பொதிகை டி.வி-யில் நியூஸ் ரீடராக அறிமுகமாகி, தந்தி டி.வி-யில் அரசியல் செய்திகளை நையாண்டியுடன் தொகுத்து வழங்கி பலரின் ஆச்சர்யப் பார்வையை ஈர்த்தவர் ஆண்ட்ரூஸ். பின்னர், விஜய் டி.வி-யின் ‘ரெடி ஸ்டெடி போ’ நிகழ்ச்சியை ரியோவுடன் சேர்ந்து கலகலப்புடன் தொகுத்து வழங்கினார். இப்போது, விஜய் டி.வி-யின் ‘சகல Vs ரகள’ நிகழ்ச்சியை ராமருடன் சேர்ந்து அசத்திவருகிறார். இப்படிக் கலகலப்பு என்றதுமே கண்முன் வரும் முகமாக மாறியிருக்கும் ஆண்ட்ரூஸ், வீட்டில் எப்படி இருப்பார்?

‘`நான் 19 வருஷங்களா டீச்சராகவும், ரெண்டு வருஷங்களா தலைமை ஆசிரியராகவும் இருந்தேன். மூணு வருஷங்களா பிரின்ஸிபால். இப்போ ஒரு வருஷம் பிரேக் எடுத்திருக்கேன்’’ என ஆண்ட்ரூஸின் மனைவி லிடியா அறிமுகம் செய்துகொள்ள, ‘`அப்படியே என்னைப் பற்றியும் கொஞ்சம் நல்லதா சொல்லும்மா’’ என்று கோரிக்கை வைக்கிறார் கணவர் ஆண்ட்ரூஸ்.

‘`சிங்கப்பூரில் ரெண்டு வருஷங்களும், அடுத்து மலேசியாவில் ரெண்டு வருஷங்களும் ஆசிரியரா வேலை பார்த்துட்டிருந்தேன். அப்போ வீட்டுல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாங்க. ‘நவீன சுயம்வரம்’ முறையில் என் பெற்றோரால் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்தான் ஆண்ட்ரூஸ். ‘முதல்ல நான் வந்து பார்க்கிறேன். பிடிச்சிருந்தா என் பெற்றோர் களை அழைச்சுட்டு வர்றேன்’னு சொல்லிட்டு நண்பருடன் வந்து என்னைப் பார்த்தார். முதல் பார்வையிலேயே ரெண்டு பேரும் கண்களுக்குள் டூயட் பாட ஆரம்பிச்சுட்டோம். திருமணம் நடந்துச்சு. அப்போ அவர் `ஆர்ஜே’வாக இருந்தார்’’ என்றபடி கணவரைப் பார்க்கிறார் லிடியா.

‘`எங்களுக்கு ஒரு பையன்... ஒன்றாம் வகுப்பு. ஆண்ட்ரூஸ் செய்யும் சின்னச் சின்ன விஷயங்களை கவனிச்சு அதேமாதிரியே செஞ்சுகாட்டுவான். இப்போ நாங்க மதுரையிலும், அவர் சென்னையிலும் இருக்கிறதால், பையன் அவரை ரொம்ப மிஸ் பண்றான். பையன் கொஞ்சம் வளர்ந்ததும், சென்னைக்கு ஷிஃப்ட் ஆகறது பற்றி யோசிக்கணும்’’ என்கிறார் லிடியா.

‘`தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உங்க கணவரின் சேட்டைகளைப் பார்க்கிறது உண்டா?’’ எனக் கேட்டதும் சிரிக்கிறார்.

‘`என் கணவர் பற்றி நல்லா தெரிஞ்சவங்க, ‘நீ ரொம்ப லக்கி’னு என்கிட்ட சொல்வாங்க. அவரைப் பற்றித் தெரியாதவங்களோ, ‘உங்க கணவர் மத்தவங்களோடு டான்ஸ் ஆட எப்படி சம்மதிக்கறீங்க?’னு கேட்பாங்க. இந்த ரெண்டுக்குமே என் பதில், சிரிப்புதான். டி.வி ஷோவில் இவர் பண்ற விஷயங்களை பெருசா எடுத்துக்க மாட்டேன். அது புரொஃபஷன். என் கணவர் எப்படிப்பட்டவர்னு எனக்குத் தெரியும். டி.வி-யில் எப்படி எல்லாரிடமும் ஜாலியா பேசறாரோ நேரிலும் அப்படித்தான்.

இவருக்கு வீட்டுச் சாப்பாடு மேலே உயிர். வீட்டுக்கு வரும்போதெல்லாம் வாய்க்கு ருசியா சமைச்சுக் கொடுப்பேன். ரொம்ப அன்பா, பார்த்துப் பார்த்து சமைப்பேன். பிரான் பிரியாணி, பிரான் கிரேவின்னு மணக்கும்’’ என்பவரிடம்,

‘`கணவர் உங்களுக்குக் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் எது?’’ எனக் கேட்டோம்.

‘`இவர் ஊருக்கு வர்ற ஒவ்வொரு முறையுமே எனக்கு மிகப் பெரிய கிஃப்ட். என் பிறந்த நாளுக்கே அவரால் வரமுடியாமல் போகும். சூழ்நிலையைப் புரிஞ்சுப்பேன். ஆனாலும், அன்னிக்கு செலிபிரேட் பண்ற மனநிலை இருக்காது. என் கணவர் பக்கத்தில் இருந்திருந்தா அந்த பிறந்த நாள் வேற லெவல்ல இருக்கும். ஆனா, இவரை மிஸ் பண்றதை வெளியே காட்டிக்க மாட்டேன். அவர்கிட்டேயும் சொல்ல மாட்டேன். மனசுக்குள்ளே வருத்தப்படுவேன். `எங்களுக்காகத்தானே கஷ்டப்படுறார்’னு கொஞ்ச நேரத்துல நார்மல் ஆகிடுவேன்'' என்கிற லிடியா இயற்கை காதலியாம். ஃபேமிலியுடன் லாங் டிரைவ் செல்வது ரொம்பவே பிடிக்குமாம்.

`` `ஆங்கரிங்ல நிறைய விஷயங்களைக் கத்துக்கணும், அடுத்தடுத்து நல்ல இடத்துக்குப் போகணும்'னு இவர்கிட்ட சொல்லிட்டே இருப்பேன். இவர் டீக்கடை வெச்சிருந்ததை ரொம்பப் பெருமையா சொல்வார். அப்போவெல்லாம் அவர்கிட்ட இதைச் சொல்லணும்னு தோணும். ஆனால், சொன்னதில்லே. இப்போ சொல்றேன், ஐ லவ் யூ ஆண்ட்ரூஸ்’’ என்ற லிடியாவை, பேரன்பு காதலுடன் அணைத்துக்கொள்கிறார் ஆண்ட்ரூஸ்.

காதல் வாசம் அந்த வீட்டை அலங்கரிக்க ஆரம்பிக்க... விடைபெற்றோம்.

- வெ.வித்யா காயத்ரி

படம் : வி.சதீஷ்குமார்