Published:Updated:

14 நாள்கள்

14 நாள்கள்
பிரீமியம் ஸ்டோரி
14 நாள்கள்

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...பெண்கள் உலகம்நிவேதிதா லூயிஸ்

14 நாள்கள்

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...பெண்கள் உலகம்நிவேதிதா லூயிஸ்

Published:Updated:
14 நாள்கள்
பிரீமியம் ஸ்டோரி
14 நாள்கள்
14 நாள்கள்

பாகிஸ்தானின் முதல் பெண் தலைமை நீதிபதி!

மீபத்தில் பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாண உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தாஹிரா சஃப்தாரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதை பொதுமேடையில் அறிவித்தார் அந்நாட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார். ஓய்வுபெற்ற பெண் நீதிபதி ஃபக்ருன்னிஸாவின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மியான் சாகிப், லாகூர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிக்கு வர தனக்குத் தகுதி இருந்தும், தான் நிராகரிக்கப்பட்டதை ஃபக்ருன்னிஸா தெரிவித்ததாகக் கூறினார். எப்போதோ நிகழ்ந்த தவறு அது என்றும், அதைச் சரிசெய்யும் விதமாக, பலூசிஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு, தாஹிராவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். தனிப்பட்ட முறையில் ஃபக்ருன்னிஸாவுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக அதைப் பார்க்கவில்லை என்றும், ஒட்டுமொத்தமாகப் பெண் இனத்துக்கு நிகழ்ந்த அநீதி அது என்றும் மியான் சாகிப் தெரிவித்தது பாகிஸ்தான் பெண்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

61 வயதாகும் தாஹிரா சஃப்தார், கெட்டா மாகாணத்தைச் சேர்ந்தவர். புகழ்பெற்ற வழக்கறிஞர் செய்யது ஹனாஃபியின் மகள். 1982-ம் ஆண்டு, பலூசிஸ்தான் உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் மீதான எமெர்ஜன்சிகால அத்துமீறல்கள் வழக்கை விசாரிக்கும் மூன்று நபர் நீதி ஆணையத்தில் இப்போது பணியாற்றி வருகிறார் தாஹிரா.

ஆகஸ்ட் 31 அன்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவிருக்கிறார் இந்த சாதனைப் பெண்மணி.            

சபாஷ்... சஃப்தார்!

14 நாள்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியத்தில் தீபிகா படுகோன் சிலை!

ங்கிலாந்தின் பிரசித்தி பெற்ற மேடம் டுசாட்ஸ் மெழுகு அருங்காட்சியகத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் மெழுகு சிலை வைக்கப்படவுள்ளது. “இது ஓர் அலாதி அனுபவம். மிகுந்த மகிழ்வைத் தரக்கூடியது. இதற்கு என் ரசிகர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார் தீபிகா.

“உங்கள் மெழுகு சிலை என்ன ஆடை அணியப் போகிறது?” என்ற கேள்விக்கு பதில் அளித்த தீபிகா, “அது இந்தியாவை நினைவூட்டும் ஆடையாகத்தான் நிச்சயம் இருக்கும். அங்கேதான் என் வேர்கள் உள்ளன. அதுதான் நான் பிறந்த, வாழும் இடம்... அதே வேளையில், உலக மக்களைக் கவரும் வகையிலும் என் ஆடை அமையும்” என்று தெரிவித்தார். ஷாரூக், அமிதாப் போன்ற பிரபலங்கள் வரிசையில் இடம்பிடித்திருக்கிறார் தீபிகா.

மெழுகு சிலைக்கே ஒரு மெழுகு சிலையா!

14 நாள்கள்

ஒரு தாயின் கனவு!

மும்பையைச் சேர்ந்த பூஜா சின்சங்கர் 1980-ம் ஆண்டு முதல் பறந்துகொண்டிருக்கிறார். ஏர் இந்தியாவின் ‘கேபின் க்ரூ’வாக இத்தனை ஆண்டுகள் பணிபுரிந்த பூஜா,  அண்மையில் பணி ஓய்வு பெற்றார். தன் மகள் அஷ்ரிதாவிடம் மகளும் தன்னைப்போலவே விமானத்தில் பறக்க வேண்டும் என்று விரும்புவதாகத் தெரிவித்து வந்தார். அஷ்ரிதாவோ மாஸ் மீடியா படிக்க விருப்பம்கொண்டிருந்தார். திடீர் மனமாற்றம் கொண்ட அஷ்ரிதா, கனடா நாட்டில் பைலட் லைசன்ஸ் பெற்று ஏர் இந்தியாவிலேயே பைலட்டாகப் பணியமர்ந்தார்.

அம்மாவுக்குத் தெரியாமலேயே மகள் அவரது பணியின் கடைசி விமானப் பயணத்தில் தானும் சேர்ந்துகொள்ள ஏற்பாடு செய்தார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஏர் இந்தியா, அதே விமானத்தின் பைலட்டாக அஷ்ரிதாவை நியமித்தது. 38 ஆண்டுகள் விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பூஜாவை வாழ்த்துவதாக விமானத்தின் பைலட் அஷ்ரிதா அறிவிக்க, பயணிகள் அனைவரும் கைதட்டி வாழ்த்தினர். மகளின் குரலையும் அறிவிப்பையும் கேட்ட தாய்க்கு பெரும் மகிழ்ச்சி. தன் மகிழ்ச்சியை ட்விட்டரில் பதிவு செய்த அஷ்ரிதா, ஏர் இந்தியாவுக்கு நன்றியையும், தாயைப்போலவே தானும் விமானப் பணியை தொடரப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதுவல்லவோ அம்மா பொண்ணு பாசம்!

14 நாள்கள்

இங்கிலாந்து ராணுவத்தில் கூர்க்கா பெண்கள்!

ங்கிலாந்து ராணுவத்தில் சிறப்பிடம் பிடித்துள்ள கூர்க்கா ரெஜிமென்ட்டில் இனி பெண்களும் பணியமர்த்தப்படுவார்கள் என அந்நாட்டு ராணுவம் அறிவித்திருக்கிறது. 1815-ம் ஆண்டு நேபாளத்தைக் கைப்பற்றியபோது ஏற்பட்ட உயிர்ச்சேதம் இங்கிலாந்துக்கு அச்சத்தைத் தர, நேபாளத்தில் இருந்து தன் ராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டது. 1947-ம் ஆண்டில் இந்திய விடுதலையின்போது, இந்தியா, நேபாளம், இங்கிலாந்து என மூன்று நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, இந்திய ராணுவத்தின் நான்கு கூர்க்கா ரெஜிமென்ட்டுகள் இங்கிலாந்துக்கு மாற்றம் செய்யப்பட்டன. இரண்டாம் உலகப்போரில் 1,12,000 கூர்க்காக்கள் போரில் ஈடுபட்டிருந்தனர். இப்போது இங்கிலாந்து ராணுவத்தில் கிட்டத்தட்ட 3,000 கூர்க்காக்களே உள்ளனர். இன்னமும் போர்முனையில், கூர்க்காக்களின் ஆயுதமான, 18 இஞ்ச் நீளம் கொண்ட `குக்ரி'யைக் கொண்டு செல்கின்றனர். `கோழையாக இருப்பதைவிடச் சாவதே மேல்’ என்பதைத் தங்கள் கொள்கையாகக் கொண்டுள்ளனர்.

இங்கிலாந்து ராணுவத்தின் லெஃப்டினன்ட் ஜெனரல் நிக் போப், “ராணுவத்தில் பெண்களின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் என்ற அரசின் கொள்கையை மனதில் கொண்டு வரும் 2020-ம் ஆண்டு முதல், ஆண் கூர்க்காக்களுக்கு உள்ள அதே நடைமுறையைப் பின்பற்றி பெண் கூர்க்காக்களும் கூர்க்கா ரெஜிமென்ட்டுகளில் பணியமர்த்தப்படுவார்கள்” என்று தெரிவித்தார். ராணுவத் தேர்வுகளில், பெண்கள், ஆண்களைப் போலவே அனைத்து சோதனைகளிலும் வெற்றி பெற வேண்டும். அதில் 25 கிலோ மணல் கூடையை முதுகில் சுமந்தபடி 5 கி.மீ தூரம் ஓடிக் கடக்க வேண்டும். இங்கிலாந்தின் பாதுகாப்புச் செயலர் கவின் வில்லியம்ஸன், “பெண்களுக்கு இந்த ‘எலைட்’ படையில் பங்கு கொடுப்பது மிகச் சரியானதே” என்று தெரிவித்திருக்கிறார்.

வருங்கால வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள்!

14 நாள்கள்

உலகக்கோப்பை ஹாக்கி... சபாஷ் இந்திய மகளிர்!

ண்டன் லீ வாலி ஹாக்கி மற்றும் டென்னிஸ் சென்டரில் நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகளில், இத்தாலி நாட்டை 3-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி, காலிறுதிச் சுற்றுக்குள் நுழையும் தகுதி பெற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி.

லால்ரெம் சியாமி, நேஹா கோயல், வந்தனா கட்டாரியா மூவரும் கோல் அடித்தனர். உலகத் தரவரிசையில் 17-ம் இடத்தில் உள்ள இத்தாலியை, 10-ம் இடத்தில் உள்ள இந்திய அணி வென்றதன் மூலம் அடுத்த கட்ட காலிறுதி ஆட்டத்தில் அயர்லாந்து நாட்டை எதிர்த்து விளையாடியது.

பி பிரிவு மேட்சுகளில் விளையாடிய இந்திய அணி, பெரிய எதிர்பார்ப்புகளுடன் லண்டன் செல்லவில்லை எனலாம். பி பிரிவில் மூன்றாவது இடம், அல்லது அதை விடச் சிறப்பாக ஆடினால், 7-ம் இடத்தில் உள்ள அமெரிக்காவைத் தோற்கடிப்பது என்ற பொது நம்பிக்கையைத் தகர்த்து, அமெரிக்காவுடனான ஆட்டத்தை டிரா செய்தனர்.

இந்த டிராவின் மூலம், பி பிரிவில் மூன்றாம் இடம் கிடைத்தது. கூடவே, 20 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதிப் போட்டிகளிலும் நுழைந்தது. அந்தப் போட்டியில் வெற்றி கிட்டவில்லை என்றாலும், இது ஒரு சாதனையே. இறுதியாக 1974-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளில் நான்காம் இடத்தைக் கைப்பற்றியது இந்திய மகளிர் அணி.

அடுத்தடுத்த போட்டிகளில் சாதியுங்கள் கண்மணிகளே!

14 நாள்கள்

“என் மகன்களின் தந்தை அடுத்த பிரதமர்!”

மீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் தேர்தலின் முடிவுகள் வெளியான வண்ணம் இருக்க, உலகின் கவனத்தை ஈர்த்தது பிரதமர் பதவியில் அமரவிருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் மனைவியான ஜெமிமா கோல்ட்ஸ்மித் வெளியிட்டிருந்த செய்தி... “22 ஆண்டுகள் போராட்டங்கள், தோல்விகள், தியாகங்களுக்குப் பிறகு பாகிஸ்தானின் அடுத்த பிரதமராகியிருக்கிறார் என் மகன்களின் தந்தை. தோல்வியைக் கண்டு துவளாமை, தொடர் முயற்சி, நீடித்திருக்கும் தன்மை இவற்றை அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், கொடுத்த வாக்குறுதிகளை அவர் நினைவில்கொள்ள வேண்டும்” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவுசெய்திருந்தார் ஜெமிமா.

ஒன்பது ஆண்டுகால திருமண வாழ்க்கையை 2004-ம் ஆண்டு விவாகரத்து செய்து முடித்துக்கொண்டவர்கள் இத்தம்பதி. இஸ்லாம் மதத்துக்கு மாறிய ஜெமிமாவால் பாகிஸ்தானின் அரசியலில் புதிதாகக் களம் இறங்கிய இம்ரானின் அரசியல் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. 42 வயது இம்ரானைத் திருமணம் செய்திருந்த 21 வயது ஜெமிமா, அதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியாமல் பிரிய முடிவெடுக்க, இருவரும் பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து பெற்றனர். இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். விவாகரத்து பெற்றுப் பிரிந்தாலும், தானும் இம்ரானும் சிறந்த நண்பர்கள் என்றும் கூறியிருக்கிறார் ஜெமிமா.

ஹும்ம்ம்ம்…இங்கெல்லாம் இப்படி நடக்குமா?