`திருமணம்’ என்றாலே, பெண்களின் மிகப்பெரிய கவலை யும் வேலையும் `ஷாப்பிங்’தான். இதுவரை யாரும் அணிந்திராத அசத்தலான உடைகளை வாங்க வேண்டும் என்பதே நிறைய பெண்களின் இலக்கு. கடை கடையாக ஏறி இறங்கி, ஆயிரம் இணையதளங்களை நோட்டமிட்டு, வீட்டில் இருக்கும் மற்றவர்களையும் சலிக்கவைக்கும் அளவுக்கு, இதற்காகவே எடுக்கும் முயற்சிகள் ஏராளம்.

புதுமையான டிசைன்களில் விதவிதமான ஃபேன்சி மற்றும் பாரம்பர்யப் பட்டுப்புடவைகள் குவிந்துகிடந்தாலும், `இன்னும் புதிதாக என்ன?' என்கிற கேள்வி எழுந்துகொண்டே இருக்கும். இதற்குப் பதிலளிக்கும் வகையில் சுனிதா யோகேஷ், தனது முதல் டிசைனிங் கலெக்ஷனை அறிமுகம் செய்துள்ளார். இவை, `ஃபோக்லோர்’ அதாவது `நாட்டுப்புறவியலை’ மையமாகக்கொண்டு டிசைன் செய்யப்பட்ட அழகான பட்டுப் புடவைகள். இதன் பின்னணி பற்றி சுனிதா பகிர்ந்துகொள்கிறார்.

ஏன் `ஃபோக்லோர்’ டிசைன் பண்ணணும்னு தோணுச்சு? இந்த புராஜெக்ட் பண்றதுக்கு மொத்தமா எவ்ளோ காலம் ஆச்சு?

அந்தக் காலத்துல இருந்து இப்போ வரை மண்மனம் மாறாம, எல்லாருக்கும் ரொம்பப் பிடிக்கிற விஷயம்தான் ஃபோக்லோர். இதைக் கொண்டாடலைன்னா எப்படி? மாடர்ன் டிசைன்ஸ் எவ்வளவு வந்தாலும் பழைமையை மறக்கக் கூடாது. எனக்கு டெக்ஸ்டைல் டிசைன் பண்ண ரொம்பப் பிடிக்கும். இதன் மூலமா நான் ரசிச்ச நாட்டுப்புறவியல் டிசைனை வெளிப்படுத்துறேன். ரிசர்ச், டிசைன் வேலைகள்னு மொத்தமா இந்த புராஜெக்ட் முடிக்க ஒன்பது மாசங்கள் ஆச்சு. இந்த தீம்ல ஆறு புடவைகள் பண்ணியிருக்கேன். டெல்லி `வோக் ஷோ’ல இந்தப் புடவைகளை லான்ச் பண்றோம்.

இந்த டிசைனுக்காக ஆராய்ச்சி செய்தீர்களாமே?

புக்ஸ் படிச்சேன். நிறைய நிபுணர்களைச் சந்திச்சேன். அவங்ககூட பேசினதெல்லாம் மறக்க முடியாத அனுபவம். எல்லாத்தையும்விட மனசுக்குள்ளேயே நிறைய கேள்விகள், கற்பனைகள்னு எனக்குத் தூக்கமே இல்லை. நெசவாளிகளைப் பார்த்து, என்னென்ன டெக்னிக்ஸ் பயன்படுத்தலாம்னு கலந்து பேசினேன். `பட்டு’னு சொன்னாலே காஞ்சிபுரம்தான் எல்லாரும் சொல்றாங்க. ஆனா, அங்கே மட்டுமே பட்டு உற்பத்திப் பண்ணலை. ஏகப்பட்ட சின்னச் சின்ன ஊர்கள்லயும் பட்டு உற்பத்தி செய்றாங்க. அந்த ஊர்களுக்கெல்லாம் போனேன். அவங்க எனக்குக் கத்துக்கொடுத்த விஷயங்கள் நிறைய இருக்கு. அதெல்லாம் நிச்சயம் இந்த கலெக்ஷன்ல வெளிப்படும்.

இந்தப் பயணத்தில் மறக்க முடியாத நினைவு?

`நல்லி' குப்புசாமி செட்டி என் தாத்தா. `பாலம்' ஜெயஸ்ரீ என் அம்மா. இதனால் இயல்பிலேயே இந்தத் துறையில் நிறைய ஆர்வம் உண்டு. என்னதான் சின்ன வயசுல இருந்து புடவைகள் கூடவே வளர்ந்திருந்தாலும், நானே டிசைன் பண்ணின புடவையை என் கையில தந்தப்போ, அவ்வளவு சந்தோஷம். புதுசா பிறந்த குழந்தையை கையில வாங்கின உணர்வு. அது என்னிக் குமே மறக்காது. அந்த உணர்வை விளக்கவும் முடியாது.

அடுத்து என்ன?

டிசைன் பண்றது ஒரு வேலை இல்லை. இது என் பேஷன். இதேபோல நிறைய புதுமையான டிசைன்களை மக்களுக்குக் கொடுக்கணும்னு ஆசை. அதுக்கான வேலைகளில் இன்னும் முழுமூச்சா இறங்குவேன்!

- கானப்ரியா