கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

அன்பு வணக்கம்!

அன்பு வணக்கம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பு வணக்கம்!

அன்பு வணக்கம்!

அன்பு வணக்கம்!

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

பைக் ரசிகர்களும் ஆர்வலர்களும் தீபாவளி முன்கூட்டியே வந்துவிட்ட குஷியில் இருக்கிறார்கள். காரணம், அவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் காத்திருந்த பிஎம்டபிள்யூ பைக்குகளின் முன்பதிவுகள் துவங்கிவிட்டன. இவற்றுக்கான விலைகளும் வெளியாகிவிட்டன. இன்னும் சில தினங்களில், அதை ஷோரூம்களிலும் சாலைகளிலும் பார்க்கலாம். இவை நம் நாட்டில், அதுவும் நம் மாநிலத்தில் தயாரிக்கப்படுகிறது என்பதுதான் மகிழ்ச்சியான செய்தி. பெரும்பாலும் நம் நாட்டு உதிரிபாகங்களே பயன்படுத்தப்படுகின்றன என்பதால் G310 R மற்றும் G310 GS பைக்குகளின் விலை நான்கு லட்சத்தைச் சுற்றியே இருக்கும். இந்த இரண்டு பைக்குகளுக்குமே இதயமாக இருந்து இயக்குவது 34 bhp சக்தியையும், 2.8 Kgm டார்க்கையும் கொடுக்கக்கூடிய 313 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின். அப்பாச்சி RR310-ல் இருக்கும் அதே இன்ஜின். அதாவது வெளியே பிஎம்டபிள்யூ; உள்ளே டிவிஎஸ். விலை லட்சங்களில் இருந்தாலும், ஒரு சில நாட்களுக்குள்ளாகவே ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  இதை முன்பதிவு செய்திருக்கிறார்கள்.

G310 R-ன் வருகை டியூக் 390, யமஹா R3 மற்றும் பெனெல்லி TNT 300 ஆகியவற்றுக்குச் சவாலாக இருக்கும். உள்ளூர் பாகங்களைக் கொண்டு உருவாகும் கவாஸாகி நின்ஜா 300-ம் இதற்கு இன்னொரு போட்டியாளராக இருக்கும். அதேபோல அட்வென்ச்சர் டூரர் பைக்கான G310 GS உடன் நேருக்கு நேராக நின்று போட்டிபோட நம்மூரில் வேறு பைக்ஸ் இல்லை என்றாலும், கவாஸாகி வெர்சிஸ் X300 இதற்கு ஓரளவு போட்டியாக இருக்கும். இந்த இரண்டில் போட்டிகள் அதிகம் இல்லாத G310 GS, இப்போது பைக் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொள்வதில் முதலிடத்தில் இருக்கிறது. 

ஆரம்ப ஜோர் தொடர வேண்டுமானால், பிஎம்டபிள்யூ உடனடியாக தன் டீலர் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க்கை விரிவுபடுத்த வேண்டியது அவசியம்.

நம்மூர் சாலைகளுக்கு அழகூட்ட மேலும் ஒரு சர்வதேச பிராண்ட் வந்திருக்கிறது. வரவேற்போம்!

பைக்கில் பிஎம்டபிள்யூ என்றால், காரில் எர்டிகாதான் எதிர்பார்ப்பு. இப்போது இருப்பதைவிட மேலும் நீளமாகவும், மேலும் சக்தி வாய்ந்ததாகவும் எர்டிகாவை விற்பனைக்குக் கொண்டுவர இருக்கிறது மாருதி சுஸூகி. இது தீபாவளியின்போது ரிலீஸாகும். புதிய பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட இருக்கும் இதில், மேலும் கூடுதலாகப் பல சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

அதேபோல மஹிந்திரா TUV 300, இப்போது TUV 300 ப்ளஸ் என்ற பெயரில் ஒன்பது பேர் பயணிக்கக்கூடிய எஸ்யூவியாகக் களம் கண்டிருக்கிறது. இந்த இரண்டு கார்களின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட், இந்த செக்மென்ட்களில் கார்களை வாங்க உத்தேசித்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

அன்புடன்
ஆசிரியர்