ஒரு வீட்டில், வாரத்தில் எத்தனை நாள்தான் மூன்று வேளையும் சமையல் நடக்கும்? இதற்கு, சுமாரான ஹோட்டல் தொடங்கி கையேந்தி பவன் வரை எல்லா நாள்களிலும் காண்கிற கூட்டமே பதில் சொல்லும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு, மேல்வேலைகளுக்கு ஆள் கிடைப்பதில்லை; விதவிதமாகச் சமைத்துத் தரத் தெரிவதில்லை. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு, இவற்றோடு நேரமின்மை, களைப்பு எனக் கூடுதலாக வேறு சில பிரச்னைகள். ஆக, வாரத்தின் பல நாள்களுக்கு விடுமுறை விடப்படும் இடமாக இருக்கிறது `சமையலறை'. தவிர, பலருக்கும் அலுத்து, சலித்துப்போகிற விஷயமாகவும் இருக்கிறது சமையல்.

சமையல் தனக்கு அடிக்ஷன் என்கிறார் மெனுராணி செல்லம். அதுவே தன்னுடைய `ஸ்ட்ரெஸ் பஸ்டர்' என்றும் வியப்பூட்டுகிறார். சமையல் கலைப் பயிற்சியில் 50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் செல்லத்திடம் அதே ஆர்வம்... அதே உற்சாகம்!

``வாழ்வின் எல்லா துயரங்களிலிருந்தும் என்னை மீட்டெடுத்தது சமையல்தான். சமையல் கலை வகுப்புகள் எடுப்பதன் மூலம், தினம் தினம் பல்வேறுபட்ட மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது; அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள முடிகிறது. அவர்களின் கதைகளைக் கேட்கும்போதுதான் வாழ்க்கையில் என்னைவிடவும் கஷ்டப்படுகிற பெண்கள் இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. பல தருணங்களில் அவர்கள் மூலம் என் பிரச்னைகளுக்குத் தீர்வும் தெளிவும் கிடைத்திருக்கின்றன.

பெரிய மகள் குழந்தையாக இருந்தபோது, அவளுக்குக் கடுமையான வீசிங் பிரச்னை. இரவு முழுவதும் தூங்க மாட்டாள். விடிய விடிய எனக்கும் தூக்கம் இருக்காது. அடுத்த நாள் குக்கரி க்ளாஸ் இருக்கும். வேறு வழியின்றி கேன்சல் செய்துவிடுவேன். அதை வேறொரு விடுமுறை நாளுக்கு மாற்றிக்கொள்வேன். யாரும் என்னைக் கேள்வி கேட்டதில்லை. ஒருவேளை நான் வேறு வேலை பார்க்கிறவளாக இருந்திருந் தால், அடிக்கடி வேலையில் விடுப்பு எடுக்க வேண்டியிருந்திருக்கும். நேரம் என் வசம் இருந்திருக்காது.

என் மகளின் வீசிங் பிரச்னையோடு போராடிக்கொண்டிருந்த நேரம்... பார்க்காத மருத்துவர் இல்லை. எதுவும் பலனளிக்கவில்லை. பள்ளிக்கூடத்தில் எந்த விளையாட்டிலும் அவளால் கலந்துகொள்ள இயலவில்லை. `காலம் முழுவதும் இப்படியே தான் இருக்க வேண்டுமா?' என அவளும் நானும் கவலைப்பட்ட நாள்கள் பல.

சமையல் கலை வகுப்புக்கு வந்த ஒரு பெண் சொன்னதன் பேரில், ஹோமியோபதி மருத்துவரிடம் அழைத்துச்சென்றேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள். அவரிடம் சிகிச்சை பெற்ற பிறகு, இன்று வரை என் மகளுக்கு வீசிங் பிரச்னையே இல்லை. அமெரிக்காவில் பனிச்சறுக்கில் விளையாடும் அளவுக்கு இன்று அவள் தேறியிருக்கிறாள் என்றால், அந்தப் புண்ணியவதி காட்டிய வழிதான். அதை எனக்குச் சாத்தியப்படுத்தியதும் என் சமையல் கலைதான். ஆக, சமையல் எனக்கு நல்ல ஆலோசகரும்கூட.

கூட்டுக்குடும்பம்... மருமகள், மனைவி, அண்ணி, அம்மா என நிறைய பொறுப்புகள் எனக்கு. எந்தப் பொறுப்புக்கும் குறைவைக்காமல் என் விருப்பத்தையும் தக்கவைத்துக்கொள்வது என்பது அன்றைய காலகட்டத்தில் மாபெரும் சவால். கூட்டுக்குடும்பத்தில் வாழ்க்கைப்படும் ஒரு பெண்ணுக்கு, குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துப்போவது அவ்வளவு எளிதல்ல. அப்படிப்பட்ட தருணங்களில் என் கவனத்தைச் சமையலில் திருப்புவேன். புதிதாக ஓர் உணவைச் சமைக்கத் தொடங்கிவிடுவேன். சமையலில் ஒன்றிய பிறகு, மனம் வேறு எதையும் யோசிக்காது. அதை முடிக்கும்போது மனம் லேசாகியிருக்கும். மனக்கசப்புகளை மறக்க முடியாவிட்டாலும் மன்னிப்பதற்குச் சமையலே எனக்கு ஆயுதம். அந்த வகையில் சமையல் எனக்கு மிகப்பெரிய ஹீலிங்.

கணவரும் நானும் அவ்வளவு அந்நியோன்யமில்லை. நான் கீழே விழுந்துவிட்டால் `பார்த்து வரக் கூடாது... அடிபட்டா என்னாகிறது!' எனத் திட்டுவார். அந்த நேரத்தில் `ஏன் அதட்டுகிறார்?' என்று கோபப்பட்டிருக்கிறேன். அதுதான் அன்பை வெளிப்படுத்துவதில் அவரது பாணி என்பதை அவர் இறந்துபோன பிறகுதான் உணர்ந்தேன். `கண்ணே... மணியே!' எனக் கொஞ்சினால்தான் அன்பா என்பதும் பிறகு தான் புரிந்தது.

அந்தக் காலத்து மனிதர் என்றாலும் சிந்தனையில் அவர் அப்படி இருந்ததில்லை. நினைத்திருந்தால் என்னை சமையல் கலை வகுப்புகள் நடத்தக் கூடாது எனக் கட்டுப்படுத்தியிருக்கலாம். வகுப்புகள் எடுத்து நான் பெரிதாக எதையும் சம்பாதித்து அவருக்குக் கொடுத்ததில்லை. அந்த இடத்தை வாடகைக்குவிட்டிருந்தால் பணமாவது சேர்ந்திருக்கும். பணத்தைப் பெரிதாக நினைக்காமல் என் விருப்பத்தைத் தொடரச் செய்தது அவருடைய பெருந்தன்மை.

யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் என் கணவர் சாலை விபத்தில் இறந்துபோனார். அந்தச் சனிக்கிழமை என் மாணவிகளுக்கு ஃபேர்வெல் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தேன். முதல் நாள் வெள்ளிக்கிழமை இரவு என் கணவர் இறந்துவிட்டார். யாருக்கும் விஷயம் தெரியாது. மறுநாள் காலை அழகழகாக உடை அணிந்து வந்த அத்தனை பேருக்கும் அதிர்ச்சி. மாணவிகளோடு அவர்களின் பெற்றோரும் எனக்குத் துணையாக இருந்தார்கள். கணவர் இறந்தபோது என் மகள்கள் அமெரிக்காவில் செட்டிலாகியிருந்தனர். அவர்களை என்னுடன் வந்திருக்கும்படி சொல்வது நியாயமாகத் தெரியவில்லை. தன்னந்தனியே நின்று கொண்டிருந்த என்னை என் மாணவிகள்தாம் மீண்டும் தேற்றிக் கொண்டுவந்தார்கள். 40-வது நாள் நான் மீண்டும் வகுப்புகள் எடுக்கத் தொடங்கினேன். என் மாணவிகளும் அவர்களது அன்பும் இல்லாமல்போயிருந்தால் அன்றோடு நான் காணாமல்போயிருக்கலாம். எனவே, `சமையல்' எனக்குப் பெருந்துணை.

`என் பொண்ணுக்கு நூடுல்ஸ் செய்ய தெரியும். அதையும் தீய்ச்சிடுவா' என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டு மகளை என்னிடம் அழைத்துவரும் அம்மாக்கள் எக்கச்சக்கம். மகள்களுக்குச் சமையல் சொல்லித்தர அம்மாக்களுக்கும், அம்மாக்களிடம் கற்றுக்கொள்ள மகள்களுக்கும் பொறுமை இருப்பதில்லை. அம்மாவாக இருந்து நான் சொல்லித்தருவேன். திடீரென ஒருநாள் கல்யாணப் பத்திரிகையோடு பெற்றோர் வருவார்கள். `எங்க வீட்டுல நீங்க அடுப்பேத்தி வெச்சிருக்கீங்க... என் பொண்ணு நல்லாவே சமைக்கிறா...' என்று சொல்லிப் பூரித்துப்போவார்கள்.

இந்த வயதிலும் எனக்கு இருக்கும் ஆர்வம் இந்தத் தலைமுறைப் பெண்களுக்கு இல்லை என்பதில் வருத்தம்தான். `யார் மேடம் சமைக்கிறது... `ஆப்'ல ஆர்டர் பண்ணிக்கலாம்' என்கிறார்கள்.

இன்று யார் வேண்டுமானாலும் பாடலாம், ஆடலாம். அதேபோல யார் வேண்டுமானாலும் சமைக்கலாம். யூடியூப்பில் ஏற்றலாம். அவர்கள் சொல்லும் அனைத்தும் பாரம்பர்யமானவையா, சரியானவையா என்றால் இல்லை. கரண்டியைப் பிடிப்பதிலேயே ஏகப்பட்ட நுணுக்கங்கள் உள்ளன. அல்வாவுக்குக் கிளறும்போது ஒரு மாதிரி, காய்கறிகளை வதக்கும்போது வேறு மாதிரி என அது வேறுபடும். யூடியூப்பில் தேவையான பொருள்களைச் சொல்லிச் சமைத்துக்காட்டுவார்களே தவிர, சின்னச் சின்ன நுணுக்கங்களைக் காட்ட மாட்டார்கள். குருவிடம் நேரடியாகக் கற்றுக்கொண்டு சமைப்பதுதான் சமையலில் யாரையும் நிபுணர்களாக்கும். சமைக்க முடியாதவர்கள், சமைக்கப் பிடிக்காதவர்கள், சமைக்கத் தெரியாதவர்கள் என மூன்று பிரிவினர் உண்டு. சமைக்கப் பிடிக்காதவர்களுக்கு அதில் ஆர்வத்தைத் தூண்டி, செய்ய வைப்பதுதான் பெரிய சவால்.

`உங்களால இன்னிக்கு நான் புகுந்தவீட்டுல நல்லபேர் வாங்கியிருக்கேன். என் குழந்தைகளுக்கு விதவிதமா சமைச்சுக் கொடுத்து சந்தோஷப்படுறேன். நாலு பேருக்குச் சமைச்சுக் கொடுத்து எனக்குனு ஒரு வருமானத்தைத் தேடிக்கிட்டேன்' என ஆனந்தக் கண்ணீரோடு நன்றி சொல்ல வருபவர்களைப் பார்க்கும்போது நெகிழ்ந்துபோய் நிற்பேன். சமையலும் அன்பும் எனக்கு ஒன்றுதான். கொடுக்கக் கொடுக்கத் திகட்டாதவை இரண்டுமே. அந்த வகையில் சமையல் என்கிற அந்த அன்புக்கு நான் அடிமை.''

- சாஹா

படம் : ப.சரவணகுமார்

அடுத்த இதழ் முதல் அவள் விகடன் விலை ரூ 25 (ஆன்லைன் இதழ்) என உயர்த்துவதைத் தவிர்க்க இயலாமல் உள்ளது. என்றும் போல் வாசகர்கள் தங்கள் ஆதரவை வழங்க வேண்டுகிறோம்.