Published:Updated:

ஐயோ பாவம் அங்கிள்ஸ்!

ஐயோ பாவம் அங்கிள்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
ஐயோ பாவம் அங்கிள்ஸ்!

ஐயோ பாவம் அங்கிள்ஸ்!

ஐயோ பாவம் அங்கிள்ஸ்!

ஐயோ பாவம் அங்கிள்ஸ்!

Published:Updated:
ஐயோ பாவம் அங்கிள்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
ஐயோ பாவம் அங்கிள்ஸ்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்!

மாம்பலமோ, கோடம்பாக்கமோ... ரயில்வே ஸ்டேஷன்ல மின்சார ரயிலுக்காக வெயிட் பண்ணிட்டிருக்கீங்கனு வைங்க. படில இறங்கி நடந்து வர்ற... காட்டன் சர்ட் - லெக்கின்ஸ் ஜீன்ஸ் போட்ட ஏஞ்சல் பொண்ணை சைட் அடிச்சு மானசீகமா ஹார்ட்டின் விட்டுட்டிருக்கீங்கனும் வைங்க.   ஓ மை காட்... அந்தப் பொண்ணு நேரா நடந்து உங்ககிட்டயே வருதுனு வைங்க. வந்து... ``அங்கிள்! செங்கல்பட்டு ட்ரெய்ன் இந்த பிளாட்பாரத்துல நிக்குமா?’’னு கேட்குது. உங்களுக்கு எப்படி இருக்கும்?

கடப்பாரைய நெஞ்சுல செருகிட்டு ரெண்டு ஆட்டு ஆட்டுன ஃபீல் கிடைச்சதுனா... வாழ்க்கையில முதன்முறையா ‘அங்கிள்’ங்கிற ஒரு வார்த்தையைக் கேட்டிருக்கீங்கனு அர்த்தம். 40-ஐ நெருங்கிட்டீங்கன்னு அர்த்தம். வாங்க 40-ஐ நெருங்குற `வயோதிக’ வாலிப அன்பர்களைப் பத்தியும் ‘Midlife Crisis’-ன் ஆரம்பக்கட்டத்தைத் தாங்க முடியாம அவங்க பண்ணுற அட்ராசிட்டிகளைப் பத்தியும் புட்டு புட்டு, இடியாப்பம் இடியாப்பம் வைக்கிறேன்...

ஐயோ பாவம் அங்கிள்ஸ்!

*இந்தமாதிரி ஆளுங்களோட முதல் அட்ராசிட்டியே தோற்றப் பொலிவு பத்திதான். ஃப்ளோரசன்ட் கலர்ல த்ரீ ஃபோர்த், பீர் தொப்பையோட  ப்ரேம்ஜி அமரன் மாதிரி கெட்ட வார்த்தை பிரின்ட் பண்ணின டி-ஷர்ட்னு கண்ணைக் குத்துற காஸ்ட்யூம்ல திரிவாங்க. காலைல ஆபீஸுக்குக் கிளம்புறதுக்கு முன்னாடி நரைச்ச முடியை எல்லாம் தேடித்தேடி கத்தரி போட்டுப் பார்த்துட்டு, தலைக்கு டை அடிக்கிறதுல ஆரம்பிச்சு தாடிக்கு டை அடிக்கிறதுல வந்து முடிப்பாங்க. முடியெல்லாம் கொட்டி நல்லா ஏறு நெத்தியா இருந்தா நோ பிராப்ளம். மொட்டை அடிச்சு அப்படியே மெய்ன்டெய்ன் பண்ணுவாங்க. பெரிய வின் டீஸல் பரம்பரை!

* ‘உங்களைப் பார்த்தா 30 வயசு இருக்கும்னு தோணுது சார்!’னு கலாய்க்குறதுக்கு சொன்னாகூட `காலா’ சரீனா மாதிரி நம்பிடுவாங்க. அந்தப் பொய்யை நம்பி ஜிம்முக்குப் போய் சீமானே பயப்படுற மாதிரி 60 ஆயிரம் யானை பலத்தோட ஒரு வாரம் ஒர்க்-அவுட் பண்ணி கை,கால், முட்டியெல்லாம் வீங்கிக் கவுந்தடிச்சு வீட்டுல படுத்துக்கிடப்பாங்க. `ஜிம்முக்குப் போகாமலே’ உடல் இளைக்க எதையாச்சும் அமெஸான்ல ஆர்டர் போட்டு வாங்கி வேஸ்ட்டா ஒரு ஓரமா போட்டு வெச்சி வாங்கிக் கட்டிக்குவாங்க. வாய்ப்பே இல்லை ராஜா!

 *சின்னப் பையனா காட்டிக்குவாங்களே தவிர சின்னப் பசங்க யாராச்சும் கலாய்ச்சுட்டாங்கன்னா அறச்சீற்றம்தான்.  `சுப்ரமண்யபுரம்’ சித்தன் ரேஞ்சுக்கு தொட்டுக்க ஊறுகாயா ட்ரீட் பண்ணினா அம்புட்டுத்தான்... கேம் ஓவர். `டேய் டேய்... நான் பார்க்குறதுக்குத்தான்டா சின்னப்பையன். 1990-ல பெரிய ரவுடிடா... அப்புறம்தான்டா இதெல்லாம்!’னு ‘பாட்ஷா’ படத்து காலேஜ் ஓனர் கணக்கா பீலா விட்டு வயசைக் காட்டி மாட்டிக்குவாங்க. கூழுக்கும் ஆசை கூல்டிரிங்ஸுக்கும் ஆசை!

 *ஹார்மோன்கள் கொஞ்சம் லேட்டா வேலை செய்ய ஆரம்பிக்கும். கவிப்பேரரசு சொன்னமாதிரி வாட்ஸ்-அப் ஓனர் தெய்வமாவான். சாட்டிங்ல கில்மா குரூப்கள்ல மெம்பர் ஆவாங்க. அங்கிட்டும் இங்கிட்டுமாய்க் கடலைகளை வறுக்குறதுக்கு இளமை ஊஞ்சலாடும். சமயங்கள்ல மனைவி கையில அந்த ஊஞ்சல் மாட்டிக்கிட்டு அல்லாடும். தெரிஞ்சோ தெரியாமலோ மனைவி இவங்க செல்போனை எடுத்துப் பார்த்தாங்கன்னா போச்சு... வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டை உருளுதடி!

 *சோஷியல் மீடியால குத்த வெச்சுக் கிடப்பாங்க. நெட்டி முறிச்சி ஆடுற மியூஸிக்கலி ஆப்ஸ் பொண்ணுங்களும்,  `பியார் பிரேமா காதல்’ ரைசாவும் வாழ்க்கையோட தத்துவங்களை லேட்டா புரிய வைப்பாங்க. நாம பேச்சுலர் லைஃப்ல இருக்குறப்போ இப்படி ஆப்ஸ் வரலையே... ரைசா மாதிரி ஒரு பொண்ணு `காதல் வேற, நட்பு வேற, செக்ஸ் வேற’னு சொல்லலையேனு தாவாங்கட்டையைக் குத்திக்கிட்டு அழத் தோணும்.  `கொஞ்சம் லேட்டா கல்யாணம் பண்ணியிருக்கலாமோ?’ங்கிற அவங்க மைண்டு வாய்ஸ் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் மூலமா வெளில கேட்கும். ரொம்ப லேட்டு குமாரு!

 *பால் பாக்கெட் வாங்கிட்டு வரச் சொன்னா கவுந்தடிச்சு தூங்குவாங்க. ஆனா, ஒரே நாள்ல மூடு செட்டாகி மாராத்தான் ஓடுவாங்க.  `யூத்தாகுறோமுடா!’னு வைராக்கிய வைஜயந்தி மாலாவா மாறி `சாதுர்யம் பேசாதடி என் சலங்கைக்குப் பதில் சொல்லடி’னு ரன்னிங், டான்ஸ், கராத்தே , ஜிம் என யூத்துகளுக்கு செம டஃப் பைட் கொடுப்பாங்க. மறுபடியும் டயர்டாகி மணிமேகலை பிரசுரத்தின் ‘முப்பது நாளில் உடம்பு இளைப்பது எப்படி?’க்கு வந்து நிப்பாங்க. ``விஜய் 6 மணிக்குள்ள டின்னர் சாப்பிடுவாராம், கமல் கருங்காப்பிதான் குடிப்பாராம்... மகேஷ்பாபு மஞ்சக் கரு சாப்பிட மாட்டாராம்!’’னு எங்கேயாச்சும் படிச்சதை வீட்டுல சொல்லி வன்முறையைப் பாய்ச்சுவாங்க. ``முட்டையில நல்லா இருக்குறதே மஞ்சள் கரு தான்டா. அதை எப்படி சாப்பிடாம இம்புட்டு கன்ட்ரோலா இருக்கானுக?’’னு ஆஃபாயிலையும் ஆம்லேட்டையும் சாப்பிட்டுட்டே யோசிப்பாய்ங்க. சிக்கன், மட்டன்லகூட மயங்காத ஆளுங்க ஒரேநாள்ல காராச்சேவுலயும், மசால்வடையிலயும் விரதத்தை முறிச்சுக்குறதெலாம் ஓவர் யா! கப் சிப் கருவாட்டு மண்டைஸ்!

* ``வாங்குனா புல்லெட் தான் வாங்குவேன்’’னு அடம்பிடிச்சு புல்லட் வாங்கி அதைப் பராமரிக்க முடியாம  பொண்டாட்டிகிட்ட செமையா திட்டு வாங்குவாங்க. ஆபீஸ் போறப்பவும் வர்றப்பவும் பெட்ரோல் போட்டே டர்ராகிடுவாங்க. #WanderLust ஹேஸ்டேக்ல எதையாவது போட்டோ புடிச்சி  இன்ஸ்டாக்ராம்ல போடுறதுக்காகவே தூரமா டிராவல் பண்ணணும்னு கனவு காணுவாங்க. ‘வெறும் பய’னு வீட்டுக்குள்ளார இருந்து சத்தம் வரும். `ஈ.எம்.ஐ’-ங்கிற வார்த்தையும் ஒண்ணா சேர்ந்துச்சுனா அப்புறம் எங்கிட்டு டூரு டிராவலெல்லாம்? பசங்களோட டவர் பார்க் போறதும், ஊருல இருந்து யார் வந்தாலும் அம்மா சமாதி, கலைஞர் சமாதினு சுத்திக் காட்டுறதும்தான் அதிகபட்ச `வாண்டர் லஸ்ட்’டா இருக்கும். குயிலைப் புடிச்சு கூண்டில் அடைச்சு...!    
 
* ``40 வயசாகிடுச்சுல, கோபத்தைக் குறைங்க. எப்ப பார்த்தாலும் எரிஞ்சு விழுந்துட்டு’’னு யாராச்சும் சொன்னா போச்சு. ``நாப்பதுனு யாரு சொன்னா... எனக்கு முப்பத்தி எட்டுதான். வவ்வ்வ்வ்!’’னு  `ககக போ’ விஜய் சேதுபதியா குலைச்சுக் காட்டி மண்டை மேல இருக்குற கொண்டைய காட்டிருவாங்க!

பாவம் பா(ய்ஸ்) அவங்க... இல்லை இல்லை... பாவம் மென். ஆமென்!

ஆர்.சரண் - ஓவியம்: ரமணன்