Published:Updated:

விசாரணை கமிஷன்கள் வேஸ்ட்! - ஜூ.வி சொன்னது... நீதிமன்றமும் குட்டியது - Follow up

விசாரணை கமிஷன்கள் வேஸ்ட்! - ஜூ.வி சொன்னது... நீதிமன்றமும் குட்டியது - Follow up
பிரீமியம் ஸ்டோரி
விசாரணை கமிஷன்கள் வேஸ்ட்! - ஜூ.வி சொன்னது... நீதிமன்றமும் குட்டியது - Follow up

விசாரணை கமிஷன்கள் வேஸ்ட்! - ஜூ.வி சொன்னது... நீதிமன்றமும் குட்டியது - Follow up

விசாரணை கமிஷன்கள் வேஸ்ட்! - ஜூ.வி சொன்னது... நீதிமன்றமும் குட்டியது - Follow up

விசாரணை கமிஷன்கள் வேஸ்ட்! - ஜூ.வி சொன்னது... நீதிமன்றமும் குட்டியது - Follow up

Published:Updated:
விசாரணை கமிஷன்கள் வேஸ்ட்! - ஜூ.வி சொன்னது... நீதிமன்றமும் குட்டியது - Follow up
பிரீமியம் ஸ்டோரி
விசாரணை கமிஷன்கள் வேஸ்ட்! - ஜூ.வி சொன்னது... நீதிமன்றமும் குட்டியது - Follow up

‘‘விசாரணை ஆணையங்களால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. இந்த ஆணையங்களை மக்கள் நம்பவில்லை. இவையெல்லாம் கண்துடைப்பு நாடகம்’’ எனக் கர்ஜித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

கடந்த தி.மு.க ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடு என்று சொல்லி, ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.ரெகுபதி தலைமையில் விசாரணை கமிஷனை அமைத்தார் ஜெயலலிதா. அதோடு புதிய தலைமைச் செயலகத்தை பல்நோக்கு அரசு மருத்துவமனையாகவும் மாற்றினார். விசாரணையைத் தொடங்கிய ரெகுபதி  கமிஷன், கருணாநிதி, ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து அவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டனர். இந்த விசாரணை கமிஷனுக்கு  2015-ம் ஆண்டு தடைவிதித்தது நீதிமன்றம். நிலுவையில் இருந்த இந்த வழக்கு சூடுபிடிக்க ஆரம்பித்த நிலையில், விசாரணை கமிஷன்கள்மீது கடும் அதிருப்தியைத் தெரிவித்தது நீதிமன்றம்.

‘‘தடை விதிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும், அதை எதிர்த்து ஏன் மேல்முறையீடு செய்யவில்லை? ரெகுபதி ஆணையத்தை அரசு கலைக்காமல் இருப்பது ஏன்? ஆணையத்துக்குத் தடை விதித்த பிறகும், அதற்கு அலுவலகம், ஊழியர்கள் எனப் பெரும் தொகையை அரசு ஏன் செலவு செய்கிறது? கட்டடம் கட்டியதில் முறைகேடு நடந்திருந்தால், ஊழல் வழக்குப்பதிவு செய்யவேண்டியதுதானே? அதைச் செய்யாமல், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் எதற்காக விசாரணை ஆணையம் அமைக்கவேண்டும்?’’ எனக் கேள்விகள் எழுப்பியது உயர் நீதிமன்றம்.

விசாரணை கமிஷன்கள் வேஸ்ட்! - ஜூ.வி சொன்னது... நீதிமன்றமும் குட்டியது - Follow up

2011-ம் ஆரம்பிக்கப்பட்டு நீண்டுகொண்டே போன இந்த ரெகுபதி  விசாரணை கமிஷன் பற்றித் தொடர்ந்து ஜூ.வி-யில் எழுதி வந்திருக்கிறோம். கடைசியாக ‘புதிய தலைமைச் செயலக விசாரணை கமிஷன் என்ன ஆச்சு... கரன்சிதான் விரயம் ஆச்சு!’ என்ற தலைப்பில் 22.11.2017 தேதியிட்ட இதழில் எழுதப்பட்ட கட்டுரையில், இந்த விசாரணை கமிஷனுக்கு 2.45 கோடி ரூபாய் செலவழித்திருக்கும் விஷயத்தைச் சொல்லியிருந்தோம். மக்களின் வரிப் பணம்தான் விரையமாகிறது என்கிற நமது கருத்தையே உயர் நீதிமன்றமும் இப்போது சொல்லியிருக்கிறது.  

‘‘ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்படும் விசாரணை ஆணையங்கள்மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். இதில் மக்களின் வரிப்பணம் வீணாகக் கூடாது. இதுவரை எத்தனை விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன? ஆணையங்களுக்காக எத்தனை வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன? இதற்கு அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது? விசாரணை கமிஷனின் அறிக்கைகளால் என்ன பயன்? விசாரணை ஆணையங்களால் அரசு சாதித்தது என்ன? நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்துக்குள் விசாரணை ஆணையங்கள் விசாரணையை முடித்துவிடுகின்றனவா?’’ எனச் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்.

இந்த நிலையில், விசாரணை கமிஷன்களுக்கு செய்யப்பட்ட செலவுகளைத் தோண்டினோம்.

ரெகுபதி கமிஷனுக்கு இதுவரையில் 4.11 கோடி  ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 2017-18-ம் ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், கமிஷனின் பதவிக் காலத்தைச் சமீபத்தில் மேலும் 9 மாதங்களுக்கு நீட்டித்து, 57 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் கடந்த மூன்று ஆண்டுகளாகவே செயல்படாத நிலையில், 2.25 கோடி ரூபாயைச் செலவிட்டிருக்கிறார்கள். இந்த ஆணையம் உள்ளிட்ட 12 விசாரணை கமிஷன்களின் செலவு விவரம் விகடனுக்குப் பிரத்யேகமாகக் கிடைத்திருக்கிறது. இந்த 12 விசாரணை கமிஷன்களுக்கு ஆன மொத்தச் செலவு, 15 கோடி ரூபாய். (பெட்டிச் செய்தி காண்க)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விசாரணை கமிஷன்கள் வேஸ்ட்! - ஜூ.வி சொன்னது... நீதிமன்றமும் குட்டியது - Follow up

பழைய விசாரணை கமிஷன்களின் பரிந்துரைகள் என்ன ஆகின என்பதைக் கிளறினோம்.

* மதுரை மேலூர் அரசு கலைக்கல்லூரியில் 2002-ல் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி சுப்பிரமணியன் விசாரணை கமிஷன், ‘இன்ஸ்பெக்டர் பாதமுத்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், ரமணி, துணைக் கண்காணிப்பாளர் கணேசப்பெருமாள், அதிரடிப்படை போலீஸ்காரர்கள் ஐயப்பராஜ், ராமகிருஷ்ணன், அறிவழகன் ஆகியோர் தவறு செய்திருக்கிறார்கள்’ என்று சொல்லியிருந்தது. இந்தக் குற்றச்சாட்டைக் கொள்கை அளவில் அரசு அப்போது ஏற்றுக்கொண்டது. ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது இன்றுவரை தெரியவில்லை.

* சென்னை மத்தியச் சிறையில் 1999-ம் ஆண்டு நடந்த கலவரத்தில் துணை ஜெயிலர் ஜெயக்குமார் உயிருடன் எரிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்த துப்பாக்கிச் சூட்டில் 11 கைதிகள் கொல்லப் பட்டனர். இது தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி டேவிட் கிறிஸ்டியான் விசாரணை கமிஷன், ‘சிறைப்பணியாளர் களிடையே காணப்படும் ஊழலை உறுதியுடன் ஒடுக்க வேண்டும். கைதிகளுக்கு மறைமுக ஆதரவளிக்கும் அலுவலர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பரிந்துரை செய்தது. அந்தப் பரிந்துரையை அரசு ஏற்கவில்லை என்பதை அவ்வப்போது சிறைகளில் நடக்கும் ஊழல்களே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

விசாரணை கமிஷன்கள் வேஸ்ட்! - ஜூ.வி சொன்னது... நீதிமன்றமும் குட்டியது - Follow up

* மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கூலிப் பிரச்னை தொடர்பாக புதிய தமிழகம் உள்பட பல கட்சிகள் சேர்ந்து நடத்திய ஊர்வலத்தில் மோதல் வெடித்து போலீஸ் தடியடி நடத்தியதில், தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 17 பேர் பலியானார்கள். இதுபற்றி விசாரிக்க 1999-ல் நீதிபதி மோகன் கமிஷன் போடப்பட்டது. பரிந்துரையில், ‘அரசியல் ஊர்வலங்களைத் தடைசெய்ய பொருத்தமான சட்டங்களை இயற்ற விரைவான நடவடிக்கை வேண்டும்’ என்று நீதிபதி குறிப்பிட்டிருந்தார். இந்தப் பரிந்துரையும் ஏட்டோடு போய்விட்டது.

* தென் மாவட்ட சாதிக் கலவரங்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட மோகன் கமிஷன், ‘சாதித் தலைவர்கள் சிலைகளை அருங்காட்சியகத்தில் வைக்கவேண்டும்’ என்று அரசுக்குப் பரிந்துரை கொடுத்தது. ஆனால், இதுவும் காற்றோடு போயாச்சு.

* கும்பகோணம் தீ விபத்து பற்றி விசாரித்த நீதிபதி சம்பத் கமிஷன், ‘பாலர் பள்ளிகளை முறைப்படுத்திக் கண்காணிக்கத் தனி இயக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக ஆட்டோ, வேன்களில் மாணவர்களை ஏற்றக் கூடாது’ ஆகியவை உள்பட பல பரிந்துரைகளைக் கொடுத்தது. இன்றுவரை இவை நிறைவேறவில்லை.

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism