இசைக்கருவிகளுக்கு ஊடே சிறு குழந்தை போல குதூகலத்துடன் சுற்றி வருகிறார். `இதைக் கொஞ்சம் இசைக்கிறீர்களா? இது எந்த காலத்தையது? எதைப்பார்த்து இந்தக் கருவியைச் செய்தீர்கள்?’ என்று அவர் ஒவ்வொன்றாகக் கேட்க, நமக்கும் தொற்றிக்கொள்கிறது ஆர்வம். அசரடிக்கும் உயரமும் கம்பீரமான ஆளுமையுமாக சில நொடிகளுக்கு முன் பார்த்தவர், இப்போது அனைத்தையும் தெரிந்துகொள்ளும் ஆவலுடன் பரபரக்கிறார். பத்மபூஷண் விருது பெற்றவர், 25 ஆய்வு நூல்களை எழுதி குவித்தவர் என்கிற எந்த மிடுக்கும் இல்லாமல் புன்னகைக்கிறார் வித்யா தெஹஜியா.

கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்க கொலம்பியா பல்கலைக்கழகக் கலைத் துறையின் பேராசிரியராகச் செயல்படுகிறார் வித்யா. கலிஃபோர்னியா, வாஷிங்டன், நியூயார்க், டெல்லி, ஹாங்காங், சிட்னி என இவர் பணிபுரியாத நகரங்களே இல்லை. வாஷிங்டன் நேஷனல் காலரி, ஸ்மித்சோனியன் நிறுவனம் ஆகியவற்றின் வாயிலாகக் கலை மற்றும் வரலாற்று உலகைக் கலக்கிக்கொண்டிருக்கும் சாதனைப்பெண்மணியுடன், இனி…

“நான் தமிழ்ப்பெண்தான் தெரியுமா?” என்று அதிரடியாக ஆரம்பிக்கிறார். “அப்பாவுக்குத் திருச்சி லால்குடியை அடுத்த மணக்கால் கிராமம். அம்மா தஞ்சாவூர். அடிக்கடி பணியிட மாறுதலுக்கு உட்படும் காவல் துறை அதிகாரியாக அப்பா இருந்ததால், சிறுவயது முதல் நிறைய பயணப்பட்டிருக்கிறேன். பள்ளிப்படிப்பைக் கேரளாவிலும், கல்லூரிப் படிப்பை மும்பை சேவியர்சிலும் முடித்தேன். இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பெண்கள் கல்லூரியில் முதுகலைப் பட்டப்படிப்பில் சேர்ந்தேன். சொல்லித் தருவது எதுவென்றாலும், கேள்வி கேட்க வேண்டும், ஆராய வேண்டும் என்று எனக்குப் புரிதலை ஏற்படுத்தியது இந்தக் கல்லூரிதான். இதே முறையைத்தான் நான் இப்போது பணிபுரியும் கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் கடைப்பிடிக்கிறேன்.

கேம்பிரிட்ஜில் புடவைதான் கட்டினேன். சைக்கிள் ஓட்டினேன். ஆர்க்கியாலஜி படித்தேன். தொல்லியல்மீது ஆர்வம் அதிகம். இங்கிலாந்துக்கும் பிரான்ஸுக்கும் இடையேயுள்ள ஜெர்சி தீவுகளில் ஈஸ்டர் விடுமுறைகளில் அகழ்வாராய்ச்சியில் ஆழ்ந்துவிடுவோம். ஒவ்வொருவரும் சுழற்சி முறையில் 20 நாள்களில் இரண்டு நாள்கள் சமைப்போம். மீதியுள்ள 18 நாள்கள் வேலை செய்வோம். சிறு பிரஷ் கொண்டு தோண்டி, துடைப்போம். அது பாலியோலிதிக் எனப்படும் கற்காலத்தைச் சேர்ந்த தளம். மழை பெய்துகொண்டே இருக்கும். சிறு துண்டு எலும்பு, கல் கிடைத்தாலும் பெரிய த்ரில்லாக, கொண்டாட்டமாக இருக்கும். முன்னோர் மீதான ஆர்வம், வரலாறு மீதான காதல் என்னை இழுத்துச் சென்றது. இந்த ஆர்வம் என் அம்மா அப்பாவிடம் இருந்தே வந்தது.

விடுமுறைக்கு அப்பாவோடு வெளியூர் செல்லும் வழியில் எது எங்களைக் கவர்ந்தாலும் நின்றுவிடுவோம். அது ஒரு கோயிலோ, மசூதியோ, தேவாலயமோ, சமணப் படுகையோ, பவுத்த விகாரமோ, கோட்டை கொத்தளமோ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இறங்கி ஆராய ஆரம்பித்துவிடுவோம். இப்படித்தான் கல்வெட்டுகள் என்னை வெகுவாக ஈர்த்தன. இதனால்தான் தமிழும் சம்ஸ்கிருதமும் நன்றாகக் கற்றுக்கொண்டேன். பிராமி படித்தேன். ஸ்தல புராணமோ, கல்வெட்டோ, எதுவாக இருந்தாலும் நானே படித்துத் தெரிந்துகொண்டாலேயொழிய அது குறித்து எழுதுவதில்லை. ஆழ்வார்கள், நாயன்மார்கள் பற்றி `ஜர்னி வித் தி செயின்ட்ஸ்' புத்தகத்தை எழுத ஆசைப்பட்டதால் சம்பந்தர், அப்பர் இயற்றிய தமிழைக் கற்க வேண்டும் என்ற ஆசையில், வருடத்துக்கு ஆறு மாதங்கள் வீதம் இரண்டு ஆண்டுகள் இந்தியா வந்து, ஆசிரியர் ஒருவரிடம் `நடுத்தமிழ்' கற்றுக்கொண்டேன். ஆர்வமிருந்தால் போதும், கலை தானே கைவரும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.''

`ஆண்டாள் அண்டு ஹெர் பாத் ஆஃப் லவ்' என்ற புத்தகம் எழுதியிருக்கிறார் வித்யா. அதனால், ஆண்டாள் சர்ச்சை குறித்து இவரிடம் கேட்டால் தலையைக் குலுக்குகிறார். “முற்காலத்தில் கோயில்களில் ஆடிய ஆடல் பெண்கள் பெரும் பக்தைகள். பணமும் நிலமும் நகைகளும் கோயில்களுக்கு வாரி வழங்கியிருக்கிறார்கள் என்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம். ஆண்டாள் பற்றிய சர்ச்சையைப் பொறுத்தவரை, ஆன்மிக நம்பிக்கை சார்ந்த விஷயங்களை இப்படி எடுத்தோம், கவிழ்த்தோம் என்று பேச முடியாது. அதிசயங்களில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், ஆண்டாள் திருமாலைச் சேர்ந்தது ஓர் அதிசயம் என்று கொள்ளலாம். அதில் நம்பிக்கை இல்லை என்றால், கடவுளைச் சேர்வதைக் கவித்துவமாகச் சொல்லும் ஒரு வழி என்று எடுத்துக்கொள்ளலாமே. சம்பந்தர் 16 வயதில் சிவனுடன் ஐக்கியமாவதை மறு பேச்சு இல்லாமல் ஏற்றுக்கொள்பவர்கள், ஆண்டாளை மட்டும் ஏன் வேறுவிதமாகப் பார்க்க வேண்டும்?

ஆண்டாள் ஒரு தேர்ந்த கவிஞர். வெறும் அன்போ, காதலோ கொண்டு இத்தனை உணர்வுபூர்வமாக, செறிவுடன் பாசுரங்கள் எழுதியிருக்க முடியாது. நிச்சயம் அறிவில் சிறந்த பெண்ணாகத்தான் ஆண்டாள் இருந்திருக்க வேண்டும். நாச்சியார் திருமொழி என்பது ‘பிரைடல் மிஸ்டிசிசம்’ போல. கிறிஸ்துவ மதத்தில்கூட அவிலா தெரசா என்ற புனிதை, இறைவன்மீது கொண்ட காதலால், உடலையும் உள்ளத்தையும் அர்ப்பணித்ததைப் படிக்கிறோம். கடவுள் பால்கொண்ட அன்பின் ஆழத்தை வெளிப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன ஆண்டாளின் எழுத்துகள். கட்டுக்கடங்காத காதலை வேறு எப்படி ஒரு பெண்ணால் சொல்ல இயலும்?''

உலகிலேயே முதன்முறையாக பிரிட்டிஷ் இந்தியா பற்றிய கண்காட்சியை நிகழ்த்தியவர் வித்யாதான். ``நியூயார்க் மற்றும் லாஸ்ஏஞ்சலிஸ் நகரங்களில் நடைபெற்றது அது. அதற்குத் தரவுகள் தேடும்போதுதான் எட்வர்ட் லியர் என்ற 19-ம் நூற்றாண்டின் அற்புதமான கலைஞனைக் கண்டுபிடித்தேன். ‘லைம்ரிக்’ எனப்படும் பகடி கவிதைகளைப் புனைபவராகவே எனக்குத் தெரிந்த லியர் வரைந்த 3,000 வாட்டர் கலர் ஓவியங்கள் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இருப்பது தெரிந்தது. அங்கு சென்று 15 நாள்கள் தேடி அவரது இந்தியப்பயணத்தில் வரைந்த ஓவியங்களைத் தூசுதட்டி எடுத்தேன். ஒரே இடத்தைப் பலமுறை வரைந்து நேரம் குறித்திருந்தார் லியர். வெளிச்சமும் வெயிலும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தன. இந்தியாவில் அவர் வரைந்த சில சிறந்த ஓவியங்களை மட்டுமே வைத்து, அவரது இந்தியப் பயணத்தைத் தொகுத்தேன். கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தேன். அந்த அனுபவத்தை வைத்து எழுதியதுதான் ‘இம்பாசிபிள் பிக்சரஸ்க்னெஸ்’ என்ற புத்தகம்.

சோழரின் ஐம்பொன் சிலைகள் பற்றி இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். நாயன்மார், ஆழ்வார்கள் குறித்து எழுதிய புத்தகத்துக்கான வேலையில் நிறைய கோயில்களுக்குச் சென்றேன். நியூயார்க்கில் சோழர் சிற்பக்கலை குறித்து மூன்று லெக்சர்கள் கொடுத்தேன். அப்படியே சோழர்கள் மீதான ஆர்வம் தொற்றிக்கொண்டது. சிலை, ஆடை அணிகலன், எழுத்து, இசை என்று அவர்களை இன்னும் அதிக கவனத்துடன் ஆராயத் தொடங்கினேன். ஸ்மித்சோனியனில் சோழர் குறித்த கண்காட்சி ஒன்றும் நடத்தினேன். உலகின் மிகப்பெரிய மியூசியமான ஸ்மித்சோனியன் மியூசியம் என்னை முழுமையாக அங்கீகரித்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது!''

`எந்த மீடியாவுக்கும் பேட்டியே கொடுத்ததில்லையே ஏன்?' என்ற கேள்விக்கும் சிரிப்புதான் பதில்!

“நான் அப்படித்தான். வெளியாட்களுடன் அதிகம் தொடர்பில் இருப்பதில்லை. 2012-ம் ஆண்டு எனக்குப் பத்மபூஷண் விருது அறிவிக்கப் பட்டபோது, என்னால் அதை நம்பவே முடியவில்லை. என் பணி முழுக்க அமெரிக்காவில். என் புத்தகங்கள் அங்கே விற்றுத் தீர்க்கின்றன. இந்தியாவுக்கும் எனக்கும் இப்போது அதிகம் தொடர்பில்லை. ‘அகாடமிக்’ சர்க்கிள் தாண்டி என்னைப் பெரிதாக யாருக்கும் தெரியாது. என்ன இருந்தாலும் சொந்த நாட்டில் கிடைக்கும் மிக உயரிய அங்கீகாரம் என்பதால் என்னால் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எல்லா அமெரிக்க வாழ் இந்தியர்கள் போலவே, இங்கே வந்து ஓய்வெடுக்கவே ஆசை. ஆனால், பாதி உள்ளம் அங்கே பிள்ளைகளிடமும் மீதி இங்கே பிறந்த மண்ணிலும் இருக்கிறதே? பயணிக்க இயலும் வரை இங்கே வந்து செல்வது என்பதில் உறுதியாக இருக்கிறேன். கோவாவில் ஒரு வீடு இருக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை இங்கே வந்து தங்கி, அருகில் இருப்பவர்களுடன் இணக்கமாக இருப்பது வாடிக்கை. கோவா காஸ்மோபாலிட்டனாகவும், அதிக ட்ராஃபிக் இல்லாமலும், அமைதியாக இருக்கிறது. கணவர் குஜராத்தைச் சேர்ந்தவர் என்றாலும், அவருக்கும் கோவாமீது அதீத அன்பு!”

கலை, நடனம், வரலாறு, பாரம்பர்யம் என்று எந்தத் துறையில் பணிபுரிந்தாலும், நாம் பாலினம் மற்றும் சாதிய, வர்க்க அடையாளங்களால்தான் அளவிடப்படுகிறோமா?

``ஆம்! அதிலும் மத நிறுவனங்களில்தான் அதிக வேறுபாடுகள் இருக்கின்றன. கோயில்களில் நான் உள்ளே நுழைந்ததும், ஒட்ட வெட்டிய என் தலைமுடி, நிறம் இவற்றைப்பார்த்து, என்னை வெளிநாட்டுப் பெண்ணாகவே கணிக்கின்றனர். நான் எதுவும் பேசுவதில்லை. அவர்களாகவே என்னைப்பற்றி பேசட்டும் என்று காத்திருப்பேன். `கையில பென்சிலும் நோட்டும் தூக்கிட்டு வந்துடறாங்க…வெளிநாட்டுக்காரிங்க' என்கிற ஏளனத்துக்காகக் காத்திருந்து, சட்டென `இல்லையே, நான் தமிழ், என்ன உங்க பிரச்னை?' என்று கேட்டுவிடுவேன். என்னை அவர்கள் ஏளனம் செய்துவிட்டால், மிகுந்த வசதி. என் கை அதன்பின் அங்கு ஓங்கியே இருக்கும்!” - சிரிப்பு வெடிக்கிறது.

‘தி பாடி அடார்ன்ட்’ என்ற புத்தகத்தில் கலையில் மனித உடல் எப்படி உயர்த்திப் பிடிக்கப்பட்டது என்றும், இடைக்காலத்தில் சரிவு ஏற்பட்டபின் இன்றளவும் உடல் என்பது கலையில் ஏன் ஒருவித தயக்கத்துடன் அணுகப்படுகிறது என்பதை யும் விளக்குகிறார். ‘புனிதம்’ என்ற போர்வையை மதம் மனிதனின் உடலுக்குப் போர்த்தியதால் வந்த வினை இது. எத்தனை அழகான சிலைகளையும்கூட துணி கொண்டு போர்த்தி வைக்கிறார்கள். உடல் என்பதே தேவைப்படாத அங்கமாகத் கலையில் பார்க்கப்படும் நிலை வந்துவிட்டது.

பெண்ணைத் தேவியின் அங்கமாகத்தான் நான் பார்க்கிறேன். நாட்டின் எந்த மூலையிலும் இன்றும் வழிபடப்படும் முதல் தெய்வமே தேவிதான்... பெண் தெய்வம்தான். எல்லாப் பெண்களுக்குள்ளும் தேவி என்ற தாய் இருக்கிறாள். அந்தத் தேவியின் சக்தியை ஒரு சிறு துளியேனும் ஒவ்வொரு பெண்ணும் மனதில் உறுதியாகக் கொண்டிருக்க வேண்டும். நம்பிக்கை என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக முக்கியம்'' என்கிறவரின் குடும்பம் பற்றிக் கேட்டோம்.

``கேம்பிரிட்ஜில் படிக்கும்போதே தெஹஜியாவைச் சந்தித்தேன். பெற்றோர் அனுமதிக்காகச் சில ஆண்டுகள் காத்திருந்தோம். ஒரு வழியாகச் சம்மதித்தார்கள். என் மகன்கள் இருவரும் காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். மூத்த மருமகள் ஐரிஷ் கத்தோலிக்கப் பெண். அடுத்தவள் யூதப்பெண். முற்றிலும் ‘காஸ்மோ பாலிட்டன்’ குடும்பம் எங்களுடையது. ஆனால், அன்புக்குக் குறைவில்லை!''

- நிவேதிதா லூயிஸ்

படங்கள் : லெய்னா