Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் கிளினிக்

கேள்வி - பதில்

மோட்டார் கிளினிக்

கேள்வி - பதில்

Published:Updated:
மோட்டார் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் கிளினிக்

எனது பட்ஜெட் 5 லட்ச ரூபாய். நான் வாங்கப் போகும் புதிய கார், குடும்பப் பயன்பாட்டுக்கு ஏற்றதாகவும், சிறந்த ரீ-சேல் மதிப்பைக்கொண்ட காராகவும் இருக்க வேண்டும்.

- எம்.ராஜ்குமார், இமெயில்.

மோட்டார் கிளினிக்

உங்கள் பட்ஜெட்டில் கிடைக்கக்கூடிய ஆல்ட்டோ அல்லது க்விட் கார்களின் 800சிசி/1000சிசி மாடல்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

அதிகப்படியான டீலர் நெட்வொர்க், குறைவான பராமரிப்புச் செலவுகள், சிறந்த ரீ-சேல் மதிப்பு என மாருதி சுஸூகியின் பலன்கள் அனைத்தையும் தன்வசம் கொண்டிருக்கும் ஆல்ட்டோ, முதல் கார் வாங்குபவர்களின் சாய்ஸாகவே இருக்கிறது. ஆனால், இது இடவசதி மற்றும் சிறப்பம்சங்களில் பின் தங்கிவிடுகிறது. எனவே,  ‘ஆல்ட்டோ போரடித்துவிட்டது, கொஞ்சம் ஸ்டைலான கார் வேண்டும்’ என்பவர்களை, க்விட் திருப்திப்படுத்தும். ஆல்ட்டோவின் மைனஸ், இந்த காரின் ப்ளஸ்ஸாக இருக்கிறது. ஆகவே, இரண்டு கார்களையும் ஒருமுறை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்து முடிவெடுங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மோட்டார் கிளினிக்

நான் கடந்த 17 ஆண்டுகளாக ஸ்ப்ளெண்டர் பைக்கைப் பயன்படுத்தி வருகிறேன். தற்போது 2 லட்ச ரூபாய் பட்ஜெட்டில், க்ரூஸர் பைக் வாங்க முடிவெடுத் திருக்கிறேன். நகரம் மற்றும் நெடுஞ்சாலைப் பயன்பாடு, சொகுசு, பராமரிப்புச் செலவுகள், ஏபிஎஸ் ஆகியவற்றில் சிறந்து விளங்குவது அவசியம். எனக்கு ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350X பைக் மிகவும் பிடித்திருக்கிறது. இதையே வாங்கலாமா அல்லது இதே விலையில் வேறு ஆப்ஷன் இருக்கிறதா?

-  வி.அருண், இமெயில்.


உங்கள் பட்ஜெட்டை வைத்துப் பார்க்கும்போது, நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350X பைக் நல்ல சாய்ஸாக இருக்கும். ஸ்டைலான தோற்றம், போதுமான டார்க்கைத் தரும் இன்ஜின், சிறப்பான சொகுசு மற்றும் நிலைத்தன்மை, பிராண்ட் மதிப்பு என ஈர்க்கிறது. ஆனால், விலைக்கேற்ற தரம் இல்லை. வசதிகளும் குறைவு, அதிக பராமரிப்புச் செலவுகள், குறைவான மைலேஜ் என மைனஸ்களும் உள்ளன. இதே விலையில் கிடைக்கக்கூடிய பஜாஜ் டொமினார் பைக்கையும் நீங்கள் பரிசீலிக்கலாம். அது உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய பைக்காக இருக்கும். டெஸ்ட் டிரைவ் செய்து பாருங்கள்.

யூஸ்டு பைக் மார்க்கெட்டில், யமஹா RX 135 பைக்கை வாங்கலாம் எனத் தீர்மானித்துள்ளேன். ஆனால், அப்படிப்பட்ட 2 ஸ்ட்ரோக் பைக்குகளைத் தடை செய்யப் போவதாக எனது நண்பர்கள் சொல்கிறார்கள். தற்போது இதை நான் வாங்கலாமா, வேண்டாமா?

- மு.பிரபாகரன், கோயம்புத்தூர்.


‘2 ஸ்ட்ரோக் பைக் வேண்டும்’ என்பவர்களுக்கு, யமஹா RX சீரிஸ் பைக்குகள் ஏற்ற சாய்ஸ்தான். அது மிகவும் பழைய பைக்காக இருந்தாலும், இன்னமும் பைக் ஆர்வலர்களைத் தன்வசப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், யூஸ்டு பைக் மார்க்கெட் மற்றும் RX சீரிஸ் பைக்கைப் பொறுத்தவரை, தனது ஆயுளில் ஒரே பைக் பல ஓனர்களைப் பார்த்திருக்கும்! எனவே, அதன் ஆவணங்கள் மற்றும் கண்டிஷன் ஆகியவற்றை உறுதிசெய்துவிட்டு, பின்னர் உங்களுக்கான பைக்கை இறுதிசெய்யவும். இல்லையென்றால் பராமரிப்புச் செலவுகள், உங்கள் பர்ஸைப் பதம் பார்த்துவிடும். உங்கள் நண்பர்கள் சொல்வதைப்போல, இதுபோன்ற வாகனங்கள் தடை செய்யப்படுவதற்கான சாத்தியம் குறைவுதான். ஏனென்றால், 15 ஆண்டுகளுக்கும் அதிகமான வாகனங்களைப் பயன்பாட்டில் இருந்து ஒழிப்பது பற்றி, மத்திய அரசு இன்னும் தெளிவான பதிலைச் சொல்லவில்லை.

 எனது நண்பரின் தந்தை, ஃபிகோ காரைப் பயன்படுத்தி வருகிறார். அவர் ஒருநாள் காலை தனது காரை பார்க்கிங்கில் விட்டுவிட்டு, அலுவலகம் சென்றுவிட்டார். மாலை காரை எடுக்க வந்தால், பின்பக்க விண்ட் ஷீல்டில் ஏற்பட்ட விரிசலைக் கண்டு அதிர்ச்சியடைந்துவிட்டார். CCTV கேமராவைப் பார்த்தபோது, அந்தப் பகுதியில் சந்தேகப்படும்படியாக யாருமே இல்லை. இது எப்படி நடந்திருக்கும்?
 
- கெளதம், இமெயில்.

நீங்கள் சொல்வதை வைத்துப் பார்க்கும்போது, அது திறந்தவெளி பார்க்கிங்காக இருக்கலாம். விண்ட்ஷீல்டில் ஏற்கெனவே இருந்த விரிசல், வெயிலின் வெப்பத்தினால் விரிவடைந்து ஏற்பட்டதாக இருக்கக்கூடும். ஏனெனில், இதுபோல வெயில் காலத்தில் நிகழ்வது வாடிக்கைதான்!

ஹோண்டா ஆக்டிவா 5G, ஆக்ஸஸ் 125 ஆகியவற்றில் எதை வாங்கலாம்? இரண்டுமே எனக்குப் பிடித்திருப்பதால், எதை வாங்குவது என்பதில் ஒரே குழப்பமாக இருக்கிறது. இல்லை, வேறு ஏதும் ஆப்ஷன் உண்டா?

- பிரஜித், இமெயில்.
 
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் 2 ஸ்கூட்டர்களுமே, தமது பிரிவில் ஒவ்வொரு மாதமும் அதிகமாக விற்பனையாகும் ஸ்கூட்டர்களாக இருக்கின்றன. எனவே, ஆக்டிவாவைவிடக் கொஞ்சம் விலை அதிகமான ஆக்ஸஸ் 125 உங்களுக்கான தேர்வாக இருக்கும் எனத் தோன்றுகிறது. ஆக்டிவாவின் டீலக்ஸ் மாடலில் LED ஹெட்லைட் மற்றும் அனலாக்-டிஜிட்டல் மீட்டர் இருந்தாலும், அதிக பவர் - குறைவான எடை - டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் டிஸ்க் பிரேக் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் ஆக்ஸஸை ஒருமுறை டெஸ்ட் டிரைவ் செய்து பாருங்கள். கூடுதலாக 110சிசி பிரிவில் ஜூபிட்டரையும், 125சிசி பிரிவில் எண்டார்க் ஸ்கூட்டரையும் நீங்கள் பரிசீலிக்கலாம்.

மோட்டார் கிளினிக்

நடுத்தர வயதைச் சேர்ந்த எனக்கு, கெத்தாக ஒரு பைக்கை வாங்க ஆசை. எனது பட்ஜெட் 5 லட்ச ரூபாய். அது ஏபிஎஸ், ஸ்லிப்பர் கிளட்ச், குறைவான எடை, சொகுசான ஓட்டுதல் அனுபவம் கொண்ட 200சிசி-300சிசி பைக்காக இருப்பது அவசியம். ஓட்டுதல் அனுபவத்தில் அசத்தும்  க்ரூஸர் பைக்கான தண்டர்பேர்டு எனது தோற்றத்துக்குப் பொருந்தினாலும், அதன் எடை மற்றும் கையாளுமை பிடிக்கவில்லை. இதே விலையில் கிடைக்கும் மற்ற ஆப்ஷனும் என்னைப் ஈர்க்கவில்லை. தற்போது பிஎம்டபிள்யூ G310R வாங்கலாம் என்கிற முடிவோடு இருக்கிறேன். இந்த முடிவு சரியா?  அல்லது புதிய க்ரூஸர் பைக்குக்காகக் காத்திருக்கலாமா?

- சாதிக், காரைக்குடி.


உங்களுக்குப் பிடித்தமான பிஎம்டபிள்யூ G310R பைக், ஒட்டுமொத்தத் தரம் மற்றும் கையாளுமை ஆகியவற்றில் அசத்தினாலும், அதிக விலை, குறைவான டீலர் நெட்வொர்க், குறைவான வசதிகள் எனப் பின்தங்குகிறது. உங்கள் பட்ஜெட்டில், கவாஸாகி அறிமுகப்படுத்திய Localised நின்ஜா 300 பைக்கை வாங்கலாம். இதில் உங்கள் எதிர்பார்ப்புகளான டூயல் சேனல் ஏபிஎஸ், 300 சிசி (2 சிலிண்டர்) இன்ஜின், ஸ்லிப்பர் க்ளட்ச், எதிர்காற்று முகத்தில் அறைவதைத் தடுக்கும் ஃபுல் ஃபேரிங், டூரிங் திறன், எடை என ஆல்ரவுண்டராக அசத்துகிறது. ஆனால், இதன் பராமரிப்புச் செலவு சிறிது அதிகம். எனவே, இரண்டு பைக்குகளையும் டெஸ்ட் டிரைவ் செய்து பாருங்கள்.

ராகுல் சிவகுரு

மோட்டார் கிளினிக்

ங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. இ-மெயில்: motor@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism