Published:Updated:

ஆயிரம் தாய்களின் அழகான சங்கமம்! - `லவ் குரு’ ராஜவேலு

ஆயிரம் தாய்களின் அழகான சங்கமம்! - `லவ் குரு’ ராஜவேலு
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் தாய்களின் அழகான சங்கமம்! - `லவ் குரு’ ராஜவேலு

அவளும் நானும்... நானும் அவளும்ஆர்.வைதேகி - படங்கள் : பாலசுப்ரமணியெம்

ஆயிரம் தாய்களின் அழகான சங்கமம்! - `லவ் குரு’ ராஜவேலு

அவளும் நானும்... நானும் அவளும்ஆர்.வைதேகி - படங்கள் : பாலசுப்ரமணியெம்

Published:Updated:
ஆயிரம் தாய்களின் அழகான சங்கமம்! - `லவ் குரு’ ராஜவேலு
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் தாய்களின் அழகான சங்கமம்! - `லவ் குரு’ ராஜவேலு

பண்பலை வானொலி நேயர்களின் காதல் அனுபவங்களுக்கும் அனுதாபங்களுக்கும் ஆலோசகரான `லவ் குரு’ ராஜவேலுவை, `அவளும் நானும்’ பற்றிப் பேசச் சொன்னோம்... அந்த அவள், அவரின் காதலிகளில் ஒருவராக இருக்கலாம் என்கிற எதிர்பார்ப்பில். ஆனால் அன்பு, பாசம், மரியாதை எல்லாவற்றையும் தாண்டிய உணர்வு தாங்கிய உறவுக்குச் சொந்தக்காரராக அவரின் `அவள்’ நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்.

``என் வாழ்க்கையில அம்மாவும் பாட்டியும்தான் மிக முக்கியமான பெண்கள். அப்புறம் வாழ்க்கையில வந்த தோழிகள், காதலிகளைத் தொடர்ந்து மனைவின்னு திரும்பிப் பார்த்தா ஒவ்வொரு முக்கியமான காலகட்டத்துல யும் பெண்கள் இருந்திருக்காங்க. நான் உடைஞ்சு விழக் காரணமா ஒரு பெண் இருந்தாங்கன்னா, ஒட்டவெச்சதும் ஒரு பெண்ணாத்தான் இருந்திருக்காங்க. என் வாழ்க்கையை வண்ணமயமாக்கினதுல நிறைய பெண்களின் பங்களிப்பு இருந்திருக்கு.

திருச்சியிலேயே உன் வாழ்க்கை முடங்கிடக் கூடாதுனு என்னைச் சென்னைக்குப் போகச் சொல்லி உந்தித் தள்ளினதும் ஒரு பெண்தான். `சென்னையில என்ன பண்ணப்போறேன்'னு தட்டுத்தடுமாறி நின்னபோது, `என்னாலயும் ஏதோ செய்ய முடியும்'னு உணர்த்தினதும் ஒரு பெண்தான். இந்த ஊரே வேணாம்னு நினைக்க வெச்சதும் பெண்தான். இப்படி என் சிந்தனைகளை உருக்குலைச்சது, ஒருமுகப்படுத்தி ஆக்கபூர்வமாக்கினதுனு எல்லாமே பெண்கள்தாம்.

ஆயிரம் தாய்களின் அழகான சங்கமம்! - `லவ் குரு’ ராஜவேலு

`பெண்... ஆயிரம் பேய்களின் அழகான சங்கமம்’னு ஸ்கூல் நாள்களில் கவிதை எழுதியிருந்தேன். போகப் போகத்தான் `பெண்... ஆயிரம் தாய்களின் அழகான சங்கமம்’னு புரிஞ்சது. ஓர் ஆணின் உலகம் பெண்ணால் மட்டும்தான் முழுமையடை யும்னு உறுதியா நம்புறேன். அது யாராகவும் இருக்கலாம். வாழ்க்கையில நான் கற்றதும் பெற்றதும் பெண்களால்தான். பெண்களின் உலகமான `அவள் விகடன்’ மூலம் அதைச் சொல்றதுல ரொம்ப சந்தோஷப்படுறேன்.

ரேடியோ சிட்டி அலுவலகத்துக்குக் கீழே இ.மாலா மேடத்தின் நண்பரின் நிறுவனம் இருந்தது. அங்கே  மாலா மேடம் அடிக்கடி வருவாங்க. புன்னகை, ஹாய், ஹலோ, வணக்கம்... இந்த அளவுக்குத்தான் அப்போ அவங்களுக்கும் எனக்குமான அறிமுகம். இயக்குநர் பாண்டிராஜும் மாலா மேடத்தின் கணவரும் ஒளிப்பதிவாளருமான பாலசுப்ரமணியெமும் சேர்ந்து நிறைய படங்கள்ல வொர்க் பண்ணியிருக்காங்க. நான் பாண்டிராஜ் சார்கிட்ட உதவி இயக்குநரா இருந்தேன். பாண்டிராஜ் சார் மூலமா பாலு சாரின் அறிமுகம் கிடைச்சது. பாலு சாருக்கு, என் நிகழ்ச்சி ஏற்கெனவே பரிச்சயம். இந்த நட்பு, மாலா மேடம்-பாலு சார் வீடு வரைக்கும் போகிற அளவுக்கு இன்னும் நெருக்கத்தைக் கூட்டியது. எப்போ வேணும்னாலும் அவங்க வீட்டுக்குப் போகலாம். மாலா மேடம்கிட்ட எந்தப் பிரச்னையைப் பற்றியும் மனம்விட்டுப் பேசலாம். ஓர் அம்மாவா, அக்காவா, தோழியா நல்ல ஆலோசனை சொல்வாங்க.

2015-ம் வருஷம், சென்னையில மிகப்பெரிய ரெஸ்டாரன்ட் குரூப் லான்ச் ஆனது. அந்த லான்ச்சை என்னை செஞ்சு கொடுக்கச் சொன்னாங்க மாலா மேடம். அப்போ நான் ரேடியோவுல ஆர்.ஜே. அவ்வளவுதான். சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விளம்பரத் தயாரிப்பு வேலை வந்தப்போ, என்னைச் சொந்த கம்பெனி தொடங்கச் சொல்லி, தன்னம்பிக்கைக்கும் தைரியத்துக்குமான முதல் விதையைப் போட்டது மாலா மேடம்தான். நான் தயங்கி, `அதை வேற யாருக்காவது கொடுத்துடலாம்’னு சொன்னப்போ, `உங்களால முடியும், செய்யுங்க’னு தைரியம் கொடுத்தாங்க. அப்படித்தான் நான் என்னுடைய `துரோணா மீடியா’ கம்பெனியை ஆரம்பிச்சேன். ரேடியோ வேலை இல்லைன்னா அடுத்து என்னன்னு யோசிக்கத் தேவையில்லாத அளவுக்கு, எனக்கு ஒரு மாற்று ஏற்பாட்டுக்கான வழியைக் காட்டினாங்க.

அந்த பிசினஸ்ல லாபம் வந்தது. அதை மேடமுக்குக் கொடுக்கணும்னு ஆசைப்பட்டு எடுத்துட்டுப் போனேன்.  அவங்க அதை வாங்க மறுத்துட்டாங்க. ஆதரவற்ற குழந்தைகளுக்காக அவங்க நிறைய சேவைகள் பண்றாங்க. அந்தத் தொகையை அந்தச் சேவைகளுக்காகப் பயன்படுத்திக்கச் சொன்னேன். எனக்குத் தெரிஞ்சு அவங்க இதுவரைக்கும் தனக்குனு யார்கிட்டயும் எந்த உதவியும் கேட்டதில்லை. ஆனா, ஆதரவற்ற குழந்தைங்களுக்குனு வரும்போது தயங்காம உதவிகள் கேட்பாங்க. மிகப்பெரிய ஹீரோவுக்கு, 100 குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் கொடுக்கிறது பெருசா தெரியாது. அவங்களை அணுகி, உதவிகள் கேட்டு வாங்கிச் செய்றதுக்கு பெரிய மனசு வேணும். அது மாலா மேடத்துக்கு இருக்கு.

கடந்த சில வருஷங்கள்ல மேடம் எடுத்துச் செஞ்ச எல்லா புராஜெக்ட்டுலயும் எனக்கு ஓர் இடம் வெச்சிருப்பாங்க. கலர்ஸ் டி.வி-க்காக ஒரு புரோகிராம் பண்றதா இருந்தது. அதுக்காக என்கிட்டதான் முதல்ல கதை கேட்டாங்க. சில நடைமுறைச் சிக்கல்களால் அந்தக் கதையைப் பண்ண முடியலை. ஆனாலும், கலர்ஸ் டி.வி-யின் அஃபிஷியல் வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட்டா எனக்கு வாய்ப்பு கிடைக்கவும் மாலா மேடம்தான் காரணம். கடந்த மூணு வருஷங்கள்ல என் வாழ்க்கையில நிகழ்ந்த அத்தனை முன்னேற்றம், வளர்ச்சியின் பின்னாலும் இருக்கிறவங்க மாலா மேடம்தான்’’ - அதுவரை ஒலித்த கம்பீரக் குரல் உடைகிறது ராஜவேலுவுக்கு. அடுத்து அவர் பகிரப்போகும் விஷயத்தின் ஆழம் தெரிகிறது அவரின் கண்களில்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆயிரம் தாய்களின் அழகான சங்கமம்! - `லவ் குரு’ ராஜவேலு

``2016 மார்ச் 24-ம் தேதி. என் படத்தின் ஸ்க்ரிப்ட் வேலைக்காக நானும் என் நண்பரும் சத்தியமங்கலம் காட்டுப் பகுதிக்குள்ள தெங்குமரஹடா கிராமத்துக்குப் போயிருந்தோம். கதை விவாதம் முடிஞ்சு, மறுநாள் அந்தக் கிராமத்திலேருந்து வெளியே வந்துகிட்டிருந்தோம். கொஞ்ச தூரம் கடந்த பிறகுதான் சிக்னலே கிடைச்சது. எனக்கும் மாலா மேடத்துக்கும் பொதுவான ஒரு நண்பரிடமிருந்து போன் வந்தது. ரொம்பவே பதற்றமான குரல்ல `பிரெயின் ஹெமரேஜ் காரணமா மாலா மேடத்தை ரொம்ப சீரியஸான நிலைமையில ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணியிருக்கோம். பிழைப்பாங்களான்னே தெரியலை. உடனே கிளம்பி வாங்க’ன்னார். என்ன, ஏதுன்னு தெளிவான விவரங்கள் இல்லை.

நண்பர் சொன்ன `பிரெயின் ஹெமரேஜ்’, `சீரியஸ்’ போன்ற வார்த்தைகள் எனக்குப் பதற்றம் கூட்டின. எங்களை அந்தக் காட்டுக்குக் கூட்டிட்டு வந்தவர்கிட்ட, `உடனே இந்த இடத்தைவிட்டு வெளியே போகணும்’னு சொன்னேன். `உடனேல்லாம் முடியாது. இந்தக் காட்டுக்கு வரவே பல கிலோமீட்டர் உள்ளே வந்திருக்கோம். காட்டைவிட்டு வெளியே போறதுக்கே ஒரு நாளாவது ஆகும்’னு சொன்னதும் இன்னும் பதற்றம். எனக்கு போன் வந்தபோது மதியம் 2 மணி. ராத்திரி 9 மணிக்குத்தான் அந்தக் காட்டைவிட்டு வெளியே வர முடிஞ்சது.

அங்கேயிருந்து நேரா மாலா மேடம் அட்மிட் ஆகியிருந்த ராமச்சந்திரா ஆஸ்பத்திரிக்குப் போனேன். முதல்ல யாரையுமே ஐசியூ-க்குள்ளே அனுமதிக்கலை. அவங்களுக்கு அப்போ நினைவு இல்லை. பிறகு, அவங்க யார்கூடவெல்லாம் அதிகம் பேசியிருக்காங்களோ அவங்க பேசறதைக் கேட்டா நினைவுகளை மீட்டெடுக்க வாய்ப்பிருக்கிறதா சொன்னாங்க. என்னை உள்ளே அனுமதிச்சாங்க. பார்த்ததும் அடையாளம் தெரிஞ்சுகிட்டாங்க. ஆனா, பாதி பேசிட்டிருக்கும்போதே அவங்களுக்கு எல்லாம் மறந்துபோனது.  

பத்து வாரங்கள் விரதமிருந்து கோயிலுக்கெல் லாம் போய் மேடத்துக்காகத் தீவிரமா வேண்டிக் கிட்டேன்.  திடீர்னு வாழ்க்கை மேலேயே ஒரு பயம் வந்ததும் அப்போதான். ரத்தச் சம்பந்தமில்லாத ஓர் உறவுக்காக நான் வேண்டிக்கிட்டதும், கோயிலுக்குப் போனதும் அதுதான் முதன்முறை.

வாழ்வா, சாவா போராட்டத்துலேருந்து மீண்டு, மேடம் வீட்டுக்கு வந்தாங்க. எந்த விஷயத்தையும் அழகுணர்வோடு செய்து பழக்கப்பட்டவங்க. நகைகளை அள்ளிப் போட்டுக்கிட்டோ, ஆடம்பர உடைகளிலோ நான் அவங்களைப் பார்த்ததில்லை. சிம்பிளான சேலையில கம்பீரமான ஆளுமையா பார்த்தே பழகினவங்களை திடீர்னு நைட்டியில, பேசத் திராணியில்லாத நிலையில முடங்கிப்போயிருந்ததைப் பார்க்க முடியலை. ஆனாலும், அவங்களுடைய தன்னம்பிக்கையால மெள்ள மெள்ள மீண்டு வந்தாங்க. என்னை மாதிரி எத்தனையோ பேருக்கு வாழ்க்கையில வழிகாட்டியா இருந்தவங்க. அத்தனை பேரின் அன்புதான் அவங்களை மீட் டெடுத்து இன்னிக்கு மறுபடியும் அதே ஆளுமையுடன் நடமாட வெச்சிருக்கு.

`வேலைக்குப் போகலைன்னா நம்ம சுயத்தை இழந்துடுறோம்... நமக்குனு ஓர் அடையாளம் இருக்கிறதில்லை’ங்கிற எண்ணம், இன்றைய பெண்களுக்கு இருக்கு.  அப்படியில்லைங்கிறதை நம்புறவங்க மாலா மேடம். குடும்பத்துக்காகத் தன் புகழ் வெளிச்சத்தைத் துறந்துட்டு, ஆத்மார்த்தமா தன்னை மாத்திக்கிட்டவங்க. கல்யாணத்துக்கு முன்னாடி மாலா மேடம், மீடியாவில் ரொம்பப் பிரபலம். திரைக்கு முன்னால மட்டுமில்லாம, திரைக்குப் பின்னாலும் நிறைய நிகழ்ச்சிகள் செய்த அனுபவமுள்ளவங்க. கல்யாணத் துக்குப் பிறகு கணவர், குழந்தைங்க, குடும்பம்னு முழுமையா தன் முகத்தை மாத்திக்க மிகப்பெரிய மன உறுதியும் பெருந்தன்மையும் வேணும். அது அவங்களுக்கு நிறைய உண்டு. அந்த மனசு, அவங்களை இன்னும் நூறு வருஷங்கள் கடந்தும் வாழவைக்கும்...’’

சந்தோஷக் கண்ணீருடன் முடிக் கிறார் காதல் டாக்டர்.

ஆயிரம் தாய்களின் அழகான சங்கமம்! - `லவ் குரு’ ராஜவேலு

நானும் அவளும்

ஆண் ஆர்.ஜே-க்களும் படிக்கும் இதழ்!

``எனக்கு இப்போ 33 வயசு. 28 வருடங்களா நான் விகடன் வாசகன். அஞ்சு வயசுல ஜோக்ஸ் பார்க்க, விகடனைக் கையில் எடுத்தேன். தாத்தா அரசியல் ஆர்வமுள்ளவர், ஜூனியர் விகடன் வாசிப்பார். நான் வளர்ந்த பிறகு பசுமை விகடன் பிடிக்க ஆரம்பிச்சு, ரேடியோ வேலைக்குள் நுழைஞ்சதும் அவள் விகடனையும் வாசிக்க ஆரம்பிச்சேன். வீட்ல அம்மா,  அவள் விகடன் படிப்பாங்க. என் நிகழ்ச்சியில் நிறைய பெண்கள் தங்களுடைய பர்சனல் அனுபவங்களைப் பற்றி மெயில் அனுப்புவாங்க. பெண்களின் உலகம் எப்படியிருக்குனு தெரிஞ்சுக்கிற கண்ணாடியா இருந்தது அவள் விகடன். இதில் வரும் பெண்களின் சாதனைகள், தொழில்முனைவோரின் கதைகள்னு எல்லாமே படிப்பேன்.

ஆசாரமாக ஆரம்பித்த அவள் விகடனின் பயணம், இன்று ஜென் இஸட் பெண்களுக்கான இதழா மாறியிருக்கு. நான் மட்டுமில்லை, பல ஆண் ஆர்.ஜே-க்களும் அவள் விகடனின் வாசகர்கள். பெண்களின் உலகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள அவள் விகடன் போன்ற பத்திரிகைகள் இல்லை. அவங்க டி.வி-யில என்னவெல்லாம் பார்க்கிறாங்கங்கிறதுல தொடங்கி அவங்களுடைய ரோல்மாடல் யாருங்கிறது வரைக்கும் பெண்கள் உலகத்துல நடக்கிற விஷயங்களை `அவள் விகடன்’ மூலமா அப்டேட் பண்ணிக்கிறோம்.’’