Published:Updated:

இது மகளிர் மகாபாரதம்!

இது மகளிர் மகாபாரதம்!
பிரீமியம் ஸ்டோரி
இது மகளிர் மகாபாரதம்!

கலையிலே காவியம்கானப்ரியா

இது மகளிர் மகாபாரதம்!

கலையிலே காவியம்கானப்ரியா

Published:Updated:
இது மகளிர் மகாபாரதம்!
பிரீமியம் ஸ்டோரி
இது மகளிர் மகாபாரதம்!

மகாபாரதத்தின் பெருமையில் தொடங்குவதா, மியூரல் ஓவியத்தின் அருமையில் ஆரம்பிப்பதா என்கிற குழப்பத்தில் இருந்த எனக்கு, `பெண்களின் உழைப்பைப் போற்றுவதே சரி’ எனப்பட்டது. வீடு, குடும்பம் என்று 24 மணி நேரமும் ஓடிக்கொண்டிருக்கும் கடினமான பணிகளுக்கு இடையில் தமக்கென நேரம் ஒதுக்கிக்கொள்பவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. அப்படி அண்மையில் ஈர்த்தவர்கள்தான் இந்த 35 இல்லத்தரசிகள்.

இது மகளிர் மகாபாரதம்!

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஓவியர் பிரின்ஸ் தோண்ணக்கல் தலைமையில் மகாபாரத மியூரல் ஓவியக் கண்காட்சி சென்னை லலித்கலா அகாடமியில் நடைபெற்றது. இதில் கேரளா மற்றும் சென்னையைச் சேர்ந்த 35 பெண்கள், 113 மியூரல் ஓவியங்களை வரைந்து அசத்தியிருந்தனர். இவர்களின் வயது 35 முதல் 75 வரை.

முன்பெல்லாம் கோயில் சுவரிலும் உட்கூரையிலும் ஆண்களால் மட்டுமே வரையப்பட்ட மியூரல் ஓவியம், இன்று பெண்களால் வரையப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது, காவியக் காலத்துக்குள்ளே சென்ற பிரமிப்பு ஏற்படுகிறது. மகாபாரதக் கதாபாத்திரங்களான கிருஷ்ணன், பாண்டவர்கள், கெளரவர்கள், கர்ணன், திரௌபதி ஆகியோரின் ஓவியக் காட்சிகள் அவ்வளவு துல்லியம். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் உரிய உடல்மொழியில் அத்தனை ஓவியங்களும் மிளிர்கின்றன.

``இந்த ஓவியங்களை வரைவதற்கு எத்தனை நாள்கள் ஆனது?” என்ற கேள்வியுடன் சென்னையைச் சேர்ந்த ஓவியர் மைதிலி கணேஷைச் சந்தித்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது மகளிர் மகாபாரதம்!

``மகாபாரதத்துல ஏராளமான கதைகள் இருப்பதால் எந்தக் காட்சியை வரையலாம்னு தேர்ந்தெடுக்கவே ரொம்ப நாளாச்சு. அப்புறம், யாரு எந்தப் படம் வரையணும்னு முடிவு பண்ணினோம். முக்கியமான களங்களைத் தேர்வுசெஞ்சு, மொத்தமா வரைஞ்சு முடிக்க நான்கு வருஷங்களாச்சு. எல்லாப் படங்களுக்கான அவுட்லைனையும் எங்க குரு பிரின்ஸ்தான் வரைஞ்சு கொடுத்தாரு. எந்தப் படத்துலயும் எதிர்மறை பாவனைகளைப் பார்க்க முடியாது. அஞ்சு நிறங்களை மட்டுமே உபயோகிச்சிருக்கோம் என்பது எங்களுக்கே ஆச்சர்யமான விஷயம். இந்த நாலு வருஷங்கள் ஒரு தவம்போல கழிந்தது. பகவானை வரையறப்போ கவலைகள் எல்லாம் காணாமல்போய் மனசு லேசாகிடும். உடல்நலத்துல நல்ல முன்னேற்றத்தை உணர முடியும். இங்கே வந்து ஓவியங்களைப் பார்த்த சின்னச்சின்னக் குழந்தைகள்கூட,  இப்போ மகாபாரதக்கதை சொல்றாங்க. இதுதானே ஓவியத்தின் வெற்றி!” என்கிறார் மைதிலி.

``எப்படி வீட்டுப் பொறுப்பு களையும் பார்த்துக்கொண்டு இவ்வளவு அழகான ஓவியங்களை வரைய முடிந்தது?” என்று ஓவியர் புவனேஸ்வரியிடம் கேட்டேன் ``குடும்பத்தினர் ஆதரவு  இல்லைன்னா எங்களால இதைச் செய்திருக்கவே முடியாது. `எங்களுக்கு இது பிடிச்சிருக்கு, பேஷனோடு செய்றோம்'கிறதை எல்லாரும் புரிஞ்சு நடந்துக்கிட்டாங்க.

இது மகளிர் மகாபாரதம்!

மக்களின் வரவேற்பைப் பார்க்கிறப்போ, எங்க கஷ்டங்களெல்லாம் பறந்து போயிடுச்சு.  எங்களைப் போலவே பெண்கள் எல்லாரும் நிச்சயம் அவங்க  திறமையைச் சரியா பயன்படுத்திக்கணும். அதுக்கான பலன் நிச்சயம் கிடைக்கும்” என்று முகம் மலரச் சொல்கிறார் புவனேஸ்வரி.

ஓவியப் புன்னகை பரவட்டும்!