்லை.

“பணக்காரன் டயட்டும், விவசாயியோட பட்டினியும் வேற வேறனு என்னைக்குப் புரியுதோ... அன்னைக்குத்தான் விவசாயம் பார்க்க வைச்சிட்டு அவங்களை ரேஷன் அரிசி வாங்கித் திங்க வெச்சது எவ்ளோ பெரிய தேசக்குற்றம்ங்குறது எல்லோருக்கும் தெரியும்; விவசாயம் செய்றது எனக்கு ஆசை இல்லீங்க... பேராசை. படைக்கிறவன் மட்டும் கடவுள் இல்லை, பயிர் பண்றவனும் கடவுள்தான்” என்றெல்லாம் கதாநாயகன் பேசும் வசனங்கள்.. விவசாயி என்று தோளில் துண்டைத் தூக்கிப்போட்டுக் கொண்டு நாம் வீரநடைபோட்டுக் கொண்டிருப்பதற்கு உண்டான அர்த்தத்தை ஊருக்கே சொல்கிறது! வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு மூலிகைச்சாறு, மூலிகை சூப், மரக்கன்று என்றெல்லாம் கொடுத்தனுப்பும் காட்சிகள்... இயற்கையோடு இணைந்த வாழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்கின்றன.

வீட்டு ஆடு, மாடுகளைத் தம்பிகளாகப் பார்க்கும் கிராமத்து ஜனங்கள்; கால்நடைகளின் இறப்புக்குக் கூடி நின்று துக்கம் விசாரிக்கும் மக்கள்; வாழைத்தோட்டம் அழியும்போது கதறும் விவசாயக் குடும்பம்... என ஒவ்வொரு காட்சியிலும் விவசாயக் குடும்பங்களின் வலியைப் பார்வையாளர்களுக்கு நன்றாகவே கடத்துகிறார்கள்.

“பசுமை விகடன்ல எங்க மாமாவைப் பத்தி போட்டிருக்காங்க” என்று குதூகலமாகும் கதாநாயகனின் அக்கா மகள், தங்கள் வீட்டு நிகழ்வில் பங்கேற்கும் அனைவருக்கும் பசுமை விகடனைப் பரிசாகக் கொடுக்கும் காட்சி, இன்று தமிழகத்தின் பல ஊர்களிலும் திருமணங்களில் நடக்கும் நிதர்சனத்தை எடுத்துக் காட்டுகிறது. இதன் தொடர்ச்சியாக, ஒரு கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சிக்கு விவசாயியான கதாநாயகனை மேடையேற்றுவது அருமை.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் மிகப்பெரிய படம் உட்பட, விவசாயம் மற்றும் கிராமியம் சார்ந்த பல்வேறு காட்சிகள் அரங்கு முழுக்க நிறைந்திருக்க, மேடையேறும் கதாநாயகன் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தைப் பாடமாக எடுத்து, அனைவரின் மனதிலும் பதிய வைக்கிறார். கூடவே, அவர் எழுப்பும் கேள்விகள்... சமூகத்திலிருக்கும் அனைவரையும் நோக்கி ஈட்டியாகப் பாயத்தவறவில்லை.

“பொதுவா நம்ம புள்ளைங்ககிட்ட டாக்டராகறியா, இன்ஜினீயராகறியா, கலெக்டராகறியானுதான் கேக்குறோமே ஒழிய, விவசாயத்தை ஒரு ஆப்ஷனாகூடத் தரமாட்டேங்கறோம். ஆனா, எங்கப்பா... டாக்டராகிறியா, இன்ஜினீயராகறியா, கலெக்டராகறியா இல்ல, விவசாயி ஆகறியானு கேட்டார். ‘விவசாயம்’னு முடிவெடுத்து களத்துல இறங்கிட்டேன்.” - விவசாயக் குடும்பங்களில் கடந்த பல ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் மண்ணுக்கும் பொன்னுக்குமான இந்தப் போராட்டத்தைத் தெளிவாக மேடையேற்றியிருக்கிறார்கள்.

க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியின்போது கொஞ்சம் காமெடியாகத் தோன்றினாலும்... “யாராவது விவசாயிங்க இருந்தா வந்துடுங்க, அவங்களை நான் அடிக்கமாட்டேன். ஏன்னா, ஏற்கெனவே .... வயித்துல அடிச்சிடுச்சி” என்று கதாநாயகன் சொல்வது, ஆழமாக யோசிக்க வைக்கிறது.

படம்... விவசாயக் குடும்பம் மற்றும் அக்குடும்ப உறவுகளுக்கு இடையே நடக்கும் பாசப்போராட்டங்களைத்தான் முக்கியமாகப் பேசுகிறது. ஆனால், அதற்கு நடுநடுவே பசுமையைப் பற்றிப் பேசியிருப்பது... இயற்கை விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் செய்திருக்கும் மரியாதையே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism