சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கடந்துவிட்டன. சிலருக்கு அது வரலாற்றின் மகத்தான நாள். சிலருக்கோ மற்றுமொரு விடுமுறை நாள். ஓய்வின்றி எல்லா நாள்களிலும் உழைத்துக்கொண்டிருக்கும் இவர்கள் ‘சுதந்திரம்’ பற்றி என்ன நினைக்கிறார்கள்?

ரவி, வயது -51 (ரிக்ஷாக்காரர்)

``பல வருஷமா உழைச்சுக்கிட்டே தான் இருக்கேன். பெருசா ஏதும் வாழ்க்கைத் தரமெல்லாம் மாறின மாதிரி தெரியல. அது ஏன்னு மட்டும் புரிய மாட்டேங்குது. அதையெல்லாம் யாராச்சும் சரிபண்ணுனா நல்லாருக்கும். நாடு சுதந்திரம் அடைஞ்சது நல்லதுதான். ஆனா, மக்கள்தான் கொஞ்சம் உஷாரா இருக்கணும். அறியாமை இல்லாம யோசிச்சு நடந்துக்கணும். அப்படினாதான் நம்மளும் நிம்மதியா இருக்க முடியும்.’’

விஜயகுமார், வயது- 48 (காய்கறி வியாபாரம்)

``எது மாறினாலும் ஏழைங்க மட்டும் ஏழையாவேதான் இருக்காங்க. சில தெருவுல எல்லாம் வியாபாரம் செய்யக்கூட நுழையவிட மாட்றாங்க. சுதந்திர நாடுதான். ஆனால், அந்த ஏரியாவுலெல்லாம் நாம போக முடியாது.’’

தேசிங்கு, வயது -43

( புத்தகக் கடை விற்பனையாளர்)

``நாடு இவ்ளோ தூரம் முன்னேறியதுக்குக் காரணமே சுதந்திரம் வாங்கினதுதான். ஆனா, இன்னும் பொண்ணுங்கெல்லாம் அடிமையாத்தான் இருக்காங்க. பெண்களுக்கு எதிரான கொடுமை தினமும் நடக்குது. இதுக்கெல்லாம் நாம யாரைக் குத்தம் சொல்றது? சுதந்திரம்னா எல்லாரும் நிம்மதியா வாழுறது. ஆனா, வேலை முடிஞ்சு பெண்களால ராத்திரி நிம்மதியா வீட்டுக்குப் போக முடியுதா? இதெல்லாம் மாறினாத்தான் நாம சுதந்திரமா இருக்கோம்னு சொல்லிக்கலாம்.’’

பன்னீர் செல்வம், வயது - 47.

(மீனவர் /`பலூன் ஷூட்டிங்’ கடை உரிமையாளர்)

``படிச்சவங்களுக்கெல்லாம் வேலை கிடைச்சாலே போதும்பா. படிச்சவங்களுக்கு வேலை இல்லாததாலதான் நிறைய குற்றம் நடக்குது. நான் மீன் பிடிக்கிறவன். காலையில கடலுக்குப் போயிட்டு இப்ப வந்து கடை போட்டிருக்கேன். மீன் விற்கிறதுக்கு ஒவ்வொரு ஊர்லயும் ஒவ்வொரு மாதிரி ரூல்ஸ் இருக்கு. இதையெல்லாம் கொஞ்சம் சரி செஞ்சா, சுதந்திர தினத்தை சந்தோஷமா கொண்டாடலாம்.’’