ஒவ்வொரு ஜூன் அல்லது ஜூலை மாதமும் இருங்காட்டுக்கோட்டைக்குப் பக்கத்தில் இருப்பவர்களுக்குக் காது வலி ஏற்படும். காரணம் - நேஷனல் சாம்பியன்ஷிப், நோவிஸ், ஒன்மேக் என்று ரேஸ் ட்ராக்கில் பைக்குகள் உறுமும் காலம் அது. இந்த மாதமும் அப்படித்தான். இந்த சனி, ஞாயிறு காற்று முழுக்க ‘வ்வ்வ்ர்ர்ர்ரூம்’ சத்தம்தான். இதில் பெண் ரைடர்களும் தங்கள் ஜிமிக்கி, கம்மலை எல்லாம் கழற்றிவிட்டு... க்ளோவ்ஸ், ரேஸ் சூட், ஹெல்மெட் என்று ஃபார்மலுக்கு மாறிவிடுவார்கள்.

இப்போதெல்லாம் ரெஹானா பைக் ஓட்டுகிறார் என்றாலே, ஆடியன்ஸ் குஷியாகி விடுகிறார்கள். கலந்துகொண்ட முதல் ரேஸிலேயே முதல் இடத்தில் போடியம் ஏறிய ரெஹானாவுக்கு, இது எத்தனையாவது ரேஸ் என்று தெரியவில்லை. ஆனால், இன்னும் அதே முதல் இடத்தில்தான் உறுமிக் கொண்டிருக்கிறார். ‘ரெஹானாவை விட்டால் வேறு யார்’ என்று பேசிக் கொண்டிருக்க, புது ரைடர் ஆன் ஜெனிஃபர் ரெஹானாவுக்கு செம டஃப் கொடுத்துக் கொண்டிருந்தார். இத்தனைக்கும் ஜெனிஃபருக்கு ஓட்டுப் போடும் வயதுகூட ஆகவில்லை. டிவிஎஸ் ஒன்மேக் ரேஸில் ரெஹானாவுக்கு அடுத்து ஆன் ஜெனிஃபரின் பைக்தான் முட்டி மோதிக்கொண்டிருந்தது. இருவருமே Sparks Racing Team-க்காக பைக் ஓட்டுபவர்கள். 11.46 நிமிடங்களில் 5 லேப்புகளை முடித்துவிட்டு, பிட் ஸ்டாப்பில் பைக்கை நிறுத்திவிட்டு வந்தார் ரெஹானா. ‘‘போன ரவுண்டில் ஃபர்ஸ்ட்தான் வந்துக்கிட்டிருந்தேன். கீழே விழுந்ததால், 4-வது இடம்தான் கிடைச்சது. இந்த முறை கான்சென்ட்ரேஷனை மிஸ் பண்ணலை. ஃபர்ஸ்ட் அடிச்சுட்டேன்’’ என்று வியர்த்து விறுவிறுத்தபடி கை கொடுத்தார்.

ஆனால், நேஷனல் சாம்பியன்ஷிப்பில் ஜெனிஃபர், தான் யாரென்று காட்டிவிட்டார். ‘‘ஒன்மேக்கில் கார்னரிங்கில் நான் கொஞ்சம் Wide எடுத்துட்டேன். அதில் மிஸ் ஆகிடுச்சு. அதான் செகண்ட். இதில் விடலை!’’ என்று கெத்து காட்டினார். நேஷனலில் ஜெனிஃபர்தான் ஃபர்ஸ்ட். இதில் அலிஷாவுக்கு இரண்டாவது இடம். ஸ்ருதி நாகராஜன், இதே ரேஸில் கொஞ்சூண்டு விநாடிகள் வித்தியாசத்தில் மூன்றாவது இடம் வந்தார். ஸ்ருதி, தாய்லாந்து ஸ்கூட்டர் ரேஸிலெல்லாம் கலந்துகொண்டு ஜெயித்தவர். இந்த மூன்று பெண் முத்துக்களும் இப்போதைக்கு ரேஸின் சொத்துக்கள்.

ரேஸ்னு வந்துவிட்டால் வெள்ளைக்காரனாக மாறுவது ஹோண்டா டீம்தான். ஒவ்வொரு தடவையும் புதுப்புது ரைடர்களையும், திறமைசாலிகளையும் உருவாக்கிவிடுவதில் ஹோண்டாவுக்கு நிகர் யாருமில்லை. ரெஹானாகூட ஆரம்பத்தில் ஹோண்டாவின் Ten10 அகாடமிக்காகத்தான் பைக் ஓட்டினார். ஸ்ருதியும் ஹோண்டாவில் இருந்தவர்தான். மேலும் ராஜீவ் சேது, மதனா குமார் என்று தமிழ்ப் பசங்களையும் ஹோண்டாவில் அதிகம் பார்க்கலாம்.

அந்த கேட்டகிரியில் இப்போது மெர்சல் காட்டி வருபவர் முஹமது மிக்கேல். ‘யாருய்யா அந்த 21-ம் நம்பர் பைக்... வெறித்தனமா ஓட்டுறோரே.. பெரிய புரொஃபஷனல் ரைடரா இருப்பாரோ.. எனக்கே அவரைப் பார்க்கணும் போல இருக்கி’ என்று ஒவ்வொரு ஆடியன்ஸும் கண்களை அகல விரித்தபடி டிராக்கை அளந்து கொண்டிருக்க, பைக்கில் இருந்து இறங்கிய முஹமது மிக்கேலைப் பார்த்ததும் நமக்கே ஷாக்! வெறும் 14 வயது ஆன மிக்கேல், 8-ம் வகுப்புதான் படிக்கிறார்.

ஹோண்டாவின் ரேஸிங் டீமில் எளிதில் சேர்ந்துவிட முடியாது. ஹோண்டா, தனது டேலன்ட் கப் ரேஸுக்காக ஒவ்வொரு முறையும் தேர்வு வைத்து, புதுப் புது ரைடர்களைக் களத்தில் இறக்கும். அப்படி இந்த முறை ஹோண்டா பல சோதனைகள் வைத்து பாஸானவர் முகமது மிக்கேல். ‘‘எனக்கு எல்லாமே எங்க மாமா முகமதுதான். அவர்கிட்டப் பேசிக்கோங்க’’ என்று சொன்ன மிக்கேல், தனது மாமா முகமது அனீஃபைக் கை காட்ட, அவர்தான் பேசினார். ‘‘ஆன்லைனில்தான் ஹோண்டாவோட டேலன்ட் கப் ரேஸ் பத்தி விவரம் படிச்சேன். இவனுக்குச் சின்ன வயசில் இருந்தே பைக் ஓட்டுறதில் ஆர்வம். ஹோண்டா டீமில் சேர்த்துவிட்டேன். 33 பேரை செலெக்ட் பண்ணினாங்க. பெங்களூரு, டெல்லினு ஏகப்பட்ட டெஸ்ட் வெச்சாங்க. 5 ரைடர்ல இவனும் செலெக்ட் ஆனான். நல்லவேளை - பேரைக் காப்பாத்திட்டான்’’ என்றார் முகமது அனிஃப்.

‘‘எனக்கு வீதிகளில் பைக் ஓட்டுறது பிடிக்காது. டிராக்கில் ஓட்டுறதுதான் பிடிக்கும்’’ என்று மழலைத்தனமாகப் பேசும் முகமது மிக்கேல், டிராக்கில் படுபயங்கர மெச்சூர்டு. 14 வயசு மிக்கேலின் பைக், டிராக்கில் ஸ்ட்ரெய்ட் ஸ்ட்ரெச்சில் கிட்டத்தட்ட 140 கி.மீ-ல் பறக்கிறது.

ஓர் உதாரணம் - மிக்கேல் ஓட்டுவது CBR 150 சிசி பைக். ஆனால், டிராக்கில் 250 சிசி பைக் ரைடர்களின் லேப் டைமுங்குக்கு ரொம்பப் பக்கத்தில் இருக்கிறது இவரது டைமிங். வெறும் 13.13 நிமிடங்களில் ரேஸை முடித்தார் முகமது மிக்கேல். 5 கி.மீ கொண்ட லேப்பை அசால்ட்டாக 2 நிமிடங்களுக்குள் முடிப்பது பெரிய ரைடர்களால்தான் முடியும். பரிசு வாங்கியபோது மிக்கேலுக்குப் பயங்கர கைத்தட்டல். சும்மாவா பின்னே! முதல் நாள், இரண்டாம் நாள் என்று எல்லா ரேஸ்களிலும் 14 வயது முகமது மிக்கேல்தான் டாப் லீடிங்கில் கலக்கினார்.

மற்றபடி 250 சிசி பைக் பிரிவிலும் ஹோண்டாவின் அனிஷ் ஷெட்டி, ராஜிவ் சேது என்று பெரிய பசங்களும் கலக்கி எடுத்தார்கள். நேஷனல் சாம்பியன்ஷிப்பின் இரண்டாவது ரவுண்டு பைக் ரேஸ் முடிந்துவிட்டது; ஆனால், காதில் இன்னும் உறுமல் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.