அதுவும் நல்லதில்லை

எத்தனை முறை இப்படி வதந்திகள் பரப்பப்பட்டன என்பதைக் கணக்கெடுப்பது கடினம். அன்றும் ஒருநாள், தலைவர் கலைஞர் குறித்த புரளிகள் புறப்பட்டன. உடனே கோபாலபுரம் புறப்பட்டேன். நான் வீட்டிற்குள் நுழையும்போது, அய்யா மின்தூக்கி வழி, சக்கர நாற்காலியில் இறங்கிக்கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் சிரித்தார். “என்ன, நேற்று என்னைச் சந்தித்துவிட்டுப் போன உனக்குமா சந்தேகம்? நன்றாக இருக்கிறேன்” என்றார்.

பிறகு அய்யாவுடன் மகிழுந்தில் அறிவாலயம் சென்றேன். தொடர்ந்து அவர் உடல்நலம் குறித்துப் பலரும் தொலைபேசியில் கேட்டுக்கொண்டே இருந்தனர். அறிவாலயத்தில் தலைவர் அறையில் நானும் அமர்ந்திருந்தேன். முக்கியமான தொலைபேசிகளை சண்முகநாதன் உள்ளே இணைத்தார்.

அப்போது இல.கணேசன் இணைப்பில் வந்தார். நலம் கேட்டுத் தலைவருடன் உரையாடினார். “ஏன் இப்படி நடக்கிறது என்று தெரியவில்லை” என்று வருத்தப்பட்டார். “இந்த வதந்திகள் நல்லதில்லைதான். ஆனால் இப்படி வதந்திகள் வர வர, நீங்கள் மேலும் பல்லாண்டுகள் வாழ்வீர்கள்” என்று வாழ்த்தினார்.

“இன்னும் பல்லாண்டுகளா?” என்று சிரித்துக் கொண்டே கேட்ட தலைவர், அடுத்த நொடியே, “அதுவும் நல்லதில்லை” என்றார். அந்தப் பக்கமும் சிரிப்பொலி கேட்டது!

கோழைக்கு வாழ்வேது?

‘டெசோ’ சார்பில் ஊடகவியலாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. ஏராளமான இதழாளர்கள், தொலைக்காட்சியினர் அறிவாலயத்தில் கூடியிருந்தனர். அந்த நேர்காணலின்போது, தலைவரின் அருகில் அமர்ந்திருக்கும் ஓர் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பல்வேறு வினாக்கள் தொடுக்கப்பட்டன. அனைத்துக்கும் நிதானமாகத் தலைவர் விடை சொல்லிக்கொண்டிருந்தார்.

அப்போது ஒரு பெண் ஊடகவியலாளர், “விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா?” என்று கேட்டார். அடுத்து இன்னொருவர் இன்னொரு கேள்வியைக் கேட்டார். ஆனால் மற்றவர்கள் எல்லோரும், “சற்றுப் பொறுங்கள், அய்யா அந்தக் கேள்விக்கு விடை சொல்லட்டும்” என்று சொல்லி அவரை அமர்த்திவிட்டனர். அதற்கான விடையை அவரிடமிருந்து தெரிந்துகொள்வதில் அனைவருக்கும் இருந்த ஆர்வம் புரிந்தது.

தலைவர் என்ன சொல்லப்போகிறாரோ என்று நானும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன். அவர் மெதுவாக என் பக்கம் திரும்பிப் புன்னகைத்தார். நான் முழுமையான புலிகளின் ஆதரவாளன் என்பது அவருக்கும் தெரியும். பிறகு பத்திரிகை நண்பர்களை நோக்கி, இரண்டே சொற்களில் விடை சொன்னார். அவர் சொன்ன விடை, “போராளிகள் சாவதில்லை” என்பதுதான்.

ஆம், அவர் அதற்கு முன்பே ஒருமுறை, “வீரன் ஒருமுறை சாவான், கோழை பலமுறை சாவான்” என்ற சொல்வடையைத் திருத்தி, “வீரன் சாவதே இல்லை, கோழை வாழ்வதே இல்லை” என்று எழுதியவர் இல்லையா!

ஆசிரியரும் அவரே!

ஒரே நாளில், தி.மு.க தொழிற்சங்கத் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான குப்புசாமி அவர்களும், தினத்தந்தி ஆசிரியர் சிவந்தி ஆதித்தன் அவர்களும் மறைந்து விட்டனர்.

காலையில் நந்தனம் சென்று குப்புசாமி அவர்களின் உடலுக்கு மாலை வைத்துவிட்டு, அறிவாலயம் வந்தேன். ஏற்கெனவே தலைவர் அங்கு வந்து அறையில் அமர்ந்திருந்தார். நான் உள்ளே சென்றதும், “என்ன இன்னிக்கு இவ்வளவு நேரம் ஆயிடுச்சு?” என்று கேட்டார். குப்புசாமி அவர்களுக்கு மரியாதை செலுத்திவிட்டு வந்ததைச் சொன்னேன். “ஓ அப்படியா” என்றார்.

சற்று நேரத்திற்குப் பிறகு, “தினத்தந்தி ஆசிரியர் வீட்டுக்கும் போய் வந்திட்டில்ல?” என்று கேட்டார். “இல்லை அய்யா, அவருடன் எனக்குப் பழக்கமில்லை. அவர் வீட்டுலயும் எனக்கு யாரையும் தெரியாது. அதனால் அங்க போகலை” என்றேன்.

“உனக்கு அவரைத் தெரியுமா, இல்லையாங்கிறது முக்கியமில்லை. அவரை எல்லோருக்கும் தெரியும். அப்படியிருக்கும்போது, நாம போயி மரியாதை செய்திடணும், அதுதான் சரி. அதுவும் நீ இங்க போயிட்டு அங்க போகாம வந்திருக்கக் கூடாது” என்று அறிவுரை சொன்னார்.

என் தவறு எனக்குப் புரிந்தது. அடுத்தடுத்த நிகழ்வுகளில் திருத்திக்கொண்டேன்.

அவர் தலைவர் மட்டுமில்லை; பத்து ஆண்டுகள் எனக்குப் பாடம் நடத்திய ஆசிரியரும் கூட!

யார் அந்தக் கவிஞர்?

2012 இல் டெசோ மாநாடு கூடவிருந்த நேரம். ஏறத்தாழ 20 நாள்கள் தலைவரின் அருகிலேயே இருந்து, அவர் கொடுத்த மாநாட்டு வேலைகளைச் செய்துகொண்டிருந்தேன். ஒருநாள், “மாநாட்டில் ஓர் இசைத்தட்டு வெளியிடலாமே?” என்றார். “வெளியிடலாம்” என்றேன்.

“யார் யாரிடம் பாடல்கள் கேட்கலாம்? சொல்” என்றார். கவிஞர்கள் வைரமுத்து, கவிதைப்பித்தன், பா.விஜய் என்று தொடங்கி வரிசையாகப் பெயர்களைச் சொன்னேன். “இவ்வளவு பேர் வேண்டாம். ஐந்தாறு பேர் போதும். மேலே ரமேஷ் பிரபாவிடமும் (அப்போது அவர் கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர்) போய்ப் பேசு. யாரை இசையமைக்கச் சொல்லலாம், யார் யாரைப் பாடச் சொல்லலாம் என்பதையெல்லாம் முடிவு செய்து, இன்று மாலை என்னிடம் இறுதிப் பட்டியலைக் கொடு” என்று கூறினார்.

அய்யா சொன்னது போல, மாலையில் ஒரு பட்டியலைக் கொடுத்தேன். ஆறு கவிஞர்களின் பெயர்கள் அதில் இருந்தன. படித்துவிட்டு, “இன்னொருவரிடமும் பாடல் கேட்டிருக்கலாமே” என்றார். “யாரிடம், யார் அந்த இன்னொரு கவிஞர் அய்யா?” என்று கேட்டேன். சிரித்துக் கொண்டே, “அப்படியானால் என்னை நீ கவிஞராக ஏற்றுக்கொள்ளவில்லையா?” என்றார்.

எனக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. “அப்படி இல்லை. உங்களைப் பார்த்துத்தானே நாங்கள் எல்லாம் எழுதவே கற்றோம். உங்களுக்கு இருக்கிற வேலைகளுக்கிடையில், நேரம் இருக்குமா என்று நினைத்துதான்...”என்று சொல்லிவிட்டு, “நீங்கள் எழுதிக் கொடுத்தால், அது பெரிய மகிழ்ச்சி” என்றேன். ஒன்றும் சொல்லவில்லை. சிரித்துக் கொண்டார்.

அடுத்த நாள் அறிவாலயம் வந்தபோது, மகிழுந்திலிருந்து இறங்கும்போதே, என்னைப் பார்த்து, “கவிஞர்கள் என்ன சொன்னார்கள்? எப்போது பாடல் தருவார்கள்?” என்று கேட்டார். “எல்லோரும் இன்னும் இரண்டு மூன்று நாள்களில் தருவதாகச் சொல்லியுள்ளனர்” என்றேன். “அப்படியா, அப்படியானால் இந்த முதல் பாட்டை வாங்கிக்கொள்” என்று சொல்லி, இரண்டு தாள்களைக் கொடுத்தார். ‘இருட்டறையில் உள்ளதடா ஈழம்’ எனத் தொடங்கும் பாடல் அதில் இருந்தது!

‘என்னைப் பார்த்தா கவிதை எழுத நேரமில்லாதவன் என்று நீ நினைத்தாய்?’ என்று கேட்பதுபோல இருந்தது அவர் சிரிப்பு!