Published:Updated:

பிரம்மா கோயிலில் சிறப்பு பூஜை! - முதன்முறையாக குலம் கோத்திரத்தைச் சொன்ன ராகுல் காந்தி

எம்.குமரேசன்
பிரம்மா கோயிலில் சிறப்பு பூஜை! - முதன்முறையாக குலம் கோத்திரத்தைச் சொன்ன ராகுல் காந்தி
பிரம்மா கோயிலில் சிறப்பு பூஜை! - முதன்முறையாக குலம் கோத்திரத்தைச் சொன்ன ராகுல் காந்தி

மீப காலமாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்து கோயில்களுக்குச் சென்று வழிபட்டுவருகிறார். கர்நாடகத் தேர்தலின் போது, டெல்லியில் இருந்து மங்களூருவுக்கு தனி விமானத்தில் பயணம் மேற்கொண்டார். ராகுல் காந்தி சென்ற விமானம் வானத்தில் சில நிமிடங்கள் குலுங்கியது. இந்தச் சமயத்தில் `கைலாயம் வருவதாக மனதுக்குள் நினைத்து சிவனை வேண்டியதால், விமானம் மீண்டும் சீராக பறக்கத் தொடங்கியது' என்று ராகுல் காந்தி கூறினார். வேண்டியபடி கைலாய மலைக்கும் ராகுல் காந்தி சென்றுவந்தார். 

தற்போது ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, காங்கிரஸ் கட்சித் தலைவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். பிரசாரத்தின் ஒரு பகுதியாக, செல்லும் இடங்களில் உள்ள புகழ்பெற்ற கோயில்களுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில், புஷ்கர் என்ற நகரத்தில் உள்ள பிரம்மா கோயிலுக்குச் சென்று அவர் வழிபட்டார். கோயில் அர்ச்சகர், 'உங்கள் கோத்திரத்தைச் சொல்லுங்கள்' என்றார். ராகுல்காந்தி, 'தத்தாத்ரேய கோத்திரத்தைச் சேர்ந்த கவுல் பிராமணர்' என்று வாய் திறந்து கூறினார். கவுல் என்றால் 'சிறந்த பிறப்பு' என்று அர்த்தம் வருகிறது. 

பின்னர், அவரின் பெயரில் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. கோயில் பதிவேட்டில், 'நான் ராகுல் காந்தி, ராஜீவ் காந்தியின் மகன். எங்கள் குடும்ப அர்ச்சகர்கள் தீனாநாத் கவுல், ராஜ்நாத் கவுல் ஆகியோர் உதவியுடன் இந்தக் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தினேன். இந்திய மக்கள் சுபிட்சமாக வாழவும் உலகத்தில் அமைதி நிலவவேண்டியும் வழிபாடு நடத்தினேன்' என எழுதி ஆங்கிலத்தில் கையொப்பமிட்டார்.