தற்போது உள்ளங்கையிலேயே அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன ஸ்மார்ட் போன்கள். ஸ்மார்ட் போனில் இயங்கும் வகையில் விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய பல செயலிகளும் சந்தையில் உள்ளன. அவற்றில் இயற்கை வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, வானிலை, வேளாண் காடுகள், சுற்றுச்சூழல் தொடர்பான தகவல்களை அளிக்கக்கூடிய செயலிகள் குறித்துப் பார்ப்போம்.

நெல் வல்லுநர் (Rice Xpert)

நெல் பயிர் தொடர்பான தகவல்களை இச்செயலி ஆங்கிலத்தில் தருகிறது. தேசிய நெல் ஆராய்ச்சி நிறுவனம், இச்செயலியை உருவாக்கியிருக்கிறது. ஒவ்வொரு நிலத்துக்கும் தகுந்தவாறு நெல் வகைகள் பிரித்துத் தரப்பட்டுள்ளன. நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகள், அவற்றைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் போன்றவை பட விளக்கங்களுடன் தரப்பட்டுள்ளன. நெல் பயிரைத் தாக்கும் நோய்கள், அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள், ஊட்டச்சத்துக் குறைவால் தோன்றும் பிரச்னைகள் போன்றவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன. நாற்று நடவு தொடங்கி, அறுவடை வரையில் பயன்படுத்தப்படும் தகவல்களுக்கான பகுதியும் தனியே இருக்கிறது.

இச்செயலியை http://bit.ly/2vwVqir என்ற முகவரியிலும், கூகுள் பிளே ஸ்டோர் மூலமும் தரவிறக்கம் செய்யலாம்.

உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்தும் செயலியைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

உழவன் மாடு (Uzhavan Maadu)

மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்தச் செயலி உபயோகமானதாக இருக்கும். மாடு வளர்ப்பைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் இதில் முழுமையாக அறிந்துகொள்ள முடியும். பசு மாட்டின் வகைகள் என்ற பகுதியில்... உள்நாட்டு மாட்டினங்கள் மற்றும் அயல் நாட்டு மாட்டினங்கள் என இரு பகுதிகள் இருக்கின்றன. அவற்றில் பாலுக்குப் பயன்படும் மாட்டினங்கள், உழவு மற்றும் இதர வேலைகளுக்குப் பயன்படும் மாட்டினங்கள், இரண்டுக்கும் பயன்படுத்தப்படும் மாட்டினங்கள் என மூன்று வகைகளில் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சந்தை வாய்ப்பு குறித்தும் இச்செயலியில் சொல்லப்பட்டிருக்கிறது. வாங்க-விற்க எனும் பகுதியில் கால்நடைகள், தீவனங்கள், கருவிகள், மற்றும் பால் போன்றவற்றை வாங்கவும் விற்கவும் முடியும். மாட்டுப்பண்ணை என்ற பகுதியில் மாட்டுப்பண்ணை அமைக்கும் விதம், பராமரிப்பு ஆகிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். மழைக்காலம், கோடைக்காலம் மற்றும் குளிர் காலங்களில் கால்நடைகளைப் பராமரிக்கும் முறைகளைக் ‘கால்நடைப் பராமரிப்பு’ என்ற பகுதியில் அறிந்து கொள்ளலாம்.

கன்று பராமரிப்பு, கறவை மாடு வளர்ப்பு, தீவன மேலாண்மை, நீர் மேலாண்மை, இயந்திரங்களின் பயன்பாடு, வங்கிக்கடன், மானியம், கால்நடைக்காப்பீடு போன்றவை குறித்த தகவல்களும் தரப்பட்டுள்ளன. கேள்வி-பதில் பகுதி மூலம் நமது சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள முடியும். மற்றவர்களின் கேள்விகளுக்கு நாம் பதில் அளிக்கவும் முடியும். பால் உற்பத்தியாளர்கள் தினசரி வரவு-செலவுக் கணக்கையும் இச்செயலியில் குறித்து வைத்துக்கொள்ள வசதி உண்டு.

இச்செயலியை http://bit.ly/2LWzTtW என்ற முகவரியிலும், கூகுள் பிளே ஸ்டோர் மூலமும் தரவிறக்கம் செய்யலாம்.