Published:Updated:

அப்போது கம்யூனிஸ்ட்களுக்கு எதிரி; இப்போது ஹீரோ! - யார் இந்த போலீஸ் அதிகாரி யாதீஷ் சந்திரா?

அப்போது கம்யூனிஸ்ட்களுக்கு எதிரி; இப்போது ஹீரோ! - யார் இந்த போலீஸ் அதிகாரி யாதீஷ் சந்திரா?
அப்போது கம்யூனிஸ்ட்களுக்கு எதிரி; இப்போது ஹீரோ! - யார் இந்த போலீஸ் அதிகாரி யாதீஷ் சந்திரா?

த்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சபரிமலை செல்ல விரதம் இருந்துவந்தார். இருமுடி கட்டி கன்னியாகுமரியில் இருந்து சபரிமலைக்குப் புறப்பட்ட அவரை  சபரிமலையிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில், நிலக்கல் பகுதியில் கேரள காவல்துறை அதிகாரிகள் நிறுத்தினர். கோபமடைந்த பொன். ராதாகிருஷ்ணன், காவல்துறை அதிகாரிகளிடத்தில் 'தனியார் வாகனங்களை ஏன் பம்பைக்கு அனுமதிப்பதில்லை' என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார்.

பாதுகாப்புப் பணியில் இருந்த எஸ்.பி. யாதீஷ் சந்திரா, ' சமீபத்தில் ஏற்பட்ட  வெள்ளத்தில் பம்பையில் வாகனம் நிறுத்தும் இடங்கள் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன. அங்கே தனியார் வாகனங்களை அனுமதித்தால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் ' எனப் பதில் அளித்தார். பக்தர்கள், 'கேரள  அரசு போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பேருந்தில்தான் பம்பைக்குச் செல்ல முடியும் என்று யாதீஷ் சந்திரா கறார் காட்டினார். மேலும், பொன்.ராதாகிருஷ்ணனிடம், 'இந்தப் பாதையில் தனியார் வாகனங்கள் செல்ல மத்திய அமைச்சர் வேண்டுமானால் உத்தரவிட்டு கைப்பட எழுதித் தரட்டும் .நான் தனியார் வாகனங்களை அனுமதிக்கிறேன் ' என்று பதில் அளித்தார். பொன். ராதாகிருஷ்ணனோ, 'என்னிடம் அந்த அதிகாரம் இல்லை ' என்று  பதிலளிக்க, வாக்குவாதம் முற்றியது. அமைச்சரின் காரை அனுமதிக்க மறுத்த யாதீஷ் சந்திரா, முடிவில் அவரைக் கேரள அரசு பேருந்தில் பம்பைக்கு அனுப்பிவைத்தார். 

மத்திய அமைச்சரைத் தடுத்து நிறுத்திய போலீஸ் அதிகாரி யாதீஷ் சந்திரா, சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டுவருகிறார். இவ்வளவு நாளும் கேரள கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த யாதீஷ் சந்திரா, தற்போது அவர்களுக்கும் ஹீரோவாகத் தெரிகிறார். ஏனென்றால், கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்தும் பல போராட்டங்களில் தடியடி நடத்தியவர் யாதீஷ் சந்திரா. போலீஸ் அதிகாரியாகத் தன் கடமையைக் கண்ணும்கருத்துமாக நிறைவேற்றுபவர். அரசின் உத்தரவைப் பின்பற்ற முயல்பவர். 

கடந்த 2015- ம் ஆண்டு, அங்கமாலியில் இடதுசாரி அமைப்புகள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு, கொச்சி தேசிய சாலையில் மறியலில் ஈடுபட்டன. அப்போது, மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்களையும் துவைத்துத்  தொங்கப்போட்டவர்தான் இந்த யாதீஷ் சந்திரா. தடியடியில் இந்தப் பகுதி மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் ஷிபு உள்ளிட்ட ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சமயத்தில், தற்போதைய கேரள முதல்வர்  பினராயி விஜயன், கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் ஆகியோர் யாதீஷ் சந்திரா மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர். 

கொச்சி அருகே உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு எதிராக இடதுசாரி அமைப்புகள் போராட்டம் நடத்தியபோது, பெண்கள் குழந்தைகள் மீது தடியடி நடத்தியதாக யாதீஷ் சந்திரா மீது குற்றச்சாட்டு உண்டு. அப்போது, கொச்சி துணை கமிஷனராக யாதீஷ் சந்திரா இருந்தார். கேரளாவில் 2016-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சி அமைத்ததும், யாதீஷ் சந்திராவை ஓரம் கட்டுவார்கள் என்று யூகிக்கப்பட்டது. ஆனால், திருச்சூர் மாவட்ட எஸ்.பி-யாக அவர் நியமிக்கப்பட்டு, தற்போது சபரிமலையில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுவருகிறார். 

கர்நாடக மாநிலம் தவனகரேவைச் சேர்ந்த யாதீஷ் சந்திரா, 2011-ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.