Published:Updated:

இது ஜிம்க்கி ரேஸ் - ஆயிரம் பொய் சொல்லி ரேஸர் ஆகலாம்!

இது ஜிம்க்கி ரேஸ் - ஆயிரம் பொய் சொல்லி ரேஸர் ஆகலாம்!
பிரீமியம் ஸ்டோரி
இது ஜிம்க்கி ரேஸ் - ஆயிரம் பொய் சொல்லி ரேஸர் ஆகலாம்!

ரேஸர் - பேட்டி

இது ஜிம்க்கி ரேஸ் - ஆயிரம் பொய் சொல்லி ரேஸர் ஆகலாம்!

ரேஸர் - பேட்டி

Published:Updated:
இது ஜிம்க்கி ரேஸ் - ஆயிரம் பொய் சொல்லி ரேஸர் ஆகலாம்!
பிரீமியம் ஸ்டோரி
இது ஜிம்க்கி ரேஸ் - ஆயிரம் பொய் சொல்லி ரேஸர் ஆகலாம்!

ஜிமிக்கி, கம்மல், சுடிதாரில் எப்போதாவதுதான் ஜிம்க்கியைப் பார்க்க முடியும். ரேஸ் டிராக்கில் கம்மலை அகற்றிவிட்டு கிளவ்ஸ், ரைடிங் ஜாக்கெட், ஹெல்மெட் என வேற லெவலில் இருப்பார் ஜிம்க்கி. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஜிம்க்கிக்கு இப்போது 20 வயது. தவழும் வயதிலிருந்தே பைக் ஓசைதான் தனக்குப் பிடித்த விஷயம் என்கிறார். இருந்தாலும், முறைப்படி லைசென்ஸுடன் பைக் ஓட்ட ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள்தான் ஆகின்றன. ஆனால், புரொஃபஷனல் ரேஸர்களுக்கெல்லாம் டிராக்கில் சவாலாக இருக்கிறார் ஜிம்க்கி.

இது ஜிம்க்கி ரேஸ் - ஆயிரம் பொய் சொல்லி ரேஸர் ஆகலாம்!

டிராக்கில் 150 கி.மீ டாப் ஸ்பீடில் பறக்கும் ஜிம்க்கி, நேரில் ஸ்லோ ஸ்பீடில்தான் பேசுகிறார். ‘‘ஆயிரம் பொய் சொல்லிக் கல்யாணம் பண்ணலாம்னு சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீங்க... நான் வீட்டில் ஆயிரம் பொய் சொல்லி ரேஸராகிட்டேன்’’ என்று சொல்லும் ஜிம்க்கி, ரேஸரானது சுவாரஸ்யமான விஷயம். குழந்தைகளுக்கு, பொம்மையையோ நிலவையோ காட்டித்தான் சோறு ஊட்டுவார்கள். ஆனால் ஜிம்க்கிக்கு, பைக் சத்தத்தைக் கேட்க வைத்துதான் சோறு ஊட்டுவார்களாம். ``பைக்ஸ் மீது உங்களுக்கு எப்படி லவ் வந்துச்சு?’’ என்பதற்கான பதிலாக இதைச் சொன்னார் ஜிம்க்கி.

``எனக்கு 10 வயது இருக்கும்போது, பைக் வேணும்னு அடம்பிடிச்சேன். என் தொல்லை தாங்க முடியாம, அப்பா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கிக் கொடுத்தார். அதை ஓட்டி சீன் காட்டுவேன். இருந்தாலும், பசங்க பைக் ஓட்டுறதைப் பார்த்து எனக்கும் பைக் ஆசை வந்தது. அப்பதான் என் கஸின் ஜிஜின், பக்கத்து வீட்டு ஃப்ரெண்ட் விஷ்ணு - ரெண்டு பேரும் வகையா சிக்கினாங்க. அவங்கதான் எனக்கு முதன்முதல்ல பைக் ஓட்டச் சொல்லிக் கொடுத்த குருக்கள்.

எப்படா 18 வயசு ஆகும்னு காத்திருந்தேன். எல்லோரும் `ஓட்டுப் போடுறதுக்கா?’னு கேட்பாங்க. `இல்லை. லைசென்ஸ் எடுக்கிறதுக்கு’ன்னு சொல்வேன். 18 வயசு முடிஞ்ச அன்னைக்கே லைசென்ஸ் எடுத்தேன். எனக்கு ஏற்கெனவே பைக் நல்லா ஓட்டத் தெரியும். அதனால, அப்பாகிட்ட புல்லட் வாங்கித் தரச் சொல்லி அடம் பிடிச்சேன். வேற வழி... அப்பா வாங்கித் தந்தார். புல்லட்டில் காலேஜ் போறதே தனி சுகம். அதன்பிறகு ஸ்போர்ட்ஸ் பைக் மேல ஆர்வம் வந்தது. புல்லட்டைக் கொடுத்துட்டு  லேட்டஸ்ட் மாடல் யமஹா R15 V3 பைக்கை ஓட்ட ஆரம்பிச்சேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது ஜிம்க்கி ரேஸ் - ஆயிரம் பொய் சொல்லி ரேஸர் ஆகலாம்!

ரேஸர் ஆகணும்னா, நல்ல ஸ்டெமினா வேணும். லாங் ரைடிங் போக இது ரொம்ப முக்கியம். அதனால, வீட்டுக்குத் தெரியாம லாங் ரைடு போக ஆரம்பிச்சேன்’’ என்று ரேஸர் ஆவதற்கான முயற்சிகள் பற்றிச் சொன்னவர், கோவையில் உள்ள அபெக்ஸ் அகாடமியில்தான் முதலில் ரேஸிங்குக்கான பயிற்சி எடுத்தார். வீட்டில் ஏதோ ஒரு அகாடமிக்குப் போவதாகப் பொய் சொல்லித்தான் தன் சகோதரியுடன் அபெக்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்றுவந்தார் ஜிம்க்கி. `லெவல் 1’ ரேஸிங்குக்காக முதன்முறையாக தன் அம்மாவையும் அழைத்துச் செல்ல, அவருக்கு அப்போதுதான் உண்மை தெரிந்திருக்கிறது. முதலில் பயந்தவர், மகளின் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு ரேஸுக்குச் சம்மதம் தெரிவித்திருக்கிறார். அந்தத் தருணத்திலிருந்து ரேஸிங் மீதான ஜிம்க்கியின் ஈர்ப்பு இன்னும் அதிகமானது.

கலந்துகொண்ட முதல் லெவலிலேயே இரண்டாவதாக வந்து ஃபினிஷ் செய்து பயிற்சியாளர்களையும் அசத்தியிருக்கிறார் ஜிம்க்கி. அதன் பிறகு லெவல் 2, லெவல் 3, லெவல் 4 என எல்லாவற்றிலும் பாசிட்டிவ் ரிசல்ட்ஸ் ஜிம்க்கிக்கு. “அபெக்ஸ் அகாடமியின் அனில் சார், அட்டாமிக் ஸ்போர்ட்ஸின் அஜித் சார் அப்புறம் சித்தாந்த் சார்... ஹரி கிருஷ்ணன் சார், ஜெயன் மோரிஸ் அண்ணா, டிவிஎஸ் ரேஸிங் டீம் எல்லாத்துக்கும் தேங்க்ஸ்’’ என்கிறார்.

``பொண்ணுங்க பைக் ஓட்டினாலே கிண்டல் பண்ணுவாங்க. அதுவும் ரேஸ் ஓட்டினா சொல்லவா வேணும்... எப்படிச் சமாளிச்சீங்க?”

இது ஜிம்க்கி ரேஸ் - ஆயிரம் பொய் சொல்லி ரேஸர் ஆகலாம்!

``எனக்கும் அப்படித்தான். ஏகப்பட்ட பேர் அட்வைஸ் பண்ணினாங்க. `பொண்ணா அடக்கமா இரு; இதெல்லாம் பசங்களுக்குத்தான் செட்டாகும்; உன் முடிவு தப்பானது’னு நிறைய அட்வைஸ். அம்மா-அப்பாகிட்டயும் கம்ப்ளெய்ன்ட். `வீட்லயிருந்து 100 பர்சென்ட் சப்போர்ட் கிடைக்காது’னு சொன்னாங்க. ஆனா, எங்க வீட்ல எனக்கு 101 பர்சன்ட் சப்போர்ட். தேங்க்ஸ் டு மம்மி-டாடி! ரேஸ்ல எனக்கு ரோல்மாடல் யாருனு யாராவது கேட்டா என்ன சொல்வேன் தெரியுமா? என் அப்பாதான்! எல்லோரும் லொரன்ஸோ, ராஸினு நினைச்சுக்கிட்டுக் கேட்பாங்க. ஆனா, எப்பவுமே அப்பாதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவராலதான் நான் ஒரு ரேஸர் ஆனேன்!’’ என்கிறார் அப்பா பெண்ணாக.

லோக்கல் ரேஸ், FJRS 2018 ரவுண்ட் 1, ரவுண்ட் 2 என சில போடியம்களும் ஏறியிருந்தாலும், ஜிம்க்கிக்கு ஸ்டன்ட் பண்ண வேண்டும் என்பதும் நீண்ட நாள் ஆசையாம். ``ரேஸ்ல கீழே விழுந்திருக்கீங்களா?’’ என்று கேள்விக்கு, ``என்னைக்காவது விழாம இருந்திருக்கியானு கேளுங்க. டிராக்கில்  எனக்கு இன்னொரு பேர் இருக்கு. க்ராஷ் கேர்ள்.. இந்தப் பேர் எனக்குப் பொருத்தமானதுதான்’’ என்று விழுப்புண்களைக் காட்டுகிறார் ஜிம்க்கி.

நான் தொடர்பு கொண்டபோதுகூட, `ஸ்பைனல் இன்ஜூரி, அண்டர் பெட் wwரெஸ்ட்’ என்றுதான் மெசேஜ் அனுப்பியிருந்தார் ஜிம்க்கி. 

இது ஜிம்க்கி ரேஸ் - ஆயிரம் பொய் சொல்லி ரேஸர் ஆகலாம்!

சென்ற மாதம் MMRT-ல் நடந்த டிவிஎஸ் சாம்பியன்ஷிப் ரவுண்ட் 2-ல் நடந்த விபத்தில், ஜிம்க்கிக்கு பலத்த அடி. மூன்று மாத ஓய்வு எடுக்கச் சொல்லிவிட்டார்களாம். `லேடி சத்ரியன்’ விஜயகாந்த் மாதிரி வொர்க்-அவுட் பண்ணிக்கொண்டிருந்தார்.

``அடுத்த ரேஸுக்குத் தயாராகணும்ல?’’ என்று தன்னம்பிக்கையுடன் சொல்கிறார் ஜிம்க்கி.

தமிழ் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism