Published:Updated:

``ரயிலில் வந்தது ஆட்டுக்கறிதான்!” - கால்நடை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு முடிவு

``ரயிலில் வந்தது ஆட்டுக்கறிதான்!” -  கால்நடை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு முடிவு
``ரயிலில் வந்தது ஆட்டுக்கறிதான்!” - கால்நடை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு முடிவு

'சென்னை ரயில் நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டது ஆட்டுக்கறிதான்' என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. 

``ரயிலில் வந்தது ஆட்டுக்கறிதான்!” -  கால்நடை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு முடிவு

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரிலிருந்து எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை எழும்பூருக்கு தெர்மக்கோல் பாக்ஸில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி கொண்டு வரப்பட்டது. அந்த இறைச்சிகுறித்து ரகசியத் தகவல், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்த அதிகாரிகள், தெர்மக்கோல் பாக்ஸைப் பிரித்து ஆய்வுசெய்தனர். அப்போதுதான் கொண்டு வரப்பட்டது ஆட்டு இறைச்சி அல்ல, நாய்க்கறி என்ற தகவல் பரவியது. இதனால், சென்னை மக்கள் அதிர்ச்சியடைந்தனர். 

``ரயிலில் வந்தது ஆட்டுக்கறிதான்!” -  கால்நடை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு முடிவு

எனினும், அதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகாததால், குழப்பம் நீடித்துவந்தது. இந்நிலையில், சென்னை ரயில் நிலையத்தில் பறிமுதல்செய்யப்பட்ட இறைச்சிகள் ஆய்வுக்காக சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டது. கடந்த     17 -ம் தேதி அனுப்பட்ட மாதிரிகள், 19 முதல் 21 வரை ஆய்வுசெய்யப்பட்டது. அதன் ஆய்வு முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.  அந்த ஆய்வு முடிவில், சென்னை ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது நாய்க்கறி அல்ல எனவும், அது ஆட்டுக்கறிதான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வுசெய்யப்பட்ட மாதிரி இறைச்சிகள், சிறிய ஆடு அல்லது செம்மறி ஆடு வகையைச் சார்ந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.